வேத காலமும், மாமிச உணவும், மக்களும்! (பகுதி 3)

                     மது பார்க்கம் விருந்து!  

          ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்!  ஆரியர்கள்  'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள்  படித்து இருக்கலாம்!  ஆரியர்கள் பருகியதாக கூறப்படும் சோம பானமும் சுராபானமும் தான்  இன்றைய  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  வெளிநாட்டு மது வகைகளுக்கும், கிராமங்களில் தயாராகும்  உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியான  சாராயம் ஆகியவைகளுக்கு எல்லாம் முன்னோடியும் மூத்ததும் ஆகும்!

            இந்த சோம பானம்,சுராபானம்  ஆரியர்களான  பிராமணர்கள்  ஆண், பெண் பேதமின்றியும், வயது,உறவு வித்தியாசம் இன்றியும் பருகி வந்தார்கள்! ( அது என்ன நம்ம அரசாங்கம் விற்பனை செய்யும் டாஸ்மாக்  மதுவா? குடித்தார்கள் என்று சொல்ல?)     அதுவும்  ஆடு, மாடு  என்று கண்டதையும்  கொன்று...  கறியாக்கி,விதவிதமாக  சமைத்து அவற்றை  சாப்பிட்டும்  அதீத,  "ஆரிய தயாரிப்பான"   சோமபானம்,சுராபானத்தை  பருகினார்கள்! 

        மதுபர்க்கம்  விருந்தைப் பாப்போம்

               பதினெட்டு சூத்திரங்களில் ஒன்றான ஆஸ்வலாயண சூத்திரத்தின் பிரிவான   கிருஹஜ்ய  சூத்திரம் முதல் அத்தியாயம், 24 -வது கண்டிகையில் மது பார்க்கம் கொடுக்கும் முறைகள் சொல்லப்பட்டு இருக்கிறது.

     " யாகம் செய்வதற்கு ரித்விக் வீட்டிற்கு வந்தால் அவனுக்கு மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "( 1 - 24 - 1 ) 


    " மணமகன் வீட்டிற்கு வந்தபோதும்  மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "  ( மணமகனுக்கு மதுபர்க்கம் கொடுத்தால் பொண்ணு நிலைமை என்னாவது? என்று கேட்க கூடாது)

 "அரசனுக்கும் மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "(1 - 3 )

" குரு, பெண்கொடுத்த மாமனார், சிற்றபபன் வீட்டிற்கு வந்த காலத்துக்கும் பத்து பார்க்கம் கொடுக்க வேண்டும்! "

                        சரி உறவு முறையில் உள்ளவர்களுக்கு சாராயம் வாங்கி கொடுப்பதில் என்ன தப்பு ? என்று கேட்கலாம்!  தமிழர்களின் நாகரீகம் கலாச்சாரம், உறவைப் பேணுதல், மதிப்பு தருதல்  ஆகிய அனைத்துக்கும்  எதிரானது, கட்டுப்பாடு அற்ற,  காட்டு மிராண்டித்தனம் கோடானது,  ஆரியர்களான  பிராமணர்களின் வாழ்க்கையும், உறவு முறைகளும் என்பதை  குறிப்பிடவே இதனை கூறுகிறேன்!

 போகட்டும்  மதுபர்க்கம்  எப்படி கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

           குரு முதலானவர்கள் முதலில் நீரை கொடுத்து முகம் கழுவ செய்து விட்டு, பிறகு மது பார்க்கம் கொடுக்கப் பட இருக்கும் பசுமாட்டை அவர்களுக்கு நிவேதனமாக( ஒப்புவித்தல்,கொடுத்தல்) பண்ணவேண்டும்!  அவர்களுக்கு முன்னால் நிறுத்த வேண்டும்   (23 )  பிறகு, "ஹதோம பாப்மா மேஹத"  என்ற மந்திரத்தை சொல்லி அந்த பசுவை வீட்டிற்கு உரியவன் கொல்ல வேண்டும்! 
 
           இப்படி மாமிசமாக்கிய பசுவை கொண்டு,  மது பார்க்கம் கொடுக்கப் படுகிறது!  காரணம்,  "மாமிசம் இல்லாமல் மது பார்க்கம் முடியாது"  என்று கிருஹஜ்ய  சூத்திரம் இருபத்தியாறு சொல்லுகிறது!    இப்படி கொல்லப்பட்ட பசுமாடு, அல்லது  எருது இவைகளின் இறைச்சியை நெய்யில் வருது, தேன் விட்டு பிசைந்து, உருண்டை  செய்து விருந்தினருக்கு  படைப்பதே  மது பர்க்கமாகும்!
            மதுபர்க்கம்  விருந்தை  பற்றி  தெரிந்து கொண்ட  உங்களுக்கு....  அதன் சுவைஎப்படி இருக்கும்? என்று  கற்பனை வருவதும்,சாப்பிடும் ஆசை வருவதும்  இயற்கைதான்!  ஆனால்  அந்த கொடுப்பினை எல்லாம்  நமக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை! 

            ராமனும், லட்சுமணனும் மது பார்க்கம் கொடுத்து இருகிறார்கள்!  முனிவர்களைக் கண்டதும் விரைந்து எழுந்து வணங்கி,பாத்யம்,அர்க்கியம் முதலியவைகளால் பூஜித்து, விதிப்படி  பசுமாட்டை நிவேதித்து, கொடுத்ததை  அத்யாத்ம ராமாயணம்,உத்தர காண்டம் சொல்கிறது!

           " எந்த பசு கொல்லப்  பட்டதோ  அதன் இறைச்சியை சமைத்து பிராமணர்களுக்கு படைக்க வேண்டும் "(2 .5 . 2 )என்று  "அஷ்டகா விதானம்"  சொல்லுகிறது!    இந்த அஷ்டகா விதானம்  குறித்து, அதாங்க ...பசுவை எப்படி கொல்ல வேண்டும் ?எந்த மந்திரத்தைச் சொல்லி கொள்ளவேண்டும்? என்கிற வழிமுறையை,   கிருஹஜ்ய  சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் நான்காவது  கண்டிகையில் சொல்லப் பட்டு உள்ளது! 

மது பார்க்கம் இருக்கட்டும், மற்ற வேதங்கள், அர்த்த சாஸ்திரம், மனுதர்ம நூல்கள் சொல்லவதை  அடுத்து பார்க்கலாம்!Comments

  1. பல முறை படித்த பின்தான் புரிஞ்சுது சகோ

    ReplyDelete
  2. நன்றி ராஜி, கொஞ்சம் கடினமான,எளிதில் ஜீரணிக்க முடியாத இறைச்சி குறித்த பதிவு தானே?

    ReplyDelete
  3. புரிஞ்சுது சகோ good

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?