ஊழலைப் போன்றே, வாரிசுகளையும் வளர்க்கும் இந்திய அரசியல்!

           இந்திய அரசியலில் இருந்து அகற்ற முடியாத  இரண்டு விஷயங்கள்  உள்ளன! ஒன்று ஊழல். இன்னொன்று  வாரிசு அரசியல்.  ஊழலை ஒழிக்கும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களுக்கு எந்த அளவு  இருக்கிறது என்பது  லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு சென்ற பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த  மசோதாவில் இருந்தும்  அதற்கு எதிர் கட்சிகள்  புரிந்த எதிர்வினைகளில் இருந்தும் நமக்கு தெரிந்தது. தெரியாதது  அல்லது நாம் தெரிந்தும் அசட்டையாக கண்டுகொள்ளாமல்  விட்டுவிடும் மற்றொன்று  வாரிசு  அரசியலாகும்.  வாரிசு அரசியல் குறித்து  எந்த கட்சிகளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவதில்லை  எனபது  இந்திய அரசியலில் கசப்பான நிஜமாகும்!


                 செல்வாக்கு மிக்கத் தலைவர்கள் பலரும்  தங்களது வாரிசுகளை அரசியலில் திணிப்பது, கட்சி வித்தியாசம் இன்றி,  நடந்து வருகிறது. !   இது இந்திய அரசியலின் எதிர்காலத்தை,இந்தியாவின் முன்னேற்றத்தை கேள்விகுறி ஆக்கும்   செயலாகும்! ஜனநாயகத்திற்கு ஆபத்தான செயலாகும்!  ஆரோக்கியமற்ற இதுபோன்ற  செயல்களை அனுமதிப்பது, ஜனநாயகத்தின்  மீது  பற்றுள்ளவர்கள்  செய்யும் மிகப் பெரிய  தவறு!   ஒரு கார்பரேட் கம்பனி முதலாளி, தனது சொத்துக்களை, நிறுவனத்தை,  தனக்குப் பிறகு  பாதுகாக்கவும், பராமரிக்கவும்  தனது வாரிசை கொண்டுவருவதற்கும்,  ஒரு நாட்டின்  ஆட்சியை,அதிகாரத்தை  தனக்குப் பிறகு தனது வாரிசுக்கு  உரிமை ஆக்குவதற்கும் அடிப்படியில் உள்ள  வேறுபாடு ஆகும்!  தனி நபரின் சொத்தை வேறு ஒருவருக்கு உரிமை ஆகுவதர்க்கும் ,   பொது சொத்தை  தனி நபர்  ஒருவருவருக்கு தரை வார்பதற்கும்    உள்ள முரண்பாடு  போன்றது!


                                                                                                                                                                      ஆசிரியரின் மகன் என்பதாலேயே  ஒருவரை   ஆசிரியர் ஆக்குவது எப்படி தவறோ, ஏற்றுகொள்ள முடியாத செயலோ, அதைப்போலத்தான்  அரசியல்வாதியின் வாரிசு என்பதற்காக  அவரை ஏற்று கொள்வதும் தவறாகும்!  ஜனநாயக நாட்டில் யாரும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டால்,  ஆட்சி அதிகாரத்தில்  அமர்வதில்  தவறென்ன இருக்க முடியும்?  என்று சிலர் வாதிடக்கூடும்!   அரசியல் வாதியின் வாரிசு என்பதால், ஆட்சி அதிகாரத்தில்  உள்ளவரின்  வாரிசு  என்பதால்  அவர்களுக்கு  கிடைக்கும்  வசதிகளும் வாய்ப்புகளும் அதிகம்!   இது  நியாயமாக அரசியல் செய்யவரும்   மற்றவர்களுக்கு கிடைகிறதா? மற்றவர்களின் வாய்ப்புகளை  தட்டிப் பறித்து, மற்றவர்களுக்கு  கிடைக்கும் வாய்ப்புகளை  கிடைக்க விடாமல் தடுத்து  பெறப்படும்  வெற்றியைப் போன்றது!   ஓட்டபந்தயத்தில்  கலந்து கொள்ளும்  போட்டியாளர்களில்  சிலரை மட்டும், " பாதி தூரம்  நீ ஓடினால் பரிசு உனக்குத்தான் " என்று சொல்வதை போன்றது!   வாரிசுகளை  அரசியலில்  வளர்ப்பது  எனபது,  முழு தகுதி உள்ள மற்றவர்களை  புறக்கணிக்கும்  செயல்!  தகுதி உடைய நபர்களை  போட்டியில் இருந்து நீக்கும் கயமை  தனமாகும்!


             பெரும்பாலான  அரசியல் வாரிசுகள்  தகுதி அற்றவர்களாகவும், நேர்மை அற்றவர்களாகவும், ஊழல் பேர்வழிகளாகவும், ஒழுங்கீனம் உள்ளவர்களாகவும்,தேச நலனில் அக்கறை அற்றவர்களாகவும், ஏன்? நமது தேசத்தைப் பற்றியே...  தெரியாதவர்கள்!  ஆகவும்   இருப்பதை  இந்திய அரசியலில் பார்க்க முடியும்!  தமிழகத்தில்  முன்பு ஆண்ட  கட்சியின் வாரிசுகளால் ஏற்பட்ட  இழப்புகள், பறிபோன உரிமைகள், ஒட்டு மொத தேசத்திற்கு ஏற்பட்ட அவமானம் ஆகியவைகள்   சொல்லத் தரமற்றது!   படிக்காத  ராப்ரி தேவியை  நல்லு பிரசாத்  பிகாரில் முதல்வர்  ஆக்கியதும் வாரிசு அரசியலே!  நேரு குடும்பத்தின் வாரிசு அரசியல் உலகப் பிரபலம்! சரத்பவார், ப.சிதம்பரத்தின் வாரிசுகளும் இந்தியா அரசியலில் ஏகபோகமாக  இருந்து வருகின்றனர்!  சமீபத்தில் விமான போக்குவரத்து துறைக்கு  அமைச்சராகிய அஜித் சிங்  கூட   வாரிசு முறையால் அரசியலுக்கு வந்தவர்தான்!  மேலும் விவரிக்க முபட்டால்,கஷ்மீர் ஷேக் அப்துல்லாவின் மகன், ஜகஜீவன் ராமின் மகள்,லால்பகதூர் சாஸ்திரி மகன்,  என்றுஇந்தியா அரசியலில் உள்ள வாரிசுகளின்  பட்டியல் நீண்டுகொண்டே போகும்!


          இத்தகைய  அரசியல் வாரிசுகளால் நமது  தேசத்திற்கு மட்டும் இன்றி, சிறந்த  அரசியல் தலைவர்களுக்கும்  கெட்டபெயரே ஏற்பட்டு வருகிறது!    நமது நாடு,  இந்த வாரிசுகளிடம்   படும் பாட்டைப் பார்த்த பிறகும்,  வாரிசுகளை  ஆதரிப்பது,அரசியலில் வளர்ப்பது   எனபது  நமக்கு நாமே  தோண்டிக் கொள்ளும் புதைகுழி  என்பதே  உண்மையாகும்!   ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் கிளர்ந்து எழவேண்டியது  களத்தின் தேவையாக உள்ளது! ஏனெனில் பெரும்பாலான ஊழல்கள் வாரிசுகளுக்காகவே நடைபெறுகிறது  எனபது நிதர்சனமாகும்!Comments

  1. சிறப்பான பகிர்வு பாராட்டுக்கள் பாஸ்

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?