விவேக சிந்தாமணியும் அவிவேக சிந்தாமணியும் தெரியுமா?

              மனிதன் எப்படி வாழவேண்டும் என அறிவுரைகளை, வாழ்வியலை சொல்லும் கவிதைநூல் ஒன்று உள்ளது! விவேக சிந்தாமணி என்று பெயர்! அந்த பழமையான நூலில் பல்வேறு கருத்துகள் உள்ளது!

              உதாரணத்துக்கு ஒன்று கீழே:

                   ஆபத்துக்கு உதவாத பிள்ளை
                            அரும்பசிக்கு உதவாத அன்னம்;
                    தாபத்தை போக்கா தண்ணீர்,
                             தரித்திரம் அறியா பெண்டீர்;
                   கோபத்தை அடக்கா வேந்தன்,
                                குருமொழி கொள்ளா   சீடன்;
                    பாவத்தை போக்கா தீர்த்தம்,
                                 பயனில்லை ஏழும்தானே!
                      இதைபோலவே, வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ளாமல், மனம்போன போக்கில் வாழந்து... வருத்தப்படும் கவிஞர் ஒருவர் எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று அவிவேக சிந்தாமணி என்ற தலைப்பில் கவிதைகளை எழுதிஉள்ளார்!
  பொதுவாக யாரையாவது  முன்வைத்துதான் அறிவுரையோ,உபதேசமோ செய்ய இயலும்!  அவ்வாறு யாருக்கு உபதேசிப்பது என்பது கவிஞருக்கு தெரியவில்லை போலும்!  அதனால் என்ன?  இருக்கவே இருக்கிறான், இறைவன் என்று  ஒருவன்!   என்று நினைத்து,  அதிலும் அன்புகொண்ட அன்னையைப் போலுள்ள, மதுரை மீனாட்சியிடம்  முறையிடுவது போல  நினைத்து,  தன்னைப்பற்றி புலம்புகிறான்!  அவன் புலம்பலில்  அவனது உள்ளத் துடிப்பு தெரிகிறது! ஆதங்கம் தெரிகிறது!  அவனது துன்பமும் அனுபவமும் தெரிகிறது! எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கூட தெரிகிறது!  அவன் எழுதிய  அவிவேக சிந்தாமணி  எனக்கும் பிடித்தவைகள்  ஆகும்!  காரணம்  எனது வாழ்க்கையும் நிலையம் கூட கவிஞரின் வாழ்க்கையையும் நிலையையும் ஒத்திருக்கிறது!               கவிஞர் எழுதிய  அவிவேக சிந்தாமணியில்  இரண்டு பாடல்களை  கீழே பாருங்கள்:
                      
பாடல் ஒன்று }               
                                 திருடனும் அரகரா சிவசிவா,
                                           என்றுதான் திருநீறு பூசுகிறான்!
                                 சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின்                                                                                                   பேர்சொல்லி  சீட்டை புரட்டுகிறான்;
                                 முரடனும் அரிவாளில் காரியம்
                                          பார்த்தபின் முதல்வனை கூவுகிறான்,
                                 முச்சந்தி மங்கையும் முக்காடு
                                          நீக்கையில் முருகனை வேண்டுகிறாள்;
                       
                                  வருடுவாருக்கு எல்லாம் வளைகின்ற தெய்வம்
                                            என் வாழ்க்கையைக் காக்கவில்லையே!
                                 மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டிடும்
                                                 மதுரை மீனாட்சி உமையே?

பாடல் இரண்டு}
                                    தான்பெற்ற பிள்ளையை ஏன் பெற்றோம்
                                           என்றுதான் தாயன்று மாண்டு போனாள்!
                                    தந்தையும் இப்பிள்ளை உருபடாது என்றுதான்'
                                            தணலிலே வெந்து போனான்!
                                   ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்,
                                             உயரத்தில்  ஒளிந்து கொண்டான்!
                                   உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டும்தான்
                                             கருவாக வந்து நின்றாள்!

                                  வார்கின்ற கவியன்றி வேறொன்றும் இல்லையே,
                                            வைகையில் பூத்த மலரே!
                                  மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டும்
                                            மதுரை மீனாட்சி உமையே?             எனது நெஞ்சில் நிழலாடும் கவிதைகளில் இவைகளும் உண்டு!  விவேக சிந்தாமணி  பழைய பாடல்கள் எனபது தெரியும் ஆனால் அதை எழுதியது யாரென்று  எனக்கு தெரியாது!    அவிவேக சிந்தாமணியை எழுதியது  யாரென்று தெரியும்!  அவனது பெயர்  முத்தையா என்பதாகும்!  சிறுகூடல் பட்டியில் பிறந்த முதையாதான்,  "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு'' என்ற பாடலையும் எழுதியவன்!
                           கிருஸ்துமஸ் வருது, ஆங்கில புத்தாண்டு வருது.   அதனால....  எல்லோருக்கும்  எனது  இனிய வாழ்த்துக்களை  சொல்லிக் கொள்ளகிறேன்!  அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!!Comments

 1. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://adf.ly/4FKbj

  ReplyDelete
 2. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://adf.ly/4FKbj

  ReplyDelete
 3. thank you for your information! wish you Xmas to your beloveded family and friends! -hosur rajan.

  ReplyDelete
 4. கருத்துமிக்க பதிவு நன்றி நண்பா

  ReplyDelete
 5. நல்ல புத்தி சொல்லும் கவிதைகள்.அருமை.

  ReplyDelete
 6. தங்களது கருத்துரைக்கு நன்றி ராஜ் !

  ReplyDelete
 7. தங்களது முன்னூறு பதிவுகளும் மனிதர்களின் வாழ்வியலுக்கு வளம் சேர்க்கும் வழிகாட்டி பதிவுகள்!
  சண்முகவேல் உங்கள் பணி போற்றுதலுக்கு உரியது! !

  ReplyDelete
 8. இரண்டு எதிர் நிலையில் உள்ள நூலையெடுத்து
  மிக அழகாகத் தொகுத்து அதை பதிவாக்கித்
  தந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 3

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?