ஜெயலலிதாவின் அதிரடியும்.., சசிகலா{கும்பலின்} எதிர்காலமும்.!

            போயஸ் தோட்டத்தில் இருந்தும்   கட்சியில் இருந்தும்  ஜெயலிதாவின் இனிய தோழி, ஜெயலலிதாவால் வெளியேற்றப் பட்டுள்ளார்!     அவரது உறவினர்களும்  படை பரிவாரங்களும் கூட அவருடன் வெளியேற்றப் பட்டுள்ளனர்!  அ,தி.மு. க-வில் மட்டுமின்றி அரசியலை கவனித்து வருபவர்களும்   ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையை, சசியின் வெளியேற்றத்தை வரவேற்று உள்ளனர்!   முன்பு ஒருமுறையும் ஜெவுக்கும்,சசிக்கும் பிரச்னை ஏற்பட்டு, சசி வெளியேற்றப் பட்டு  இருக்கிறார்! ஆனால் விரைவிலேயே    சமரசமாகி,    மீண்டும் போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து, முன்பைவிட செல்வாக்குடனும், அதிக சாமர்த்தியத்துடனும்  அவரால் {சசியால்}  செயல்பட முடிந்தது!    இப்போதும் அவரால் மீண்டும் ஜெயாவிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது காரணம்  ஆட்சி,அதிகாரம்  செல்வாக்கு ஆகியவைகளை அனுபவித்த சசிகலாவும்  அவரது படை, பரிவாரங்களும்  அவைகளை இழந்து விட்டு புதிய சூழலில்  தொடர்ந்து வாழ்வது இயலாத காரியம் என்பதுதான்!


         மதுரை தினகரன்  பத்திரிக்கை அலுவலகத்தை கொளுத்தி, மூன்று பேர்கள் செத்தபிறகும், அறிவாலயத்தில் இருந்து சன் டி.வி.அலுவலகத்தை காலி செய்ய வைத்த பிறகும், மத்திய அமைச்சர் பதவியை பறித்து, ஆண்டிமுத்து ராஜாவிடம்  கொடுத்த பிறகும் கூட  கருணாநிதி குடும்பத்துடன்  தயாநிதியும்,கலாநிதியும் சமரசம் ஆனதற்கு காரணம்,  அவர்கள் ஆட்சி அதிகாரத்தை சுவைத்து இருந்ததும் அதில் கிடைக்கும் ஆனந்தமும் தான்!   ஒருமுறை பதவி சுகத்தை-அதிகார சுகத்தைக்  கண்டவர்களுக்கு அதனை லேசில் விட்டுவிடும் எண்ணம் இருப்பதில்லை என்பதே நடைமுறை உண்மையாகும்!  ஐந்து முறை முதல்வராக இருந்த  பழுத்த, முதிர்ந்த,அரசியல்வாதியான முன்னாள் முதல்வரான  கருணாநிதி,  " நான் கண்ட கனவெல்லாம் போச்சே" என்று அரற்றுவதற்கும்,ஆதங்கம் கொள்வதற்கும் காரணம் இந்த அதிகார வெறியே!  அதிகார வெறிக்கு ஆளானவர்கள் எளிதில் அதிகாரத்தை விட்டவிட்டு இருப்பதில்லை! சசிகலாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதே எனது கருத்தாகும்!            ஆகவே, ஜெயலலிதாவை சமாதானப் படுத்தும்  திரைமறைவு வேலைகள் தொடர்ந்து நடக்கும்! சரணாகதி அடையும் நிலையை சசி கும்பல் மேற்கொள்ளும்!  ஜெயலலிதா எதிர்வரும் நாட்களில் தனது நிலைபாட்டில் உறுதியுடன் இருப்பாரா? அல்லது, ஆருயிர் தோழி,ஆசை தோழியின் மீது மீண்டும் அன்புகொண்டு  சேர்ப்பாரா? என்பது இப்போது தெரியாது! ஆனால் மீண்டும் சசிகலா கும்பலை தன்னுடன் சேர்த்துக் கொள்ள ஜெயலலிதா முன்வந்தால், தன்னை  தாழ்த்திக் கொள்வதுடன்  தமிழ் நாட்டை தாழ்த்தும் செயலையும் செய்கிறார்  என்று நம்பலாம்!                 நாயைப் போல நன்றி வேண்டும், விசுவாசம் வேண்டும் என்று நாமெல்லாம் ஆசை படுகிறோம்,.   விரும்புகிறோம்!  நாயின் மற்றொரு குணம்  என்ன தெரியுமா?  நாம் வளர்க்கும் நாயை , கோபத்தில் அடித்தாலும்,துன்புறுத்தினாலும் கூட  அப்போதைக்கு மட்டும் சிறு எதிர்ப்பை-வெறுப்பைக் காட்டிவிட்டு, பிறகு நம்மிடமே புகலிடம் தேடி மீண்டும் வந்துவிடும்!

           நிழலாக ஆதிக்கம் செலுத்துபவர்களும்  , அதிகாரத்தை சுவைத்தவர்களும், நம்மிடம் அன்பு காட்டுபவர்களும்   கூட இந்த வகையினர்தான்!     நாம் வளர்க்கும் நாய்களைப் போலவே,   போக்கிடம் இல்லாதவர்கள்!!


Comments

 1. ஜெயலலிதா எதிர்வரும் நாட்களில் தனது நிலைபாட்டில் உறுதியுடன் இருப்பாரா? அல்லது, ஆருயிர் தோழி,ஆசை தோழியின் மீது மீண்டும் அன்புகொண்டு சேர்ப்பாரா? // இதுதானே கேள்வி தலைவரே..

  ReplyDelete
 2. ஆமாங்க தோழர்! நலமா?

  ReplyDelete
 3. நீங்கள் எழுதியுள்ளது முற்றிலும் உண்மை!

  புலவர் சா இராமாநுசம்

  த ம ஓ 3

  ReplyDelete
 4. சுருக்கமாக எழுதினாலும் கருத்துக்களை சுருக்காமல் எழுதியிருக்கிறீர்கள்.. பிரமாதம்.

  ReplyDelete
 5. சுருங்கச் சொல்லி விளங்க வைத்து இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 6. நன்றி அய்யா! தங்களது பாராட்டு என்னை ஊக்கபடுதுகிறது!

  ReplyDelete
 7. தங்களது பாராட்டு என்னை ஊக்கபடுத்துகிறது!நண்பர் துரை டேனியலுக்கு நன்றி!

  ReplyDelete
 8. ரஹீம் கசாலி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 9. பந்து நண்பருக்கு எனது பணிவான வந்தனம்! தங்கள் கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 10. T T E நண்பரின் கருத்துகள் ஊக்கம் தருகிறது! நன்றி அய்யா!!

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?