நாயால் தமிழுக்கு கிடைத்த நல்ல கவிதை!

             தமிழ் கூறும் நல்லுலகத்தில் அவனுக்கு என்று ஒரு இடம் உள்ளது! கவிதைகள்,சினிமா பாடல்கள்,நாவல்கள் என்று எழுதி குவித்த அந்த குழந்தை மனம் கொண்ட கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் எனலாம்!  அன்பும் கருணையும் மிகுந்த அவனை ஏமாற்றியவர்கள் ஏராளம்.!  மனிதர்களிடம் அவன்  எதிர்பார்த்த  நட்பும்,அன்பும்,நன்றியும்   கிடைகாத காரணத்தாலோ,   என்னவோ, அவனொரு நாயை வளர்த்து வந்தான்!.  அந்த நாயும்  அவன்மீது  அலாதி பிரியத்துடன் பழகிவந்தது! " சீசர்" என்று பெயரிட்டு அழைத்து வந்த, அவனது  நாய்  ஒருநாள் இறந்துவிட்டது. !  அதன் இறப்பையும் பிரிவையும்  அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை!

            நாயின் பிரிவால் துடித்த அவனுக்கு அந்த நாயைப் பற்றி எழுதத் தோன்றியது!     தமிழ்மகளின் ஆசியும் அருளும் பெற்ற  அவன்... அதையும் ஒரு கவிதையாக வடித்து, இறந்த நாய்க்கு  கண்ணீர் அஞ்சலியாக படைத்தான்!   கொஞ்சி விளையாடிய  அவனது நாயால்   நல்ல கவிதை ஒன்றும் தமிழுக்கு கிடைத்தது!   கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிதை பாடும் என்பது உண்மையா? என்று தெரியாது! ஆனால்,   தமிழ் கவியின் வீட்டில் வளர்ந்த   நாயாலும் தமிழுக்கு ஒரு நல்ல  கவிதை கிடைக்கும் என்பது  தெரிந்தது!     நாயால் நற்றமிழுக்கு கிடைத்த கவிதை  இதுதான்:

                       பன்றிக்கு மலமே தீனி,
                                   பருந்துக்கு பிணமே தீனி;
                       கன்றுக்கு புல்லே தீனி,
                                     கழுதைக்கு ஏடே தீனி,
                        குன்றத்துப் பாம்புக் கெல்லாம்
                                    குழி எலி,தவளை தீனி!
                        என்றைக்கும் தீனிக் கென்றே,
                                   இவை தந்தான் தேவஞானி!
           
                        பன்றியை வளர்த்துப் பார்த்து,
                                  பருந்துக்கும் உணவு போட்டு;
                       கன்றையும் வைத்துக் காத்து,
                                  கழுதைக்கும் காவல் நின்று;
                       குன்றத்து பாம்பையெல்லாம்,
                                 கூடவே வைத்து பார்த்தும்
                       நன்றியைக் காணாதாலே,
                                  நாய் ஒன்றை வாங்கி வந்தேன்!
    
                      சீசர்'ரென்று அந்த நாய்க்கு,
                                 செல்லப் பெயரிட்டு அழைத்தேன்!
                       ஆசையாய்  எடுத்து கையில்,
                                   அணைத்து  மகிழ்வேன் நெஞ்சில் !
                       சீசரின் நேசத்தை பெற்றதாயின்
                                பாலிலும் கண்டேன் இல்லை!
                       தேசத்தை நேசிப்போருக்கு தேவை
                                  ஒரு நாயின் நெஞ்சம்!

                         வாலிலே நன்றி சொல்லும்,
                                   வாயில்லா பிள்ளை ஆகும்!
                          காலிலே அன்பு காட்டும்,
                                  கண்ணிலே உறவு காட்டும்;
                         தோலிலே  முளைத்து எழுந்த,
                                  ரோமமும் தோழன் ஆகும்!
                          வேலினால் தாக்கினாலும்-என்,
                                   தான்  விழுந்து  சாகும்!

                           வளர்த்தவன் சிரிக கின்றானா?
                                   வாய் விட்டு அழுகின்றானா?
                            தளர்ச்சியில் விழுகின் றானா?
                                    தனிமையில் குமைகின்றானா?
                            கிளர்ச்சியில் எழுகின் றானா?
                                    கேலியில் சமைகின்றானா?
                            உளத்தில் உள்ளது  எல்லாம்,
                                     உணர்வது நாயின் நெஞ்சம்!

                              குடத்திலே இடுமுன் விரைந்து,
                                       தொடர்ந்து வந்து சோற்றை;
                              வெடுக்கென பறிக்கும்;-மாந்தர்
                                         விழுங்கிய பருக்கை உள்ளே,
                              படுக்குமுன் கேலி பேசும்,
                                         மானிடப் பதர்கள் போல,
                            நடக்குமோர் குணம் இல்லாத
                                        நாய் எந்தன் சீசர் குட்டி!

                           அன்னையே உன்னை கேட்பேன்,
                                      அடுத்ததொர் பிறவி உண்டேல்;
                             என்னையும் நாயாய்ப் பெற்று,
                                      இத்தலை  கடனை தீர்ப்பாய்!
                             தன்னையும் உணர்ந்து ,தன்னை
                                       தழுவிய கையும் காக்கும்;
                             மன்னவன் பிறப்பு நாய்தான்!
                                       மனிதராய் பிறப்பது அல்ல!!
                            
                   எழுதியது கவியரசு கண்ணதாசன்!   இறந்தது அவர் வளர்த்த நாய்தான்!   என் நெஞ்சில் நிழலாடும் கவிதைகளில் இதுவும் ஒன்றாகும்! 

 

              நாயைப் பற்றி நம்மிடம்  அனேக தகவல்கள்  இருக்குதுங்கோ...,  மனிதர்களைப் பற்றி ஆய்வு செய்ய பயந்து  நாய்களைப் பற்றி ஒரு தருணம் ஆய்வு செய்கிறேன் என்று கிளம்பி.. அப்புறம், நாயிடம் கடிபட்டு, வடிவேலு கணக்கா புலம்பியதெல்லாம் உண்டுங்க! நமக்கு " நாயபாசம் " இருப்பதால் தான் இந்த கவிதை கூட மனசுல" பச்சக்குன்னு" ஒட்டிகிட்டது.! 

        
  

Comments

 1. சிறப்பான,, சுவையான பகிர்வு,,,

  ReplyDelete
 2. கண்ணதாசன் கவிதையை நினைவுபடுத்தும் பதிவு,,
  பகிர்வுக்கு நன்றி,,

  ReplyDelete
 3. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால், நாய்ப் பிரியர்களான ஐரோப்பியர் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.
  கவிஞர் அனுபவித்து எழுதியுள்ளார்.
  இட்டதற்கு நன்றி!

  ReplyDelete
 4. ஜோகன் பாரிஸுக்கு நன்றி நீங்கள் விரும்பினால் ஆங்கிலத்தில் மொழி பார்த்து வெளியிடுங்கள்! கண்ணதாசன் ஆத்மா மகிழும்!

  ReplyDelete
 5. கருண் உங்களால் வேடந்தாங்கல் தளம் அருமையாக உள்ளது!

  ReplyDelete
 6. தத்துவக் கவிஞன் பற்றிய பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 7. என்னை பாதித்த கவிஞர்களில் கண்ணதாசனுக்கு தனி இடம் உண்டு! நன்றி சண்முகவேல்!

  ReplyDelete
 8. கண்ணதாசனின் கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 9. தளத்துக்கு வந்தமைக்கு நன்றி! சீனிவாசன் உங்களுக்கும் உங்கள் உஎரவுகள் நட்புக்கும் எனது கிருஸ்துமஸ்,புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. தளத்துக்கு வந்தமைக்கு நன்றி! ராஜி,உங்களுக்கும் உங்கள் உஎரவுகள் நட்புக்கும் எனது கிருஸ்துமஸ்,புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. தங்களது வருகை என்னை ஊக்கபடுதுகிறது நண்பரே! முண்டகண்ணன் பெயர் காரணம் எனக்கு சொன்னால் நல்லது!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?