கல்விக் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

             இன்று கல்வி எனபது வியாபாரம் ஆக்கப் பட்டுவிட்டது! கல்விஎன்பதுகற்றுத் தரும்  கூடம்கள் எல்லாம்  குறுகிய காலத்தில்அதிக லாபத்தை தரும் தொழில் என்ற அளவில் நடத்தப் பட்டு வருகின்றனன்!  உயர் கல்வியானது  இனிமேல் பாமரர்களுக்கும்,அடித்தட்டு மக்களுக்கும்  கிடைக்குமா?எனபது  சந்தகமாக உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த  அண்ணல் அம்பேத்கரோ, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம்  ஆசாதோ,  எதிர்காலத்தில்இதுபோல நடக்கும் என்று நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்! தனியார் நிறுவனங்களின்   தனி உரிமைப் பிரதேசமாக   கல்வித்துறை மாறிவருவது,  இந்திய தேசத்தை  இருளில் தள்ளும் கொடுமையான செயலாகும்.! மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக  கல்வி வழங்குவதையும் அரசு செய்யவேண்டும். தேவையென்றால் அரசியல் சட்டத்தை அனைவர்க்கும் கல்வி வழங்கும் கட்டாய கடமையாக  அரசியல் சட்டத்தில்  தேவையானதிருத்தும்  செய்வது  தவறில்லை!           இப்போதும் அனைவருக்கும் தடையில்லையே, மத்திய,மாநில அரசுகளும் கல்வியை வழங்குகிறதே என்று சிலர்  கேட்கலாம்.! மேலோட்டமாக  பார்த்தால் அவர்கள் சொல்வது சரியாக தோன்றினாலும், உண்மை அதுவல்ல.  மாநிலத்துக்கு ஒரு மாதிரி கல்விஎன்பது  இந்தியர்களை பிரிவுபடுதிப் பார்க்கும்  இன்னொரு செயல் என்பது எனது கருத்து! தவிர  ராஜஸ்தானில் இப்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆட்சியில் இருக்கிறார், இந்துகளின் ஓட்டை பெறவேண்டும்,ஆகவே பகவத் கீதையை  பள்ளிப்பாடமாக போதிக்கிறோம்  என்பது போல,நாளை பிகாரிலே  முஸ்லிம் ஒருவர்  முதல்வரானால்  குரானை  கல்வி திட்டத்தில் சேர்ப்பேன்  என்பார்!  பஞ்சாபிலே  சீக்கியர்களைக் கவர அவர்களது புனித நூலை பாடமாக வைக்கவேண்டும், இப்படியே போனால் என்ன நடக்கும்? இந்தியா ஒரு தேசமாக இருக்குமா? என்று எண்ணிப் பார்க்கவேண்டும்! 


           இப்போது  மாநிலங்களுக்கு இடையில்  எண்ணற்ற பிரச்சனைகள்  நீடித்து வருகிறது. காரணம் ஒரு மாநிலத்தவரின் பிரச்சனையை மற்றொரு மாநில மக்கள்  சரியாக புரிந்து கொள்ளாததுதான்.  புரிந்து கொள்ள  முடியாமல் இருப்பதற்கும், தீர்வுகள் கிட்டாமல் போவதற்கும் கூட அந்தந்த மாநில மக்களின் அறியாமையும்,கல்வியற்ற நிலையம் தான்!


             கல்வியின்மையே  தீமைகளை அதிகம் தேடித் தருகிறது!  சமூகத்தில் குற்றங்களை, அதிகரிக்க செய்கிறது,வறுமைக்கு காரணமாகிறது! தீவிர வாதத்தை வளர்கிறது! பாதுகாப்பற்ற தன்மையை தந்து, பயத்தையும், வெறுப்புணர்வுகளை  மக்களிடம் தோற்றுவிக்கிறது! அரசின் திட்டங்கள்  முறையாக  செயல்படாமல் போவதற்கும்  ஊழல்,கருப்புப்பணம்  ஆகியவைகள் அதிகர்க்க காரணமும்  மக்களின் அறியாமையால் எற்படுபவைகளே!  அறியாமைக்கு காரணம்  கல்விக் குறைபாடும், கல்வி யாழ் அறிவும் விழிப்புணர்ச்சி பெறாமல் இருப்பதுமாகும்!


        இந்தியாவை  உண்மையிலேயே முன்னேற்றம் அடைய வேண்டுமானால், இந்தியர் ஒவ்வொருவரும் கல்வியும் அறிவும் பெற்றாக வேண்டியது அவசியமாகிறது.  கல்வியும் அறிவும் பெற வேண்டுமானால், கல்வியை  அடிப்படை,ஜீவாதார உரிமை ஆக்கி,அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்! தனியார்களை கல்வித்துறையில் அனுமதிக்க கூடாது! தனியார் கல்வி நிறுவனங்களை  அரசே ஏற்க வேண்டும்!  மககளுக்கு தேவையில்லாத  மதுபானக் கடைகளை  நடத்தும்  திறமை உள்ள ஆட்சியாளர்களுக்கு,  கல்விக்கூடங்களை  நடத்துவது ஒன்றும் செய்ய இயலாத  சிரமமான பணியாக  நிச்சயம்  இருக்காது!

Comments

  1. நல்ல பகிர்வு நண்பரே

    ReplyDelete
  2. தங்கள் கரத்துக்கு நன்றி,ராஜ்ஹ!

    ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?