Posts

Showing posts from January, 2012

பார்பனீயமும் பெண்களின் நிலையும்!

   பார்பனீயம்  கீழ் சாதி மக்களை  அடக்கி,அடிமைப் படுத்தி வந்ததைப் போலவே பெண்களையும் அடிமைப் படுத்தி அவர்களது வாழ்க்கையை அமைத்து இருந்தது! இந்த நிலை, சமூகத்தின் எல்ல வர்ணப் பெண்களுக்கும்  இருந்தது. பிராமணர்களின்  பெண்களும்  அடிமைபடுத்தப்பட்டு, அவலமான வாழ்க்கையே வாழ்ந்தனர். காரணம்,பிராமணர்களின் மனைவிமார்கள் பெரும்பாலோர் திராவிடர்களாக இருந்ததுதான். மவள் சாதிப் பெண்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் சூத்திரர்களைப்  போலவே   விதிக்கப் பட்டு இருந்தது!
            பெண்களைக் குறித்து இவர்களின் மனு தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி  காப்பியங்கள்  ஆக கூறப்படும் ராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளும் இதர புராணங்களும் மிகவும் மோசமான சித்தரிப்புகளை செய்து இருந்தது!
          " மாதர்கள்  கற்பு நிலை இன்மையும்,நிலையா மனமும்,நன்மின்மையும் இயற்கையாக உடையவர்கள்"( மனுதர்மசச்திரம் 9 :15 ) என்று கூறியது.


            "கணவன் சுதாடுகிறவனாக இருந்தாலும்,குடியனாக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தினால் பணிவிடை செய்யாவிட்டால்,  அவளுக்கு அலங்காரம்,துணிமணிகள்,படுக்கை இவற்றைக் கொடாமல், மூன்று மாத…

பார்ப்பனீயத்தின் பயங்கர ஒடுக்குமுறைகள்!

பார்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை  இப்போது படிப்பவர்கள், கேள்விப் படுபவர்கள்  அதிர்ச்சி அடையலாம்  அல்லது எப்போதோ நடந்ததுதானே?  என்று அலட்சியமாக நினைக்கலாம்.. பொதுவாக,  அடக்கி ஒடுக்கப் படும் ஆளும் வர்கங்களின் கொடுமைகள்  குறித்து  எல்லோராலும் சொல்லப் படும்   விமர்சனம் என்றும் நினைக்கலாம் . இவைகள் யாவும் ஓரளவு உண்மையாக இருந்தபோதிலும்  இவைகளுக்கு மேலே  பயங்கரமான ஒடுக்குமுறையாக  உள்ளது பார்பனிய ஒடுக்குமுறை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்!
          ஒரு குறிப்பிட்ட காலஎல்லை  அளவு கொண்டதோ, பாதிப்புகளை ஏற்படுத்துவதோ போன்ற  ஒடுக்குமுறை அல்ல பார்ப்பனீய ஒடுக்குமுறை.!        அது ,  பல  நூற்றாண்டுகளாக, பாரம்பரியமாக, வாழையடி வாழையாக, தலைமுறை  தலைமுறையாக  தொடர்ந்து உழைக்கும் மக்களை  ஒடுக்கி வரும்  பயங்கரமாகும்.    தண்டித்து வரும் ஒடுக்குமுறை  ஆகும். !  இன்றும் பல்வேறு வடிவங்களில்,  பல்வேறு பரிணாமங்களில்  நீடித்து வரும் பயங்கரமாகும்! 
              சாதிவாரியாக தெருக்களை அமைத்தனர் . ஒவ்வொரு தொழில் செய்வோரும் தனித்தனிப் பகுதிகளாக வாழ்ந்தனர்  என்று முன்பே நான்   குறிப்பிட்டு உள்ளதை  நினைவில் வைத்து, க…

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பிராமணீயம்!

    இந்தியாவானது  ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு முன்புவரை எப்படி இருந்தது என்றுபார்த்தால், பல்வேறு சமூகங்களாக, பிரிந்து கிடந்தது. பல்வேறு மன்னர்கள்.குறுநில மன்னர்கள்,சமஸ்தானங்கள் என்று பிளவு பட்டு இருந்தது  என்பது  வரலாறு. இப்படி இந்தியா பல பிரிவுகளாக இருந்தபோதும்,இத்தகைய பிரிவுகள் அரசியல் ரீதியான  பிளவாக இருந்தது. மற்றபடி இந்திய சமூகங்களின் கலாச்சாரம்,பொருளாதாரம்,மதம் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றே போல இருந்துவந்தது!
         இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வந்ததால், விவசாய நிலங்களும் கிராமங்களும் மன்னரது உடமையாகும். விவசாயம் செய்யும் மக்கள் விளைச்சலில் மூன்றில்  ஒரு பங்கை  அரசுக்கு இறையாக செலுத்தி வந்தனர்.விலை நிலங்கள் தொடர்பான  கணக்குகள், விவசாயிகளின்  இறை செலுத்தும் கணக்குகள் அனைத்தையும் பரமரிப்பவர்களாக இருந்தவர்கள் பெரும்பாலோர்  பார்பனர்களே! 
          மன்னர்கள் சார்பாக நில உடைமைகளைப் பராமரிக்கும் கிராம அதிகாரிகளான  பார்பனர்களை " படேல், மணியகாரர்,கர்ணம்,"  என்று அழைத்து வந்தனர்.    இவர்களே...  அரசனுக்கும் விவசாயிகளுக்கும் இடையில்  இருந்து வந்தத…

பார்பனீயம் என்னும் பயங்கர பாசிசம்-ஒரு விளக்கம்!

  பார்ப்பனீய பயங்கரத்தைப் பற்றி தெரிந்துகொல்லுவதற்கு முன்  நாம் முதலில்  பயங்கரவாதம் என்ற  பாசிசத்தைப் பற்றித்  தெரிந்து கொள்ளுவதும்,அதுகுறித்த விழுப்புணர்வு கொள்வதும் அவசியம் என்று கருதுகிறேன். 

    " பாசிசம் "எனபது உழைக்கும் மக்களின் நியாயமான போராட்டங்களை, உரிமைப் புரட்சிகளை அடக்கவும்,ஒடுக்கவும் அதிகார வர்க்கம் என்ற ஆளும் வர்க்கங்கள்  அவிழ்த்து விடும் ஒரு வெள்ளை பயங்கரவாதம் எனலாம். பாசிசத்தை நிதி மூலதனத்தின் பயங்கரமான,பகிரங்கமான ஆட்சியியல் என்றும் கூறலாம்.


         இந்த பாசிசம் எனபது,உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை, அதாவது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக  எழும் புரட்சியை, புரட்சி இயக்கங்களை  எதிர்க்கும்  பல்வேறு நடைமுறைகளைக் கொண்ட "எதிர் புரட்சி" என்பதன் கட்டமைப்பு தத்துவமே " பாசிசம் "என்கிறார்கள்!

         இத்தகைய பாசிசத்தின் மூலமாகவும்,ஆணிவேராகவும் அழிக்கவும்,எவராலும் எதிர்கொள்ள முடியாததும் ஆன பயங்கரவாதமே,பயங்கரவாத தத்துவமே," பிராமணீயம்"  என்ற பார்ப்பனீய  பாசிசமாகும்!

        இப்படி சொல்லுவதற்கு என்ன காரணம் என்றால், பாசிசம் எனப…

பிரம்ம ஞானமும் பார்பனிய சாகசங்களும்!

   "யக்ஜவல்கியரே  இந்த உலகம் நீரில் இரண்டற  கலந்திருக்கிறது. நீர் எதில் இரண்டற கலந்திருக்கிறது?"

 "காற்றில் கலந்திருக்கிறது -கார்க்கி"


"காற்று எதிலே இரண்டற கலந்திருக்கிறது?"


"அது வானவெளியில் இரண்டற கலந்திருக்கிறது. மேலும்,கேள் கார்க்கி..,கந்தர்வலோகம் ,சூரியலோகம்,சந்திரலோகம்,நட்சத்திர உலகம்,தேவலோகம்,இந்திரலோகம்,பிரஜாபதி உலகம்,பிரம்மலோகம்  இவைகளில் முன்னது பின்னதில்  இரண்டற கலந்திருக்கிறது"


"பிரம்மலோகம் எதிலே இரண்டற கலந்திருக்கிறது?"


"கேள்வியின் எல்லையைத் தாண்டி போகாதே. போனால்  உன் தலை கீழே விழுந்து விடும். கேள்வியின் எல்லையைக் கடக்க முடியாத தேவனைப் பற்றி  நீ அதிகம் பிரஸ்தாபித்து, ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்"


       ஜனகரின் சபையில்   (அதாங்க நம்ம.. ராமர் கடவுளோட மாமனார் ) பிரம்மஞானம் பற்றிய விவாதத்தில் நடந்த நிகழ்ச்சி மேலே கண்ட கேள்வியும் பதிலும்.


        புத்தரின் கொள்கைகளைக் கண்டு பயந்து  பார்பனீயம் பிரம்மஞானதுக்குள் புகுந்து கொண்டது. என்றாலும் நால்வருண கொள்கைகளை நியாயப் படுத்தவும், அதனை எல்லோரும் சரி என்று ஏற்றுக் கொள…

புத்தரின் கொல்லாமைத் தத்துவமும், இந்துமத எதிர்ப்பும்!

இந்துமதம் எனபது உலகில் தோன்றி உள்ள எல்லா மதங்களுக்கும் எதிரானது மட்டுமல்ல  ஒரு இனத்தின் நலனை உத்தேசித்து மற்ற  இனங்களை அடிமைபடுத்தியும்,அடக்கி ஒடுக்கி  ஆளவும், உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் பயங்கரவாதம் எனலாம்! இந்து மதத்தை  வேறு மொழியில்  விளக்குவதானால், அது ஒரு பார்ப்பன பாசிசம், பார்ப்பன பயங்கரவாதம், பாசிசத்தின் ஆணிவேர்  எனலாம்!

            இந்த பார்பனிய பாசிசத்தை எதிர்த்த  அணித்து மக்களும், பகுத்தறிவாளர்களும், லோகாயுத வாதிகளும் பன்னெடுங்காலம் போராடி வந்துள்ளனர்! ஆயினும் பார்பனிய பயங்கரவதத்தை இன்றுவரை  வெற்றிகொள்ள முடியவில்லை எனபது கசப்பான உண்மையாகும்! பார்ப்பனிய பயங்கரகரத்தை எதிர்த்து போராடிய தத்துவங்களில் வைஷெசிகம், நியாயம்,சாங்கியம்,யோகம்,உத்திர மீமாம்சம்,பூர்வ மீமாம்சம்,ஆகியவை முக்கியமானவைகள்!     இவைகளையே .. இந்திய லோகாயுதவாதத் தத்துவங்கள் என்று அழைகிறார்கள்!   இந்த தத்துவங்களின் சாரத்தை  {சுருக்கமாக} கீழே பாருங்கள்.

  சொர்க்கம் என்பதும் மோட்சம் என்பதும் வெறும் பேச்சு,

       மறு உலகத்துக்கு போவதாக  கற்பனை செய்துகொள்ளும் ஆத்மா-உயிர் என்று எதுவும்…

எது தேசபக்தி ? அவசரமாக அலசப்படும் விஷயம்!

   இந்த நாட்டில் சிலர்  நூறு சதவீத  தேச பக்தியுடன் இருப்பதை பார்த்து வியந்து போகிறேன்!   தேச பக்தி  என்பதற்கு   அவர்கள் கூறும் அடிப்படை தகுதி  என்னவென்று பார்த்த பொது,"தேசபக்தர்கள்" என்போரிடம்  சில குறிபிடத்தக்க   ஒற்றுமை குணங்கள்,இருப்பதைப்  பார்த்தேன்!

       தேச பக்தர்களாக இருப்போருக்கு முதல்தகுதி,  முதலில் அவர்  இந்துவாக  இருக்கவேண்டும் என்பதுதான்!  அப்படியே இந்துவாக இருந்தாலும்  அவர்,   இந்து மதத்தைப் பற்றி எந்தவித  விமர்சனமும்  அதுவும் எதிர்மறையான விமர்சனமும் செய்யாதவராக  இருக்கவேண்டியது  அவசியமாக இருக்கிறது,!


           இந்தியாவில் பிறந்த,வேற்று மததினரர்  யாரும், தங்களுக்கு  தேசபக்தி இருக்கிறது என்று சொன்னால்  அவர்கள் வேஷம் போடுகிறார்கள்,ஏமாற்றுகிறார்கள்  என்று எள்ளி நகையாடப் படுவர்!   அதேபோல  இந்துமதத்தை , அல்லது இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்யும்  இந்துகளுக்கு, நாத்திகர்களுக்கு  கொஞ்சமும் தேசபக்தி  இருபதாக  கருதுவது  முட்டாள் தனமாகும்! 

            அதேபோன்று,    தேசபக்தி உள்ளவர்கள்  தங்களது  மொழி குறித்தோ, மாநிலங்கள் குறித்தோ, மாநிலங்களுக்கு இடைய…

விவேகானந்தரும் பசுபாதுகாப்பு சங்க பிரமுகரும்!

ஸ்ரீ சரத் சந்திரர்  தன்னை போன்றே  ராமகிருஷ்ணரின் சீடரான விவேகானந்தர் அவர்களை சந்திக்க வந்திருந்தார். சந்திப்பு விவேகானந்தர் தங்கி இருந்த ஸ்ரீ பிரியநாத் முகர்ஜி என்பரின் வீட்டில் நிகழ்கிறது! 

     விவேகானந்தர் அவர்களை சந்திக்க கோ சம்ரஷ்ண சங்க பிரசாரகர்  வருகிறார்! இருவர்க்கும் உரையாடல் நடக்கிறது!


 விவேகானந்தர்: உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?


பிரசாரகர் : நாங்கள் எங்கள் கோமாதா  க்களைக் கசாப்புக் காரர்கள் வாங்கிவதைபுரியா வண்ணம் பார்ப்பதும்,நோயுற்றும் கிழமாயும்   அங்க ஈனமாயும் உள்ள பசுக்களைக் காப்பாற்று கிறோம் .


விவேகானந்தர்: இது சிறந்த நோக்கந்தான்.உங்கள் வருமான வழிகள் எவை?


பிரசாரகர் : தேவரீரைப் போன்ற காருண்யா சீலர்கள் அளிக்கும் கொடைப் பொருளைக் கொண்டு மேற்படி வேலை நடைபெற்று வருகிறது!


விவேகானந்தர்: உங்களிடம் இப்போதுள்ள மூலதனம் எவ்வளவு?


பிரசாரகர்: மார்வாரிகளின் வர்த்தக மரபினர்களே இச்சபையின் போஷகர்கள்.அவர்கள் ஏராளமாக பொருளுதவி புரிந்துள்ளார்கள்!


விவேகானந்தர்:  மத்திய இந்தியாவில் மிகக் கொடிய பஞ்சம் மக்களைக் கொள்ளை கொண்டு போகிறது. இந்திய அரசாங்கத்தார் பட்டினியால் இறந்தவர்களின் தொகை 900000  என்று வெளிய…

வேத காலமும், மாமிச உணவும், மக்களும்! (பகுதி 4)

அர்த்த சாஸ்திரம் குறித்து ஒரு அறிமுகம்!            அர்த்த சாஸ்திரத்தை எழுதியவராக சொல்லப்படும் சாணக்கியருக்கு வேறு கௌடில்யர்,விஷ்ணு குப்தர்  ஆகிய பெயர்களும் உண்டு!  அர்த்த சாஸ்திரம் பதினைந்து பகுதி உடைய உரைநடை நூலாகும்! ஒவ்வொரு சுலோகமும் முப்பத்தி இரண்டு ஆசைகளுடன் ஆறாயிரம் சுலோகங்களைக் கொண்டது!  அர்த்தா என்பதற்கு மனிதர்களின் தன்மை? என்று பொருள். சாஸ்திரம் என்பதற்கு ஒழுக்கத்தின் மேல் எல்லைச் சட்டம்  என்று பொருள்?  மனிதர்கள் வாழும் நிலப் பகுதியை சேர்த்துக் கொள்வதும் அதைக் காப்பதும் என்பவற்றை அருத்தசாஸ்திரம் எனபது குறிக்கும் என்பர்  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.
       இதில் பெண்களைப் பற்றியும் வஞ்சனையான  யாகங்களை செய்வது ஏன்  அவசியம் என்பது பற்றி  பலவித விமர்சனமான தகவல்கள் உள்ளது!

மாமிசம் பற்றிய  செய்திகளைப் பார்க்கலாம்:

         அர்த்த சாஸ்திரம் இரண்டாம் அதிகாரம்,அத்தியாயம்  நாற்பத்து ஏழில் மாமிசம் தயாரிப்பது விற்பனை செய்வது குறித்து சட்டமாக குறிப்பிடுவதில் இருந்து  சிலவற்றைப் பார்ப்போம்!

மிருகம் பசு இவற்றின் இறைசிகளை கொன்றவுடன் விற்பனை  செய்துவிட வேண்டும்!
      (எலும்பு உடையதாக இர…

வேத காலமும், மாமிச உணவும், மக்களும்! (பகுதி 3)

  மது பார்க்கம் விருந்து!  

          ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்!  ஆரியர்கள்  'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள்  படித்து இருக்கலாம்!  ஆரியர்கள் பருகியதாக கூறப்படும் சோம பானமும் சுராபானமும் தான்  இன்றைய  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  வெளிநாட்டு மது வகைகளுக்கும், கிராமங்களில் தயாராகும்  உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியான  சாராயம் ஆகியவைகளுக்கு எல்லாம் முன்னோடியும் மூத்ததும் ஆகும்!

            இந்த சோம பானம்,சுராபானம்  ஆரியர்களான  பிராமணர்கள்  ஆண், பெண் பேதமின்றியும், வயது,உறவு வித்தியாசம் இன்றியும் பருகி வந்தார்கள்! ( அது என்ன நம்ம அரசாங்கம் விற்பனை செய்யும் டாஸ்மாக்  மதுவா? குடித்தார்கள் என்று சொல்ல?)     அதுவும்  ஆடு, மாடு  என்று கண்டதையும்  கொன்று...  கறியாக்கி,விதவிதமாக  சமைத்து அவற்றை  சாப்பிட்டும்  அதீத,  "ஆரிய தயாரிப்பான"   சோமபானம்,சுராபானத்தை  பருகினார்கள்! 

மதுபர்க்கம்  விருந்தைப் பாப்போம்

             …

வேத காலமும், மாமிச உணவும், மக்களும்!

சென்ற  பதிவின்  தொடர்ச்சி....
       வேதங்கள் நான்கில் இரண்டாவதாக சொல்லப்படும் யஜுர் வேதம்  தத்வமஸி என்னும் தத்துவங்களை அறிந்து கொள்ள உதவுவது என்று வேதாந்திகள் கூறுவர்.   கிருஷ்ண யஜுர்,சுக்ல யஜுர் என்று இரண்டு யஜுர் வேதங்கள் உள்ளன. இதில் கிருஷ்ண யஜுர் வேதம் ஆறாவது காண்டத்தில் பலிவிசயம்,தட்சணை சோம யாக  விளக்கம் ஆகியவைகள் கூறப்பட்டுள்ளது!

            யஜுர் வேதத்துக்கு முக்கியமாக,ஆதாரமாகவும் திகழ்வது சதபத பிரமாணம். உபநிஷமாக விளங்குவது பிரஹதாரணம் (Brihadaranya Kopanised )  இதனையே பிரம்ம ஞானம்,தத்துவ ஞானம் என்று என்று சங்கரர் கூறுகிறார்.   உபநிஷங்களுக்கு அந்தரங்கம், ரகசியம்,ஞானம்,பிராத்தனை என்று பலபொருள் உள்ளது!

           இவைகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளது                                   .இ.  சம்பந்தாசாரியார் 108 என்று ஜே.பி.ரோட்டலர் மேலும் 17 -சேர்த்தும்  எ.வேபர் என்கிற சம்ஸ்கிருத அறிஞர் 235 - என்றும்,சுவாமி சின்மயானந்தர் 238 - உபநிஷங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்!

      இவைகளில்  பிரஹதாரண  உபநிஷம் சிறந்த பொருள்களை கூறுவதாகவும்,அளவில் பெரியதாகவும் அதனாலேயே
  "…

வேத காலமும், மாமிச உணவும், மக்களும்!

"நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்,  ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, "நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது'ன்னு சொன்னார்.
         அப்ப எம்.ஜி.ஆர். "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு, குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக் கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்…

ஐ.நா -சபையும் வீட்டோ அதிகாரமும் !

Image
ஐ.நா -சபைக்கு  என்று தனி கட்டிடம் கட்டும் தீர்மானம்  1946 -லில் லண்டனில் நடந்த பொதுகூட்டத்தில் முடிவானது! ஐ.நா -சபை கட்டுவதற்கு அமெரிகாவின் பிலடெல்பியா,பாஸ்டன்,சான்பிரான்சிஸ்கோ  போன்ற நகரங்கள் பரிசிளிக்கப் பட்டது! இறுதியில் நியுயார்க்கில் கட்டுவது என்று முடிவு எடுக்கப் பட்டது!   நியுயார்க்கில் உள்ள மன்ஹாட்டன்  தீவில்  அமெரிக்காவின்  பெரிய கோடீஸ்வரரான  ஜனதாக் பெல்லர் என்பவரின் பிரமாண்டமான பங்களாவை அவர்  65 லட்சம் டாலருக்கு கொடுபதாக கூறவே, அந்த இடத்தை ஐ.நா.வாங்கியது!             ரஷியா,கனடா,பெல்ஜியம்,பிரான்ஸ்,சீனா,சுவீடன்,பிரேசில்,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,உருகுவே,போன்ற நாட்டின் பிரபல கட்டிட வல்லுனர்கள் கோடா ஆலோசனைக் குழு  அமைக்கப் பட்டு, 650 -லட்சம் டாலரில் கட்டுவதற்கு திட்டம் தயாரானது! அமேரிக்கா இந்த பணத்தை வட்டி இல்லாத கடனாக  ஐ.நா -சபைக்கு கொடுத்தது! பதினெட்டு ஏக்கர் அமைந்துள்ள,உயரமான கட்டிடமான ஐ.நா -சபை 24 . 10 .1949 -கட்டி முடிகப்பட்டு திறக்கப் பட்டது!  அமெரிக்காவின் கடனை 1962 யில்   ஐ.நா செலுத்தி விட்டது!


              அமரிக்க நாட்டில் இருந்தாலும் ஐ.நா -சபைக்கு அமேரிக்கா…

ஊழலைப் போன்றே, வாரிசுகளையும் வளர்க்கும் இந்திய அரசியல்!

Image
இந்திய அரசியலில் இருந்து அகற்ற முடியாத  இரண்டு விஷயங்கள்  உள்ளன! ஒன்று ஊழல். இன்னொன்று  வாரிசு அரசியல்.  ஊழலை ஒழிக்கும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களுக்கு எந்த அளவு  இருக்கிறது என்பது  லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு சென்ற பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த  மசோதாவில் இருந்தும்  அதற்கு எதிர் கட்சிகள்  புரிந்த எதிர்வினைகளில் இருந்தும் நமக்கு தெரிந்தது. தெரியாதது  அல்லது நாம் தெரிந்தும் அசட்டையாக கண்டுகொள்ளாமல்  விட்டுவிடும் மற்றொன்று  வாரிசு  அரசியலாகும்.  வாரிசு அரசியல் குறித்து  எந்த கட்சிகளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவதில்லை  எனபது  இந்திய அரசியலில் கசப்பான நிஜமாகும்!


                 செல்வாக்கு மிக்கத் தலைவர்கள் பலரும்  தங்களது வாரிசுகளை அரசியலில் திணிப்பது, கட்சி வித்தியாசம் இன்றி,  நடந்து வருகிறது. !   இது இந்திய அரசியலின் எதிர்காலத்தை,இந்தியாவின் முன்னேற்றத்தை கேள்விகுறி ஆக்கும்   செயலாகும்! ஜனநாயகத்திற்கு ஆபத்தான செயலாகும்!  ஆரோக்கியமற்ற இதுபோன்ற  செயல்களை அனுமதிப்பது, ஜனநாயகத்தின்  மீது  பற்றுள்ளவர்கள்  செய்யும் மிகப் பெரிய  தவறு!   ஒரு கார்பரேட் கம்பனி முதலாளி…

கண்ணதாசனின் சிந்தனைக் குழப்பத்தில் செழித்த கவிதைகள்!

Image
இருபதாம் நூற்றாண்டில் சினிமா,இலக்கியம்,அரசியல்,ஆன்மீகம்  போன்ற பலதுறைகளில்  தாக்கத்தை ஏற்படுத்திய  தமிழ் படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவர்களில்  முதன்மையானவர்,கவியரசு கண்ணதாசன் என்பது எனது கருத்தாகும்! நான் அதிகம் படித்த கதைகள்,கவிதைகள்  கண்ணதாசனும் எழுத்தாளர் சுஜாதாவும் எழுதியவைகள்தான்! இவர்களது எழுத்துக்களை எனது பள்ளி,கல்லூரி காலங்களில்,  வாசித்தேன் என்பதைவிட சுவாசித்தேன் !என்று கூறுவது  பொருத்தமாக இருக்கும்! அப்படி ஒரு ஈர்ப்பும்,லயிப்பும்  இவர்களது எழுத்துகளின் மீது எனக்கு இருந்தது!


             ஒருவர் மீது அதிக ஈடுபாடும்,பிரியமும் நமக்கு இருந்தால்,அவர்களது குறைகள்,தவறுகள் கூட நமக்கு தெரியாது என்று சொல்லுவார்கள்! சுஜாதாவைப் பற்றி,கண்ணதாசனைப் பற்றி யாரவது தவறாக விமர்சித்தால்,பேசினால் எனக்கு   கோபம்வரும்! என்னைக் கோபபட வைக்கவும்,ஆத்திரமூட்டி,கிண்டல் செய்யவும் நினைக்கும் எனது நண்பர்கள்,தேவையே இன்றி பேச்சினூடே   கண்ணதாசனை பற்றி  விமர்சிப்பார்கள்! அவர்களுக்கு பதில் சொல்லுவதற்கு என்று  இன்னும் ஆழமாகவும், சிந்தனையுடனும்  அவர்களது படைப்புகளை படிக்க ஆரம்பித்து …

கல்விக் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

Image
இன்று கல்வி எனபது வியாபாரம் ஆக்கப் பட்டுவிட்டது! கல்விஎன்பதுகற்றுத் தரும்  கூடம்கள் எல்லாம்  குறுகிய காலத்தில்அதிக லாபத்தை தரும் தொழில் என்ற அளவில் நடத்தப் பட்டு வருகின்றனன்!  உயர் கல்வியானது  இனிமேல் பாமரர்களுக்கும்,அடித்தட்டு மக்களுக்கும்  கிடைக்குமா?எனபது  சந்தகமாக உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த  அண்ணல் அம்பேத்கரோ, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம்  ஆசாதோ,  எதிர்காலத்தில்இதுபோல நடக்கும் என்று நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்! தனியார் நிறுவனங்களின்   தனி உரிமைப் பிரதேசமாக   கல்வித்துறை மாறிவருவது,  இந்திய தேசத்தை  இருளில் தள்ளும் கொடுமையான செயலாகும்.! மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக  கல்வி வழங்குவதையும் அரசு செய்யவேண்டும். தேவையென்றால் அரசியல் சட்டத்தை அனைவர்க்கும் கல்வி வழங்கும் கட்டாய கடமையாக  அரசியல் சட்டத்தில்  தேவையானதிருத்தும்  செய்வது  தவறில்லை!           இப்போதும் அனைவருக்கும் தடையில்லையே, மத்திய,மாநில அரசுகளும் கல்வியை வழங்குகிறதே என்று சிலர்  கேட்கலாம்.! மேலோட்டமாக  பார்த்தால் அவர்கள் சொல்வது சரியாக தோ…

இஸ்லாமிய பக்கீர்களின் இந்திய சுதந்திரப் போர்!

Image
இன்று சுதந்திரத்தின் பொருள்  திரிந்துள்ளது போல, சுதந்திரப் போராட்ட வரலாறும் திரித்து  எழுதப் பட்டு வருகிறது!  சுதந்திரம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் பாடுபட்டது போல  ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப் படுகிறது! தவிர சுதந்திரம் பெறுவதற்கு போராடியவர்களும் கூட இந்துகள் என்பதுபோலவும், இந்துகளுக்கு மட்டுமே வாங்கப்பட்ட சுதந்திரம் போலவும் சித்தரிப்புகள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது! இன்று  இவர்கள் மட்டுமே இந்திய தேச பக்தர்களாக மிகைபடுத்தப் பட்டு வருகிறார்கள்! இந்திய தேசம் இவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோலவும், இந்த நாடு இவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளது போலவும் இவர்கள் பேசியும் எழுதியும்,ஊடகங்களில் விளம்பரம் செய்து வருவதையும்   பார்க்கும்போது  அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!        இன்று சுதந்திரம் பெறுவதற்கு, "காரண கர்த்தாவாக"  காட்டப்படும்  எவரையும் விட, சுதந்திரத்திற்காக போராடியவர்கள்  முஸ்லிம்களும், தாழ்த்தப் பட்டவர்களும்  ஆவர்! இவர்களிலும் பக்கீர்கள் என்று இன்றும் அழைக்கப் படும்  முஸ்லிம்களில் நாடோடியாகவும் , வ…