ராகுல் காந்தியின் அரசியல் காதல்!

          ராகுல் காந்தி  வயசுக்கு  வந்துவிட்டார்.! அதுதாங்க, பக்குவம் மிக்க  அரசியல் தலைவராகி  விட்டார்  என்று திக் விஜய சிங் முதல் பிரதமர் மன்மோகன் சிங் வரை  சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்!  அடுத்த காங்கிரசின் தலைமைப் பொறுப்புக்கு மட்டுமின்றி இந்தியாவின் ஆட்சி தலைமைப் பொறுப்புக்கும் அவரை கொண்டுவரும் எண்ணத்துடனும்  காங்கிரஸ் கட்சி இருப்பது  தெரிகிறது!          ராகுல்ஜியும்  தனது தனித் தன்மையை, திறமையை,ஆளுமையை  கட்டுகிறேன் பேர்வழி என்று ஆங்கில ஊடகங்களுடன் உத்திரபிரதேச மாநிலத்திற்கு அடிக்கடி செல்கிறார்! சென்று எதாவது  ஏழை அல்லது விவசாயி வீட்டு ரொட்டியை  சாப்பிட்டும், குழந்தைகளை கொஞ்சியும், கட்டிலில் படுத்தும்  ஏழைகளின் தோழனாக காட்டிக்கொண்டு வருகிறார்!  போதாக்குறைக்கு, உத்திர பிரதேசத்து மக்களை  ஆளும் கட்சியான  பகுஜன் சமாஜ் கட்சியும், மாயாவதியும் பிச்சைக்காரர்களாக  ஆக்கிவிட்டதாக  குற்றம் சாட்டுகிறார்! பத்திரிகைகள்  தவறாமல் படத்துடன் செய்தி வெளியிட்டு  விளம்பரப் படுத்தி  வருகின்றன!         ராகுல் காந்திக்கு ஏழைகளின் பேரில் காதலும் கரிசனமும் வருவதற்கு காரணம்  உத்திர பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் காரணம் என்று சந்தேகம் இல்லாமல் நமக்கு தெரிகிறது! பிரதமர்களை உருவாக்கும் பெரிய மாநிலமான உ.பி.யில் பிரதமர் காதலுடன்,பிரமாதமான கனவு காணும்  ராகுல்ஜி  இதுவரை  தேசத்தின் ஜீவாதார பிரச்சனைகளிலோ, சர்ச்சைக்குரிய  அலைகற்றை ஊழல், தெலுங்கான போராட்டம், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் ஊழல், கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள் பற்றியோ, அயல் நாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவது குறித்தோ, லோக்பால் மசோதா குறித்து, மகளிர் இடஒதுக்கீடு  மசோதா, சிறுபான்மை மககளுக்கு இடஒதுக்கீடு, இந்தியாவை  அச்சுறுத்தும் மத தீவிரவாதம், வெடிகுண்டு பீதிகள்,  போன்ற  எந்த பிரச்சனையைப் பற்றியும்  தனது  கருத்தை  நிலைபாட்டை  அறிவிக்க வில்லை! 

    அதுமட்டுமின்றி, தமது பாட்டிஇந்திராகாந்தி, கொள்ளுத் தாத்தா நேரு வரை  காங்கிரஸ் காட்சி பெரும்பாலும் ஆண்டு வந்தும் இன்றும் நீடித்து வரும்  வறுமையை  பற்றியோ, வேலை இல்லாத் திண்டாட்டம், பட்டினி சாவுகள்,விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை என பலவற்றிற்கும்   கூட கருத்துடையவராக  தெரியவில்லை!  இருந்தும், அரசியல் மேல் இப்போது அதிகம் காதல் கொண்டு செயல்பட்டு வருகிறார்!

         கண்ணதாசனின் கவிதை வரிகள் இப்படி சொல்லுகிறது:

      "  நாடகங்கள் ஆடுமாறு
            நாயகன்தன் கட்டளை!
        நாடகங்கள் எனும்பேரில்
            நடப்பதுதான் எத்தனை?
       அன்பு ஒன்று  செய்யுமாறு
               அண்ணல் இட்ட  கட்டளை!
       அன்புஎன்னும் வாள்கொண்டு
               ஆள் அறுப்போர் எத்தனை?"

      ராகுல்ஜி,   ஏழைகளின் வீடு தேடிச் சென்ற செய்திகளை  படிக்கும்போதும்,அவரது அரசியல் சேட்டைகளை நோக்கும்போதும்  எனக்கு மேலே குறிப்பிட்ட கவிதை வரிகளே நினைவுக்கு வருகிறது!        இதுவரை பாரதிய ஜனதா கட்சி ,முலாயம் கட்சி,மாயாவதி கட்சி என்று தேர்தலுக்கு தேர்தல் அணிமாறி  அரசியல் நடத்திய, அஜித்சிங்  கட்சியுடன்  கூட்டணி வைத்துக் கொண்டு, கூட்டணிக்கு அட்சாரமாய் விமானதுறை மந்திரி பொறுப்பும்  வழங்கி,  உ.பி.யில்  தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்ஜி,போன்ற வாரிசு ராஜாக்களின்  அரசியல் வினோத,விசித்திர, செயல்களை  எண்ணி அழுவதா? ஆதங்கப் படுவதா? ஆவேசம் கொள்வதா? என்றே தெரியவில்லை!   Comments

 1. எப்ப வாரிசு அரசியலுக்கு முடிவு வருதோ அன்னிக்குத்தான் நாடு உருப்பட முதல் படியா இருக்கும்..

  ReplyDelete
 2. நன்றி கோவி! ஆமாம், கோவினு பேரு வச்சுகிட்டு இருக்குறவங்களுக்கு கோபமே வராதாமே? உண்மையா?

  ReplyDelete
 3. ஏன் நண்பரே? தினமும் கோபப்பட்டு கொண்டுதானிருக்கிறேன்..

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. கோவி என்றாள் கோபப்படு என்று பொருள். சாந்தமான மனிதர்களை தான் கோபப்பட சொல்லுவார்கள்.! அதனால் தான் கேட்டேன்! அதற்காக என்மேல் கோபபடாதீர்கள்!

  ReplyDelete
 6. நண்பர் ரத்னவேல். தங்களது செயல் மகிழ்ச்சி தருகிறது!

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. வடிவேலுவை பார்த்து ஒரு படத்துல சொல்றது தான் ஞாபகத்துக்கு வருது...

  "நீ அதுக்கெல்லாம் ஒத்து வர மாட்டே...."
  இப்போதைக்கு இது தான் ராகுல் நிலைமையும்

  ReplyDelete
 9. நன்றி கபிலன்.' பளிச்'என்று கருத்து சொன்னதுக்கும்,வருகைக்கும்!

  ReplyDelete
 10. வாஞ்சூர் அய்யாவுக்கு வந்தனம்! ஈழ முஸ்லிம்கள் குறித்து இங்கே யாருக்கும் முழுமையாக தெரியவில்லை எனபது எனது அபிப்பிராயம்!

  ReplyDelete
 11. விட்டுத்தள்ளுங்க லூசுப்பயல் ....

  ReplyDelete
 12. நம்ம வாழ்க்கையை லூசு பையன் சிக்கல் பண்ணுற, கோபம்தான் சகோ!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?