வைகை அணை பிரச்சனைக்கு வாருங்கள்!

              நம்ம மாப்பிள்ளைக்கு மதுரையிலே  பொண்ணு அமைஞ்சது!  மாப்பிள்ளே, சுத்த தங்கம்.  இந்த காலத்து விடலைகளைப் போல இல்லை! கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல், பெண்வாசனை, தாம்பத்தியம் என்று கட்டுக் கோப்பாக இருந்தவரு...  அப்படிப்பட்ட  மாப்பிளைக்கு கல்யாணம் முடிந்ததும் காதல் பொங்குது! புது பொண்டாடியிடம் தன்னோட ஆளுமையை காட்டவும், அன்பை கொட்டவும், ஆசையை தீர்த்துக்கவும் ஆளாய் பறக்குறார்; தவியாய் தவிக்கிறார்!  போதாத குறைக்கு கல்யாணம் முடிந்ததும் மறுவீடு அழைப்பு, விருந்து உபசாரம் என்று மாப்பிளையை  மனப்பொண்ணு பொறந்த வீடு இருக்கும் மதுரைக்கு கூட்டிட்டு போயிடறாங்க. அங்கே போனாலும் பொண்ணோட அன்பா பழக முடியலை! பொண்ணோட சிநேகிதிங்க, உறவு காரங்க,  அக்கம் பக்கம்  தெரிஞ்சவங்க  என எல்லோரும் வந்து பேசியும்,கேலி கிண்டலும் செய்தும்  சந்தோசமா இருகிறாங்க..
      நம்ம மாப்பிளையிடம் வேறு  குசலம் விசாரிக்கிறதும், உத்தியோகம், வருமானம் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கறதும் என்று நடக்குது! இடையிடையே,  பலகாரம் சாப்பிடுங்க..., பழம் சாப்பிடுங்க.., காலை சிற்றுண்டி ஆச்சா? சாப்டீங்களா? என்று விசாரிப்பு வேறு நடக்கிறது!                                                                                    " நெய்யில் பிணைந்த பலகாரம்,
                             நித்தம் நித்தம் உபசாரம்!"


            பாவம், மாப்பிள்ளை!   அவருக்கு அதுவா,  இப்போ... முக்கியம்?

          புது பொண்டாட்டியை கொஞ்சணும்,  தனிமையில் அவளை ஆரத் தழுவி ஆலிங்கனம் பண்ணனும்! அதாங்க... சில்மிஷம் பண்ணனும், என்று மனதும், உடம்பும் துடியாய் துடிக்குது! ஆனால் சந்தர்ப்பம்தான் கிடைக்கலை!
    நம்ம மாப்பிள்ளை படுற   தவிப்பு, மதுரை   பொண்ணுக்கும் தெரியுது!  குறவன் பாஷை குறத்திக்கு தெரியாமலா இருக்கும்?  ஒருவழியா..   தனிமையான சூழலை  மாப்பிள்ளைக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறாள்!       தனிமையான சூழலை மட்டுமா ஏற்படுத்தி கொடுக்கிறாள்? தன்னையே கொடுக்கிறாள்! இன்பத்தை கொடுப்பதுடன்,அவளும் இன்பத்தைப் பெறுகிறாள்! இவைகள் எங்கே நடக்கிறது தெரியுமா?  வைகை அணையில்  அங்கே  இருவரது அன்பும் காதலும் நதியைப்போல பொங்கி பிரவாகமாக  பெருகுகிறது! 


   

                             தையல் அருகில் இருந்தாலும்,
                                    தழுவிட கைகள் துடித்தாலும்;
                            பையல் பலரின் சூழ்நிலையால்,
                                   பசியால் ஏங்கும் வாழ்வுற்றேன்!
                            சைகை தெரிந்த புதுமனைவி,
                                   சாகசத்தால் வழி கண்டாள்!
                            வைகை அணையைப் பார்த்திடுவோம்
                                   வருக! என்றாள்; பின் சென்றேன்!
               
                            கையால் அணையின் கரைகாட்டி,
                                   கனிவாய் தனிமை இடம் கூட்டி;
                            வைகை என்றாள், அணை என்றாள்;
                                   வார்த்தைக்கு இரண்டு பொருள் சொன்னாள்!
                            வைத்தேன் கையை, அணைத்திட்டேன்;
                                     வாயால் வாய்க்கும் அணையிட்டேன்!
                            பொய்யில் விளைந்த நாணத்தால்,
                                      பூவை சிவந்த புதிரென்ன?!

      - எழுதியது கு.மா.பாலசுபிரமணியன்.என்று நினைவிருக்கு.!  நெஞ்சில் நிழலாடும் கவிதைகளில் இதுவும் ஒன்று!!
    
      அப்புறம் ஒரு செய்தி: ஏதோ வைகை அணைப்  பிரச்னை என்றதும்                      "என்னடா இது,  மதுரைக்கு வந்த சோதனை! "என்று கவலைப்படக் கூடாதே!  என்ற நல்ல{ ?} எண்ணத்திலும்,  முல்லைப் பெரியார்  அணைப் பிரச்சனையில் கவலை படுகிறவர்களுக்கு  ஆறுதலாக? இருக்கட்டுமே!  என்றும்  இந்த  வைகை அணைக் கவிதை!
       கோவிச்சுக்க  கூடாது... கோவிச்சுகிட்டா..., அப்புறம், இதுபோல கவிதைகளை போட்டு,  இம்சைபண்ணிடுவேன்!!


    

Comments

 1. என்னது இன்னொரு கவிதையா?

  ReplyDelete
 2. கவிதைகளுக்கும் கவலைகளுக்கும் ,தமிழர்களிடம் பஞ்சமா,என்ன? நிறைய இருக்கு!

  ReplyDelete
 3. நன்றா? இப்படி பொதுவா சொல்லி பீதிய கிளப்புறாங்காலே!

  ReplyDelete
 4. பதிவு குளிர்ச்சியா இருக்கே! டெல்லியில குளிர் ஓசூரைவிட அதிகமா? குறைவா?

  ReplyDelete
 5. நல்ல பதிவு
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. ஹோசுரை விட அதிகமாக இருக்கு! அரசியல் தான் அங்கு சூடாக இருக்கும்போல!

  ReplyDelete
 7. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! நண்டு தெரியும்! அது என்னங்க நொரண்டு?

  ReplyDelete
 8. நான் கோவிச்சுக்கலை சகோ

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?