வேத காலமும், மாமிச உணவும், மக்களும்!

      "நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்,  ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, "நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது'ன்னு சொன்னார்.
         அப்ப எம்.ஜி.ஆர். "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு, குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக் கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க'ன்னு சொன்னார்.

இன்றைக்கு  கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க''


      --  என்பதாக ஜெயலிதா சொன்னதை, "மாட்டுக்கறி தின்னும் மாமி நான்"   என்று தலைப்பு வைத்து  போஸ்டர் போட்டு, நக்கீரன் செய்த கட்டுரையானது,தனிநபரின் விமர்சனமாகும்! 


      'விட்டேனா  பார்' என்று அ.தி.மு.க.வினர்,  தமிழகம் முழுக்க  நக்கீரனை எரிக்க, நக்கீரன் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாக.   பதிவு உலகமும் தன் பங்குக்கு, "நக்கீரன் செய்தது சரியா? அ.தி.மு.க.வினர் செய்தது சரியா? " என்று  ஆளாளுக்கு பதிவு எழுத ஆரம்பித்தனர்!   விளைவு?  இது ஒன்றே சூடான விவாதம், பிரச்னை!   இதைதவிர  வேறு ஒன்றுமே பிரச்னை இல்லை!   எனபது போல இணையத்தளத்தில் இடுகைகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது!
       மாட்டு கறிப்  பிரச்னையில் எதிரும் புதிருமாக  ஏராளமான  கமெண்டுகள் இடம் பெற்றன . நக்கீரனின்  விற்பனை சரிவை சரிசெய்ய, நக்கீரன் இந்த பதிவை போட்டது,  விற்பனை சரிவை இந்த பதிவின் மூலம் சரிபடுத்திக் கொண்டது என்று,'பண்ணி குட்டி ராமசாமி' கருத்து கூறி இருந்தார்!   அது உண்மைதான்! என்றாலும்  தரம் தாழ்ந்து இதுபோன்ற செய்தியை,தலைப்பிட்டு வெளியிடுவது பத்திரிக்கை தருமம் அல்ல என்பது எனது கருத்து!   காரணம் உணவு எனபது அவரவரின் வசதி,விருப்பம் சார்ந்தது. !   ஒருவனுக்கு முடிகிறது, பிடிகிறது என்பதற்காக,  " கூழு,கஞ்சி"  குடிப்பதை கேவலமாக சொல்லாலாமா? அப்படித்தானே மாட்டுக்  கறியும்!  


       ஆனால் நக்கீரனின் செய்தி மாட்டுக்கறி உணவை சாப்பிடுவது கேவலமானது என்ற பொருளைத் தந்துள்ளது!    இது மாட்டுக்கறி உணவைச் சாப்பிடும் முஸ்லிம்கள், தாழ்த்தப் பட்டவர்களை நக்கீரனும் கேவலமாக  பார்க்கும் நிலையை காட்டுகிறது! மேலும்,  தீண்டாமை குற்றம் எனும்
இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது!   நக்கீரனின் "தீண்டாமை ஆதரவு"  மனோபாவத்தை காட்டுகிறது!    தவிர,' மாமிகள்', 'மாமாக்கள்', மன்னிக்கவும், பிராமணர்கள் என்பவர்கள் அதனை சாப்பிடவே கூடாதது, அவர்களுக்கு ஆகாதது என்றும் பொருள்படும் வகையில் செய்தி வெளியிடப் பட்டு இருந்தது!   இதுவும் தவறு! 

         காரணம் ,மாட்டு கறியை முதன்முதலில் சாப்பிட்டவர்கள், இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தியவர்கள்,  பிராமணர்கள் தான்!  பிராமணர்கள் என்று  இப்போது சொல்லப் படுகின்ற  இவர்களின்  மூதாதையர்கள்,  ஆன ஆரியர்களே!   இது  முக்காலும் நானறிந்த  உண்மையாகும்!  நான் மட்டும் என்றில்லை, வரலாற்று  ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள், இந்துமத  ஆசாரியர்கள், வேத விற்பனர்கள் பலரும் அறிந்த உண்மையாகும்!  இந்த உண்மையை  மறந்து விட்டதும் கூட... மாட்டுக்கறி செய்தியை நக்கீரன் வெளியிடுவதற்கும், அதை தொடர்ந்து  நிகழ்ந்த சர்ச்சைகளுக்கும்  காரணம் என்பேன்!! 

         பிராமணர்கள்  மாட்டு கறியை  எப்போது வரை  உணவாக  சாப்பிட்டார்கள்,? எந்தெந்த பிராணிகளை எந்தெந்த கடவுளின் பெயரை சொல்லி பலியிட்டு உண்டார்கள்?  அவர்களது வேத நூல்களில் மாமிச உணவு பற்றி  சொல்லாப் பட்டுள்ளவைகள் என்னென்ன? இராமாயணத்தில் பதினான்கு வருடங்கள்  காட்டுக்கு சென்ற, ராமனும் லட்சுமணனும்  வில் அம்பை வைத்து வேட்டையாடிய மிருகங்கள் என்ன?  சாப்பிட்ட மாமிச வகைகள் என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணனும், பாண்டவர்கள், கவுரவர்கள் முதலானோர்  பசு இறைச்சியை புசித்தும்,ருசித்தும் செய்த வேலைகள் என்ன? வேதங்களில் மாமிசம் பற்றிய மகத்துவத்தை சொல்லுபவை எவை?  அர்த்த சாஸ்திரம், மனு தர்மம் ஆகியவைகள் மாட்டு கரியைப் பற்றி சொல்வது என்ன? போன்ற ஏராளமான தகவல்களை  இதுபோன்ற சர்சைகள் எதிர் காலத்தில் தொடரக் கூடாது என்பதற்காக  தொடர்ந்து  இரண்டு,மூன்று பதிவுகளாக  எழுத உள்ளேன்!
          நான் எழுதும் பதிவுகளுக்கு  முன்னுரை இது
!

     பசுவைக் கொல்லும் பொது, 'ஹோதா'  என்ற புரோகிதன் 'அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ 
சமீத்வம்;சமீத்வமத்ரிகா  அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்' (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 7 } என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல்,      கொல், கொல்.   அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து  அடுத்து அதன் சதையை  முப்பத்தி ஆறு பங்குகளாக  பிரித்து வழங்க வேண்டும் என்றும்  இதனை முறைப்படி  உணர்ந்தவன் சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம்  ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்!  யாகத்தில்  பசு கொள்ளப் பட்ட பின்  அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது:

     "மார்பில் இருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுதெடுக்க வேண்டும். பின் கால்களில் இருந்து இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும், முன் கால்களில் இருந்து நம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்,தோளில் இருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும் . இவ்வாறு  அந்த அந்த  அவயங்களில் இருந்து இருபத்தி ஆறு துண்டுகளை  அறுத்தெடுத்த  பின் எல்லாவற்றையும் அறுத்து எடுக்க வேண்டும்! " இப்படி பசுவைக் கொன்று யாகம் நடத்தி, அதனைப் பக்குவமாக  சமைத்து ஆரியர்கள்  அந்த நாட்களில்  உண்டார்கள்! 
   
        ஆடு,மாடுகளுடன் வந்த ஆரியர்களின் பிரமாதமான,பிடித்த,முக்கிய உணவே மாட்டு கறி உணவுதான்!   புத்தரின் கொல்லாமைத் தத்துவத்தை ஜீரணிக்க, புத்த மத வீழ்ச்சிக்கு  பிறகு   ஆரியர்களான  பிராமணர்கள்,  மாட்டு கறியை சாப்பிடுவதை விட்டு ,பால்,நெய்,வெண்ணை,என பின்னாளில்  உருமாறினார்கள்!    
     வேள்விகளில் இன்றும் பலியிடப்படும் உயிர்களில் மாடு முக்கியமானது!  மாட்டை எப்படி பலியிட வேண்டும்,எப்படி அறுக்க வேண்டும், எப்படி எதனுடன் சேர்த்துச் சமைகவேண்டும்என்பதை  இன்றுள்ள திராவிடர்களுக்கு சொன்னவர்களே  ஆரியர்கள்தான்! 

       இதன் தொடர்ச்சியான  பதிவுகள்  வரும்!  

Comments

 1. தெரியாத , அரிய தகவல்கள் ....எதிர்பார்க்கிறேன் அடுத்த பதிவை

  ReplyDelete
 2. நிச்சயம் தொடர் பதிவுகள் உண்டு!

  ReplyDelete
 3. பாராட்டத்தக்க சிறப்பான பதிவு.. எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திவிட்டீர்....

  ReplyDelete
 4. தங்களது எதிர்பார்ப்பு நிறைவேற, இயன்றவரை முயல்கிறேன்!

  ReplyDelete
 5. //காரணம் ,மாட்டு கறியை முதன்முதலில் சாப்பிட்டவர்கள், இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தியவர்கள், பிராமணர்கள் தான்! //

  வேதங்களில் எழுதப்பட்டிருப்பதால் பார்ப்பனர்கள்தான் மாட்டுக்கறியை அறிமுகப்படுத்தினார்கள் என்பது சரியாகாது. எப்படியெல்லாம் வதைக்கவேண்டும் என்பது வேண்டுமானால் அவர்கள் கொண்டுவந்த வரைமுறையாக இருக்கலாம். ஆனால் பண்டைய நாவலந்தீவு மக்கள், ஏனைய ஆதிமாந்தர்கள் போல் மாடுகள் முதலான மிருகங்களை உணவுக்காக வேட்டையாடி உண்டவர்களாகத்தான் இருக்கவேண்டும்.

  மற்றபடி நிரைய விவரங்களைத் தரும் இடுகைகள். தட்டச்சுப்பிழைகளை நீக்கினால் படிக்க இன்னும் எளிதாகும்.

  ReplyDelete
 6. வணக்கம் குலவுசனபிரியன்! ஆதி மக்கள் எல்லோரும் உணவுத் தேவைகாக மிருகங்களை வேட்டை ஆடியது முற்றிலும் உண்மையே! ஆடு,மாடுகளை கூட்டமாக வளர்த்தும், வதைத்தும் கொன்று தின்றவர்களே பிராமணர்கள் என்பதும் இப்போது கொல்லாமை பற்றிப் பேசி மிருகங்களை விட்டுவிட்டு, மக்களை கூறுபோட்டு கொல்லுகிறார்கள்! என்பதற்காக எழுதப் பட்ட பதிவு இது! வங்கியில் இப்போது சேமிக்கப் படும் பணம்,பொன்,பொருள்போல, கால்நடைகளை சேமித்தவர்கள் பிராமணர்களே! மேலும் தொடர்ந்து படித்து வாருங்கள்!
  பிழை இன்றி எழுத முயல்கிறேன்! நன்றி!!

  ReplyDelete
 7. please publish story of mahabaratha about beef eating krishna and pandavas

  ReplyDelete
 8. please publish beef eating story of krishna in mahabaratha

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?