நமக்கு முன்பே.. நாத்திகம் பேசிய சித்தர்கள்!

         நமது  தலைமுறைக்கு முன்பு  வாழ்ந்த  நமது  இரண்டு தலைமுறைகளை  பற்றி மட்டுமே  நாம் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறோம். அவர்களின் பேச்சும்,செயலும் சிந்தனையும், எழுத்துக்களும்,அவர்களின் போராட்டமும் வாழ்க்கையும் நமக்கு  அச்சுகளில், ஒலிஒளி நாடாக்களில் கிடைப்பதும்  அதிகமாக புழங்குவதும்  காரணம் என நினைக்கிறேன். தவிர, நமது முன்னோர்களின்  வாழ்க்கை வரலாறுகளை  அறிந்து கொள்ளும்  ஆர்வம்  நமக்கு இல்லாததும் காரணமாக இருக்கலாம்!


         நாம் அதிகம் அறிந்துள்ள நமக்கு முன் வாழ்ந்த இரண்டு தலைமுறைகளில்  நமது பண்பாடு, வாழ்க்கைமுறை, , நமது வழிபாடு முறை ஆகியவைகள் குறித்து புரட்சிகர கருத்துக்களை, பொதுவுடைமை தத்துவங்களை, தமிழரின் தனித்தன்மை மற்றும் பெருமைகளை சொன்னவர்கள் பலரையும்  நாம்   நாத்திகர்கள் என்று  பொதுபெயரில்  அழைத்து வந்துள்ளோம்!  அவற்றிற்கு காரணம்  இன்றைய நமது  இறைவழிபாடு  மற்றும்  சம்பிரதாய சடங்குகளில்  நமக்கு உள்ள  மோகம்தான்!  இன்று நாம்  பூசை,புனஸ்காரங்கள், சம்பிராய  சடங்குகள்   என்று ஏற்றுக்கொண்டு, போற்றிவரும்  அனைத்துமே ஆரிய ஆதிக்கத்தினால் வந்தவைகள்தாம்!  அவர்களால்  திணிக்கப்பட்டு, தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு, நம்மை ஏற்றுகொள்ள செய்யப் பட்டவைகள்தான்!
 இவைகளால் நாம் அடையும் நன்மைகளை விட  அவதிகளும் தொல்லைகளும் அதிகமாகும்!   அனுபவித்த அனைவருக்கும் இது தெரியும்!   அதே நேரத்தில்  இன்றைய சம்பிரதாய,சடங்குகளால் வழிபாட்டு முறைகளால் யாருக்கு நன்மைகளும் பயன்களும் கிடைகிறது என்பதும் நாம் புரிந்துகொண்டு இருக்கிறோம்!


               நமது இனத் தாழ்வுக்கும் பொருளாதார வீழ்வுக்கும்,நமது பிரச்சனைகளுக்கும்  கூட  இன்றைய  நமது வழிபாட்டு முறைகள் காரணிகளாக உள்ளதாக கருதுகிறேன்! போகட்டும், இன்றைய வழிபாட்டு முறைகள்,பூசை புனஸ்காரங்களை  வலிந்து திணித்தும்,புகுத்தியும் வந்தவர்களான அன்றைய  பக்தி இயக்கத்தினரின் இத்தகைய  செயல்களை  நமது முன்னோர்கள்  எப்படியெல்லாம்  கிண்டல் செய்து, பழித்து, உள்ளார்கள் என்பதை அறிந்த  எனக்கு  ஆச்சரியம் தருகிறது!  அவர்கள் இன்று இருந்தால் அவர்களையும் நாம் நாத்திகர்கள் என்று  கண்டித்து  ஒதுக்கி இருப்போம்!  அவர்கள் அன்று  சித்தர்கள்,மெய்ஞானிகள்,என்று அழைக்கப் பட்டார்கள்!  மக்களை விட்டு அவர்களே ஒதுங்கி தனியாக வாழ்ந்தார்கள்! நம்மை வலிந்து, ஏற்றுகொள்ள செய்த நமது இந்து மதம்  அவர்களை தங்களது  மதத்தினராக இப்போது அடையாளப் படுத்தும்  கேவலத்தை வெக்கமின்றி, செய்துள்ளது!


         இந்து மதத்தை எள்ளி நகையாடிய, கண்டித்த;  நமது முன்னோர்கள்  பூசை, சடங்கு,சாஸ்திரம், போன்ற முட்டாள் தனமான  வழிபாட்டு நிகழ்சிகளை  எப்படியெல்லாம் கண்டித்து  நம்மை நல்வழிப் படுத்த  முயன்றுள்ளார்கள் என்பதை பாருங்கள்!,

     பூசை,பைசாசமடி,அகப்பேய் ,போதமே கொஷ்டமடி!
     ஈசன் மாயையடி,அகப்பேய்,எல்லாமும் இப்படியே!
     சரியை ஆகாதே,அகப்பேய்,சாலோகம் கண்டாயே!
     கிரியை செய்தாலும் அகப்பேய்,கிட்டுவது ஒன்றுமில்லை!

                         -  அகப்பேய் சித்தர்.

    சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரங்கள் பல
    தந்திரம்,புராணங்  காலை சாற்றும் ,ஆகமம்
    விதம் விதமான வேறு நூல்களும்
     வீணான நூல்களே என்று ஆடுபாம்பே!

                   -  பாம்பாட்டி சித்தர்.

     பொயவேதம் தன்னைப் பாராதே- அந்தப்
     போதகர் சொற்புத்தி போத வாராதே!

                    -   காடுவெளி சித்தர்.

     பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச்
    சோதித்துத் தள்ளாடி குதம்பாய், சோதித்துத் தள்ளாடி!

                  -  குதம்பை சித்தர்.

    நேமங்கள் நிஷ்டைகள் வேதங்கள் ஆகம நீதி
    ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோகநிலை
    நாமங்கள் சந்தானம் வெண்ணீறு பூசி நலமுடனே
   சாமங்கள்  தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே!

                - படினத்தார். ( சர்ப்பனையே-வஞ்சனையே)

   சாத்திரத்தைச் சுட்டு, சதுர்மறையைப் பொய்யாக்கி;
   சூத்திரத்தைக் கண்டு துயரறுப்பது எக்காலம்?

              -   பத்திரகிரியார்.          மேலே குறிப்பிட்டு பாடல்களை ( பாடங்களும்) பாடி உள்ள இவர்களே, மெய்யான ஞானிகள்!  நமது உண்மையான  முன்னோர்கள்!!    இவர்களுக்கு  இருந்த அறிவையும் , அனுபவத்தையும்   வைத்து மக்கள் மீதுள்ள அன்பாலும் அவர்களது நலத்தை கருதியும்  நம்மை நல்வழிப் படுத்தவும், நமது நல வாழ்வுக்கும்  இதுபோல பல அரிய போதனைகளை அளித்துள்ளனர்!  அவற்றை கடைபிடிப்போம், நல்ல முறையில் நமது வாழ்கையை அமைத்து கொள்ளவோம்! !

      அனைவருக்கும்  எனது  இனிய  நல்வாழ்த்துக்கள்!

Comments

 1. vanakkam thiru osur rajan avargale thanglaudaiya padhivu nandru,viraivil nam makkalai nam munnorgalin vazhikku konduvaruvom nandri

  ReplyDelete
 2. அருமை.இப்பாடல்கள் இணையத்தில் கிடைக்குமா நண்பரே!!
  நன்றி

  ReplyDelete
 3. உங்களது உன்னத எண்ணத்தை வெளிபடுத்துகிறது உங்கள் கருத்து. நன்றி முண்டகண்ணன் அவர்களே!

  ReplyDelete
 4. அவர்கள் மூட பழக்கங்களும், சாஸ்திரம், சம்ப்ரதாயம், ஆகியவே இல்லை என்கின்றனர்.. இறைவன் ஜோதி வடிவானவன், உருவம் அற்றவன் அவனை நினைத்து தியானித்தல் அவனி உணரலாம் என்று அவர்களே உணர்ந்து கூறி உள்ளனர், இதற்க்கு பகவத் கீதை ஒரு சாட்சியாக வைக்கிறேன்

  ReplyDelete
 5. இணைய தளத்தில் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் பத்திரகிரியார்,பட்டினத்தார் பாடல்கள் பல என்னிடம் உள்ளது அவைகளை தொடர்ந்து இணயத்தில் பயன்படுத்தும் எண்ணம் உள்ளது! தங்கள் வருகைக்கு நன்றி சார்வாகனன்!

  ReplyDelete
 6. சித்தர்களின் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதது, சொல்ல வேண்டியதை பூடகமாய் சொல்லியதால் தான் அது இது வரை தப்பி பிழைத்துள்ளது

  ReplyDelete
 7. நல்லது தமிழ்! ஆனால் அவர்கள் சொல்லுவது போல நடந்து கொள்கிறார்களா? இல்லையே! மேலும் தவறு என்று தெரிந்தே தங்களது பொருளாதார மேன்மைக்கும்,நலத்துக்கும் மற்றவர்களை ஏய்ப்பது சரியா?

  ReplyDelete
 8. எங்கே சூரிய ஜீவா போய் இருந்தீர்கள் ? சமீபமாக உங்களை காணோம்?

  ReplyDelete
 9. எல்லைகள்: நமக்கு முன்பே.. நாத்திகம் பேசிய சித்தர்கள்!

  ReplyDelete
 10. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 11. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 12. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 13. நல்ல பதிவு.

  வாழ்த்துக்ள்.

  ReplyDelete
 14. உண்மை. அருமையான பதிவு சகோ. சித்தர்களின் வலிகளை கடைப்பிடித்தால் நன்மைதான்.

  தஓ 3.

  ReplyDelete
 15. http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html இப்போது உங்களது உதவியை ஏற்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன்! மன்னியுங்கள் பிறகு பார்கலாம்!

  ReplyDelete
 16. ரத்னவேல் அய்யாவுக்கு நன்றி! உங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. துரைடேனியல் அவர்களுக்கு,
  நன்றி! வழிகள் என்பது தவறாக உள்ளது! தமிழின் மொழி ஆளுமை அப்படி !உங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. நல்ல பதிவு.

  வாழ்த்துக்ள்

  ReplyDelete
 19. நல்ல அலசல்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. தங்களது வாழ்த்துக்கு நன்றி சகோ.உங்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 21. ஷண்முக வேல் நலமா? புத்தாண்டை எப்படி கொண்டாட வேண்டும் என்று ஒரு ஆலோசனை அலசல் பதிவு போடுங்கள் !எல்லோருக்கும் பயன்படும்!

  ReplyDelete
 22. கிரி ட்ரேடர்சில் ( GIRI Traders) சென்னையில் வால்மீகி இராமாயணம், மற்றும் துளசி இராமாயணம் தமிழில் உள்ளது .

  ReplyDelete
 23. மற்றொரு மிக முக்கியமான பாடல்,

  நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
  சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
  நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
  சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

  -சிவவாக்கியர்.

  மூடத்தனமான செயல்களை மட்டுமே சித்தர்கள் வெறுத்திருக்கிறார்கள். அதையே பாடலாக பாடி இருக்கிறார்கள்.
  இந்து மதத்தை பற்றி தவறாக எந்த பாடலிலும் பாடியதாக எனக்கு தெரியவில்லை.

  நாம் அனைவருமே கடவுளை நாட விழைவதில்லை, மதங்களை நாட விழைகிறோம். மனிதனை நேர்ப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் சில முட்டாள்களால் மனித இனத்தை அழிவிற்கு இட்டு செல்கிறது.

  ஆபிரகாமிய மதங்கள் தோன்றிய பிறகுதான் மனிதனை
  மனிதன் இனங்கண்டு பிரித்தாளும் சூழ்ச்சி ஏற்பட்டது மறுக்க முடியாத உண்மை.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?