வேத காலமும், மாமிச உணவும், மக்களும்! (பகுதி 4)

                 அர்த்த சாஸ்திரம் குறித்து ஒரு அறிமுகம்!

            அர்த்த சாஸ்திரத்தை எழுதியவராக சொல்லப்படும் சாணக்கியருக்கு வேறு கௌடில்யர்,விஷ்ணு குப்தர்  ஆகிய பெயர்களும் உண்டு!  அர்த்த சாஸ்திரம் பதினைந்து பகுதி உடைய உரைநடை நூலாகும்! ஒவ்வொரு சுலோகமும் முப்பத்தி இரண்டு ஆசைகளுடன் ஆறாயிரம் சுலோகங்களைக் கொண்டது!  அர்த்தா என்பதற்கு மனிதர்களின் தன்மை? என்று பொருள். சாஸ்திரம் என்பதற்கு ஒழுக்கத்தின் மேல் எல்லைச் சட்டம்  என்று பொருள்?  மனிதர்கள் வாழும் நிலப் பகுதியை சேர்த்துக் கொள்வதும் அதைக் காப்பதும் என்பவற்றை அருத்தசாஸ்திரம் எனபது குறிக்கும் என்பர்  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.
       இதில் பெண்களைப் பற்றியும் வஞ்சனையான  யாகங்களை செய்வது ஏன்  அவசியம் என்பது பற்றி  பலவித விமர்சனமான தகவல்கள் உள்ளது!

             மாமிசம் பற்றிய  செய்திகளைப் பார்க்கலாம்:

         அர்த்த சாஸ்திரம் இரண்டாம் அதிகாரம்,அத்தியாயம்  நாற்பத்து ஏழில் மாமிசம் தயாரிப்பது விற்பனை செய்வது குறித்து சட்டமாக குறிப்பிடுவதில் இருந்து  சிலவற்றைப் பார்ப்போம்!

  மிருகம் பசு இவற்றின் இறைசிகளை கொன்றவுடன் விற்பனை  செய்துவிட வேண்டும்!
      (எலும்பு உடையதாக இருப்பின் அதனுள் கலந்து இருக்கும் எலும்புக்கு தகுந்த படி இறைச்சியை   ஈடு கொடுக்க வேண்டும்!)
           இவற்றுள் கன்று,ஆனேறு,பசு இவைகளைக் கொல்ல தகாதன.                 ( கொல்ல  அனுமதிக் பட்ட    பசு இனத்தில், கன்றீனும் பசுவும்,பொலி எருதும் கொல்லக்  கூடாது!   ( காரணம் விருத்திக்கு பதிப்பு ஏற்படும் என்பதால்)

நோயுற்ற  விலங்குகள்,தானே இறந்த விலங்குகள், காட்டில் கொன்று உண்டது போக எஞ்சிய இறைச்சியை,தீ நாற்றமுடைய இறைச்சியை விற்பனை  செய்யக் கூடாது! அப்படி விற்பனை செய்தால் பன்னெண்டு பணம் தண்டமாக தரவேண்டியது இருக்கும்!
  
         எனபது போன்ற  சட்டங்களும் நடைமுறைகளும் இருந்து உள்ளத்தில் இருந்து  யாகத்தில் மட்டுமே பசுகளும், ஏனைய உயிகளும் பலியிட்டு கொள்ளப்படவில்லை, மாமிசம் புசிக்கப் படவில்லை  எப்போதும் எல்லா நேரத்திலும் மாமிசம் உணவாக பயன்படுத்த பட்டு வந்தது என்பதும், விற்பனை செய்யப்பட்டு வந்ததும்  அறியா முடியும்!

          ராமனும் லட்சுமணனும் உண்ட மாமிசங்கள்:

          "  ஸ்ரீராமர் சதா வேட்டையாடிக் கொண்டிருப்பார்.பெரும்பாலும் மான் வேட்டை அவருக்கு பிரியமானது! அவரின் ஆயுதம்  வில்லும் அம்புமாக இருந்தது!"
     ( ஆரிய முசாபிர் பக்கம் 116 .)

                  "ராமரும் லட்சுமணரும் பட்சியை அடித்து கொண்டு வந்தார்கள். மாலையில் அதன் இறைச்சியை புசித்து,ஒரு விருஷத்தின் (மரத்தின்)கீழ் தங்கியிருக்க சென்று விட்டார்கள்! "      ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 52 ,சுலோகம் 102 )

                    " ராமர் லட்சுமனரைப் பார்த்து விரைவாக ஒரு மானை வதைத்துக் கொண்டு வா! ஏனெனில்,சாஸ்திரத்தில் எழுதப் பட்டு இருக்கிறபடி  நாம் செய்ய வேண்டும் என்றார்! லட்சுமணர் இவ்வுத்தரவைப்  பெற்று மானை  வதைத்துக் கொண்டு வந்தார். அதைக் கொண்டு,   "ஹோண்"  செய்து புசித்தார்கள்!"                         ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 56 ,சுலோகம் 24 -26 )

                ராமர் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு சென்றபோது அவருக்கு மது பர்க்கம் வழங்கப் பட்டது!
 
            புதிய இறைச்சியையும் காய்ந்த இறைச்சியையும்  குகன் பரதனுக்கு வழங்கினான்! 

           " பாம்பைப் பொய்கையில் ரோஹிதம்,சக்ரதுண்டம்,நலமீன்கள் ஆகிய பெரிய முள் உள்ள மீன்கள் நிறையக் கிடைக்கும் அவை நல்ல ருசியானவை, அவைகளை வேகவைத்து சாப்பிடுங்கள்"  என்று ராமர்க்கு கபந்தன் சிபாரிசு செய்தார்!!            (செளரி,இந்தியாவின்களையும்,கலாச்சாரமும்,   பக்கம், 105 -107 )

               சீதை தனது குடிலுக்கு வந்த ராவணனிடம், "அந்தண சீலரே ! அதற்குள் எனது கணவர்  பலன்களையும்,   கிழங்குகளையும் , இறைச்சியையும்  எடுத்துக் கொண்டு    இங்கே திரும்பி விடுவார்! தாங்கள் அதுவரை இளைப்பாறுங்கள்   "      என்று உபசரித்தாள்!          (அ.லே. நடராஜன்,வால்மீகி ராமாயணம்,)

                இப்படி பல நிகழ்சிகள் ராமாயணத்தில் ராமனும் லட்சுமணனும் இதர கதாபாத்திரங்களும்  மாட்டு கறியும்,மற்ற இறைச்சியும் உண்டது குறித்து உள்ளான. இன்று  ராமர் மட்டு மல்ல, அவரை வழிபடுவதாக  கூறும்  விஷ்ணு தாசர்கள்  பசுதோல் போர்த்திய புலிகளாக மாறி, பசுவேசம் போடுகின்றனர்!  அதாவது, சாது வேடம் போடுகின்றனர்! 

              அதுமட்டும் இன்றி,  பசுவை கொல்லக் கூடாது,  பசுவதை தடை சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஆளுக்கு தகுந்த படியும், இடத்துக்கு தகுந்தபடியும் பேசியும் வருகின்றனர்!  இவர்களது உண்மையான நோக்கம், பசுக்கள் மேல் இவர்களுக்கு வந்த பசுபாசமோ, பிரியமோ  நிச்சயம் இல்லை என்பதை புரிந்து கொல்ல வேண்டும்,  தாங்கள்  ஆச்சார, பவித்திரமான,  ஒழுக்க சீலர்கள்,    எந்த உயிரையும் கொல்லக் கூடாது  என்ற அஷிம்ஷா வாதிகள்  என்று இப்போது காட்டிக் கொள்ளவும்,  இன்று  மாமிசம் சாப்பிடும், குறிப்பாக மாட்டுக் கறி சாப்பிடும்  ஆதி திராவிட மக்கள் மீதும்,  இந்து மதத்தை வெறுத்து ஒதுங்கி  இஸ்லாம் மார்க்கத்தை  புதிதாக  ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியர், கிருஸ்தவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பு உணர்வும் தான் காரணமாகும்!

               இந்து மதத்தை இந்தியாவின் மதமாகவும், இந்திய நாட்டை இந்துகள் என்று சொல்லும்  இவர்களின் தனி உரிமை சொத்தாகவும் எண்ணிக்கொண்டு  ஆட்டம் போடும் இந்த ஆரியர்களின் வழித் தோன்றல்களுக்கு  தலைவராக  இருந்த டாக்டர் மூஞ்சே 1927 ஆண்டு, அம்பாலாவில் நடைபெற்ற  இந்து மகாசபையிலும், பம்பாயில் நடைபெற்ற சபைக் கூட்டத்திலும் சொல்லி இருப்பதைப் பாருங்கள்!

             "தர்ம சாஸ்திரத்தின் மூலமாக புலால் உண்ணல குற்றம் அல்லது அதர்மம் என்று கூற முடியாது! மேலும்  மாமிசம் புசித்து வருவதால், அவர்களின் அனேக சமூகக் கஷ்டங்கள் நிவர்தியாகக் கூடியதாக இருக்கிறது!"       என்று குறிப்பிட்டு உள்ளார்! 

                 இன்று விவேகானந்தரின் பிறந்த தினம். 

        "வீரத் துறவி" என்று அழைக்கப்படும் விவேகானந்தரை  இந்துமத சனாதானிகள் எப்படி எல்லாம் துன்புறுத்தி,  துரத்தி அடித்தார்கள் எனபது மறைக்கப் பட்டு வருகிறது!  இன்று கன்னியாகுமரி  விவேகானதா பாறை  அவர் தவம் செய்த இடமாக காட்டப் படுகிறது!   புரட்சிகரமாக பேசிய வங்காளத்திலே பிறந்த  நரேந்திரரை, கடலில் கல்லைக் கட்டி  தூக்கிப் போட்டு  கொல்லமுயன்ற  கொடூரங்கள்  மறைக்கப் பட்டுவிட்டது!

                 நமது கவலை அவர் பற்றியது அல்ல..!  பசு பாதுகாப்பு சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு  அவரிடம் உதவி கேட்டு வந்தவருக்கு  அவர் சொன்ன பதில்  குறித்த பகிர்வு இந்த  தொடர் பதிவுக்கு தேவையானது!  எனவே விவேகானந்தரின்,   பசுபாதுகாப்பு சங்கப் பிரதிநிதி  உடனான   புரட்சிகர  உரையாடலை  அடுத்தப் பதிவில் பார்க்கலாம்!

 

Comments

 1. வணக்கம், ஓசூர் இராஜன்.

  உங்கள் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் இங்கு எனது கருத்தை பதிவு செய்கிறேன். முதலில் என்னுடைய வலைத்தளத்தில் நீங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு உடனடியாய் பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

  இன்று எனக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும்,வருத்தமும் ஏற்பட்டன. உங்கள் வலைப்பதிவை படித்தது மகிழ்ச்சியென்றால், இத்தனை நாள் தவறவிட்டமைக்கு வருந்துகிறேன். உங்களின் டிசம்பர் மற்றும் சனவரி பதிவுகளை இப்பொழுதுதான் படித்து பார்த்தேன். பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது என்னுடைய இரசனைக்கேற்றவாறு உங்கள் தளம் உள்ளது. உங்களின் எழுத்து பணிக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நேரம் கிடைக்கும்பொழுது மற்ற பதிவுகளையும் படிக்கிறேன். உங்களின் எழுத்தால் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்த சிறு மடல்.நெடுநாளைக்குப்பின் ஒரு நல்ல வலைத்தளத்தை கண்டுகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது, தொடர்ந்து எழுதுங்கள்.

  நட்புடன்
  சீனிவாசன்

  ReplyDelete
 2. i wish you my dear dravidan this is very useful site.and please publish the details of beef eating krishna and pandavas as soon as possible

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?