இந்திய அரசின் பரமபத விளையாட்டும் ஆடுபுலி ஆட்டமும்!

            மக்களது பிரச்சனையில் கவனம் செலுத்துவது  இல்லை  என்று  தீர்மானித்து  கொண்டு  இந்திய அரசு  செயல்படுகிறதோ ? என்ற சந்தேகம்  எனக்கு வருகிறது!
       பணவீக்கம் அதிகரித்து, ஏழை, நடுத்தர மக்கள்  முழி பிதுங்கி  வருகிறார்கள்! பண வீக்கத்தைக் குறைக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க  அக்கறை  காட்டியதாக தெரியவில்லை!  உர விலை  கடந்த 6 மாதத்தில் தாறுமாறாக  இரண்டு,மூன்று மடங்கு உயர்ந்து,   விவசாயிகள் தவிக்கிறார்கள். அதைபற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது!  நெசவாளர் பிரச்னை நீடிக்கிறது, அரசு மௌனம் காக்கிறது!  தெலுங்கானா பற்றி எரிகிறது, தேமே என்று பார்த்து கொண்டு இருக்கிறது. இப்போது, முல்லை பெரியார் அணையை உடைப்பதா? புதிதாக அணையை கட்டுவதா? என்று தமிழர்களும்,  அணையால் ஆபத்து.. அதனால் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று கேரளர்களும்  வரிந்து கட்டி  சண்டை இடுகிறார்கள்! ஆளாளுக்கு மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள், இப்போதும் பிடித்துவைத்த பிள்ளையார் கணக்காக மன்மோகன் சிங், காட்சி தருகிறார்!


      
        இந்த பிரச்சனைகள் மட்டுமல்ல, ஆதிவாசிகளின் ஜீவாதார பிரச்னை, மாவோயிஸ்ட்கள் பிரச்னை,  சுரங்க கொள்ளை பிரச்னை, கூடங்குளம் பிரச்னை, எப்போதும் தீர்க்க முடியாத  தமிழர்களின் பிரச்னை, மீனவர்களின் படுகொலைகள், பட்டினி சாவுகள், என்று வரிசை கட்டி நிற்கும்  பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை! 
                  ஆனால் இவைகளைத் தீர்க்கவும், வழிவகைகளைக் காணவும் உருப்படியாக எந்தவித ஆலோசனையோ, திட்டமோ, அரசிடம் இல்லை என்பது போல  நடந்து கொள்ளுகிறது!  குறைந்த பட்சம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி? என்று ஆலோசிக்க கூட முன்வராமல்   இருந்து வருவது, அதிர்ச்சி அளிக்கிறது! இந்த அரசின் நோக்கம்தான் என்ன என்ற கேள்வி எழுகிறது!


     
       இந்தியாவின் நதிகளை இணைத்தால், வறுமை ஒழியும்.!  விவசாய உற்பத்தி பெருகும், விவசாயம் சார்ந்த தொழில்கள் பெருகும், வேலை இல்லாத்  திண்டாட்டம் குறையும், குடிநீர் தட்டுபாடு  இருக்காது, நதி வழியே போக்குவரத்து  வசதியும் செய்யலாம்!  தரைவழி போக்குவரத்து செலவும் மக்கள் அவதியும் குறையும், பெட்ரோல் டீசல் தேவையும் குறையும் விலைவாசி உயர்வு  கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் ஏற்றுமதி வாய்புகள் அதிகரிக்கும் அந்நிய செலாவணியும் கிடைக்கும்! அண்டை நாடுகளிடமும் பன்னாட்டு நிதியமிடமும் பெற்றுள்ள கடனும் குறையும்! 

            ஆனால் அதுகுறித்து உருப்படியாக சிந்திகாமல் இருந்து வருகிறது! நடிகர் ரஜினிகாந்த் கூட, ஒருகோடி நிதியை நன்கொடையாக தருவதாக சொன்னார்! தந்தார என்று தெரியவில்லை! நதிகளை இணைப்பது குறித்த செலவு  இந்தியாவுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பது எனது கருத்தாகும்! இப்போது, தெரிந்துள்ள கருப்பு பணத்தை கைப்பற்றினாலே போதும், போதாது என்றால்  இரட்டை அலைவரிசை ஊழலில் பரிமாறப் பட்ட  பணத்தை கைப்பற்றி, செலவு செய்து   திட்டத்தை நிறைவேற்றலாம்!  மனது இருந்தால் மார்க்கமும் ஆதரவும் பெருகும்!
         ,ஆனால் அதைப்பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்று தெரிகிறது! ஏன் மக்களின் மீது அக்கறை இல்லை என்பதுபோல நடந்து கொள்ளுகிறது! பிறகு இந்த அரசுக்கு எதில் அக்கறை  என்று பார்த்தால், ஊழல்வாதிகளைக்  காப்பற்றவும்,அவர்களது கருப்பு பணத்தை காப்பாற்றவும் அக்கறை படுகிறது! அடுத்த பிரதமராக ராகுல் காந்தியை  அடையாளம்  காட்டவும்,முன் நிறுத்தவும் அககறைப்படுகிறது!  அந்நிய முதலாளிகளை, இந்திய  மண்ணில் கடைவைக்க அக்கரைபடுகிறது! அவசர அவசரமாக ஆட்சியாளர்கள் ஆலோசனை செய்கிறார்கள், எதிர்ப்பு தோன்றியதும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கெஞ்சுகிறார்கள்!
        இவைகளைப் எல்லாம் பார்க்கும்போது, பிரச்சனைகளை கொண்டே , மக்களை திசை திருப்பவும், பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும், மறக்க செய்யவும் முயன்று வருகிறதோ இந்த அரசு? என்று தோன்றுகிறது!  இந்தியாவில் தீவிரவாதம் வேகமாக பரவி வருகிறது... இந்த நகரங்களுக்கு  ஆபத்து!  உளவுத்துறை எச்சரிக்கை!  மம்தாவுக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து, முக்கிய தலைவர்களை கொள்ள தீவிரவாதிகள் திட்டமிடுகிறார்கள்!  உபி- மக்களை மாயாவதி பிச்சை காரர்கள் ஆக்கிவிட்டார். மகாராஷ்டிராவில் உள்ள வேறு மாநிதவர்களுக்கு வேலை இல்லை, வெளியேற வேண்டும்!  என்பது போன்ற செய்திகள் மக்களை திசைதிருப்பும் யுக்திகளோ என்று தோன்றுகிறது !

              அதைப்போலவே, உச்சநிதிமன்ற தீர்ப்பை கர்நாடக மதிக்காது,ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளாது! ! கேரளா  அரசு மதிக்காது. மத்திய அரசு கேள்வி கேட்காது! தமிழக மீனவர்களை சிங்கள கடல் படை  கொன்று குவிக்கும், இந்திய கடலோர காவல்படையும் இந்திய அரசும் எதுவும் சொல்லாது! என்பதெல்லாம்  ஆட்சியில்  உள்ளவர்கள் ஆடும் நாடகமாகவும்  பரமபத விளையாட்டு போலவும் தோன்றுகிறது!          { வடிவேலு பாணியில்  }  :         யாரங்கே ?" இந்திய அரசு குறைந்த பட்சம் நதிகளையாவது  தேசியமாக்குமா?" என்று கேட்டு," ஓலை" ஒன்று அனுப்புங்கள்!  அதாங்க, கடுதாசி  அனுப்புங்கள்!    யார் பெயரில்  அனுப்புவது என்றா கேட்கிறாய்?   "பராக் ஒபாமா"  பெயரில்  அனுப்பு, அப்படியாவது வேலை நடக்கட்டும்!!


Comments

 1. ஃபினிஷிங் டச் சூப்பர்...

  ReplyDelete
 2. nandri pirabakar! busiya ieunthum comment pottathukku!

  ReplyDelete
 3. கடைசி வரிகள் சூப்பர்

  ReplyDelete
 4. // இவைகளைப் எல்லாம் பார்க்கும்போது, பிரச்சனைகளை கொண்டே , மக்களை திசை திருப்பவும், பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும், மறக்க செய்யவும் முயன்று வருகிறதோ இந்த அரசு? என்று தோன்றுகிறது!//

  அதில் சந்தேகமே வேண்டாம்..

  ReplyDelete
 5. வாஞ்சூர் அய்யா அவர்களுக்கு, பழனிபாபா வின் பேச்சுக்கள், எழுத்துக்கள், ஆகியவற்றை தொகுத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையில் " உறங்கும் எரிமலையின் உரிமைக்குரல்" என்றொரு நூலை 2008 -யில் வெளியிட்டுள்ளேன்! நீங்கள் குறிபிட்டுள்ள ராமகோபாலனுக்கு மறுப்புரை இரண்டாம் பதிப்புடன் மார்சிய பார்வையில் தோழர் பழனி பாபாவின் சொல்லும் செயலும் என்ற நூலை எனது நண்பர் விந்தை வேந்தன் என்பவரை வைத்து எழுத வைத்துள்ளேன்! தங்களுக்கு தேவை இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள்!

  ReplyDelete
 6. கோவி நண்பருக்கு நன்றி!

  ReplyDelete
 7. சூரிய ஜீவா மனிக்கவும். நான் தலை நகர் தில்லிக்கு ஒரு வேலையாய் போனதில் பத்து நாட்கள் இணையம் பக்கம் வரவே முடியாத நிலை!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?