அதுவும் இதுவும் அல்லாதது, இது !

             வள்ளுவர் சொல்லுவார்..., " பற்றுக பற்றற்றார் பற்றினை" என்று!   எந்த பொருள் மீதும் பற்று இல்லாதவர்களிடம் பற்று  வைக்க சொல்கிறார்!  அப்படி எதன் மீதும் பற்று இல்லாதவன் உலகில் உண்டா? என்றால், இறைவனைத் தவிர யாரும் இல்லை என்றுதான் சொல்லுவோம்.  புத்தர்கூட, இந்த கருத்தை ஒட்டியே ஆசையே நமது துன்பங்களுக்கு எல்லாம் மூல காரணம் என்று  அவர் வழியில் உபதேசித்துள்ளார்!  சிலர் இன்று அத்தனைக்கும் ஆசைப்படு என்று உபதேசித்து  வருகிறார்கள்! அனைத்துக்கும்   ஆசைபட்டால்  திகார் ஜெயிலில்  மீதும் ஆசை கொள்ள வேண்டியிருக்கும்! எய்ட்ஸ்மீதும், எல்ல நோய்கள்மீதும் கூட ஆசைவரும்!      எனவே ,நமது நியாயமான விருப்பங்கள் ஆசைகள்என்ன?  என்பதில் நமக்கு ஒரு தெளிவான பார்வையும்,திடமான முடிவும் அவசியம் இருக்கவேண்டும்! அதனை நோக்கிய பார்வையும் பயணமும் நமது வாழ்க்கைப் பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும்!  சாமியாராக ஆகவேண்டுமா? உனது தேவைகளை குறைத்துக்கொள்! ஆசைகளை ஒதுக்கி,உன்னுள் அடங்கி ஆண்டவனைத் தியானி!  மாறாக, மற்றவர்களிடம் இருக்கும் அபரிமிதமான செல்வத்தையும் நீ வாங்கிவைத்துகொண்டு  சமுகத்தை சீரழிக்காதே!  சாமிகளையும் மாமிகளையும்  ஏமாற்றாதே!!


 
           சம்சாரியாக வேண்டுமா? உனக்கு மட்டுமின்றி,உன்னை சார்ந்து நிற்கும்  மனைவி, மக்கள்,உறவு ,நட்பு, அனைவரின் தேவைகளை நிறைவேற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள், ஆனந்தத்தை அனைவருக்கும் வழங்கிடும் வழியை கண்டுபிடி!ஆசைகளை பங்கிட்டு செலவிடு!!  எது வேண்டுமோ, அதனை தேர்ந்தெடு!  தேர்ந்தெடுத்த வழியில் செல்.! மாறாக  சென்று மனதை குழப்பிக் கொள்ளாதே! வாழ்கையை தொலைத்துவிட்டு வருத்தத்தை  வாழ்க்கையாக்கிக் கொள்ளாதே!


                 இரண்டு நிலையான  வாழ்க்கைப் பாதையில்,  ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வாழ்வது தவறில்லை! ஆனால்  இரண்டு விதமான வாழ்க்கை மீதும் ஆசைகொண்டு வாழ்வதும், அவ்வாறு வாழ நினைப்பதும் சரியா? என்று எண்ணிப் பார்க்கவேண்டும்! இரண்டு விதமாகவும் வாழ்பவர்களை, பொய்யான,போலியான  வாழ்க்கையை  வாழ்பவர்களை  என்னவென்று சொல்வது?  வேடதாரிகள் என்பதா? நடிகர்கள் என்பதா? சாமியார்கள் என்பதா? ஆண்டவனின் அவதாரங்கள்  என்பதா?அல்லது ஆணும் அல்ல  பெண்ணும் அல்ல, எனபது போல இரண்டுமே இல்லாத போலி வாழ்க்கையை வாழ்பவர்கள் என்பதா?  சொல்லுங்கள்!


      இதுபோன்ற முரணான  வாழ்க்கையை வாழ்பவர்களை நம்பியும் ஏற்றுக்கொண்டும் இருந்தோம் எனில் நமது வாழ்க்கையை நாம்  நல்லவிதத்தில் அமைத்துக்கொள்ள  முடியாது., நலமாக நம்மால்   வாழ முடியாது! துன்பத்தை வலிந்து அழைத்துக் கொண்டு, வருந்துவதில்  பயன் இல்லை!  ஆண்டவனையும், ஆன்மீகத்தையும் துணைக்கு அழைத்தும் பயனில்லை!! அவற்றாலும் நமக்கு ஆவது ஒன்றுமில்லை.!

          எனவே, இந்த புத்தாண்டில்  புதிய சிந்தனைகளை கைகொள்ளுவோம்.!, புதுமைகளைப்  படைக்கும் மனிதர்களாக,  வலம் வருவோம்.!  பகுத்து  அறியும் பழக்கத்தை  வழக்கமாக்குவோம்!! அதுவே நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பதை அறிவோம்!
                   உண்மையான கல்வி எனபது  நமது ஆற்றலை,அறிவை, வாழ்வை, முன்னேற்றத்தை வளர்க்கும் கல்விதான்!  அத்தகைய  கல்வியாளர்களாக  நாம் உருவானால் மட்டுமே  நாம் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும். இல்லை யென்றால்  ஏன்  வாழ்ந்தாய்? என்று  இறைவன்கூட  நம்மை  கேட்பான்!

  " தெளிவான கல்வி கற்றால்,தேசமது  வசியமாகும்,
   பழியா மரியாதை பாவலர்கள் தன் வசமாம்!"
       - பாம்பாட்டி சித்தர்.

    "இருள்நீங்கி  இன்பம்  பயக்கும்  மருள்நீங்கி
     மாசறு காட்சி யவர்க்கு."
         - திருவள்ளுவர்,(மெய்யுணர்தல்  அதிகாரம்).

         ஒண்ணுமில்லைங்க,  சும்மா... அரசியல், கவிதையின்னு  பதிவு போட்டு  எனக்கே,  போரடிக்குது!   புத்தாண்டில் நம்ம  பதிவர்கள் மட்டுமின்றி,  எல்லோருமே  சில உறுதிமொழி  எடுப்பது  வழக்கம்!    நம்ம தரப்பு  ஆலோசனையாக ... சொல்லிதான்  பார்ப்போமே என்று நினைத்து   போட்டது, இந்த பதிவு!

  (பார்த்திபன் ) ' இதப் போடச் சொல்லி யாரு கேட்டாங்க?'
 (வடிவேலு ).  அய்யோ, அய்யோ..!    இதைபோய்  சீரியசா,  எடுத்துகலாமா?  விட்டு தள்ளுங்க..சார்!
Comments

 1. ///உனக்கு மட்டுமின்றி,உன்னை சார்ந்து நிற்கும் மனைவி, மக்கள்,உறவு ,நட்பு, அனைவரின் தேவைகளை நிறைவேற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள், ////

  தக்கனப் பிழைத்தல் பற்றி திண்டாடும் நேரத்தில் தம்பத்தியமா...

  பயமாயிருக்கு சகோ...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

  ReplyDelete
 2. திருவள்ளுவர் கூட உள்குத்து பதிவு எழுதி இருக்கிறார் என்று இன்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்...
  சிரித்துக் கொண்டு இருக்கிறேன்...
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

  ReplyDelete
 3. தங்களது கருத்துரைக்கு நன்றி,ம.தி.சுதா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. உள்குத்து வேலைகள் எக்காலத்திலும் இருந்துள்ளது!

  ReplyDelete
 5. மனம் நிறைந்த 2012ன் வாழ்த்துகள்.தமிழ் நிறைத்த உங்கள் எழுத்துக்களின் வலிமை பெருகவும் என் பாராட்டுக்கள் !

  ReplyDelete
 6. தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி ஹேமா!

  ReplyDelete
 7. அத்தனைக்கும் ஆசைப்படுன்னு சொல்றவன் நிச்சயம் டுபாகூர்தான்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?