தேசபக்தி, தீவிரவாதமான சுவாரசியமான கதை... இது!

         இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள், உயிர் நீத்தோர், சிறையில் சித்திரவதைப் பட்டோர், ஆங்கிலேயரால் மரண தண்டனை அடைந்தவர்கள்  பலர். அவர்களில் சிலரே காங்கிரசுகாரர்கள்!  வெகு சிலரே  இன்று,  தேச  பக்தியை    ஏகபோகமாக,  தங்களது உரிமையாக கொண்டாடிவரும்  இந்துத்துவ வாதிகளாவர்!  இன்று தேசபக்தியை காட்டும் இவர்கள்... அன்று.... ஆங்கிலேயருக்கு எதிராக நாம் போராடினால் ஆபத்து என்று நினைத்து,  இந்தியமக்களை சமாதானப் படுத்தவும், அவர்களுக்கு சிற்சிறு சலுகைகளைக்  கொடுக்கவும், ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட காங்கிரசு கட்சியில் கூட தங்களை இணைத்துக் கொண்டு போராட முன்வரவில்லை. !

       இன்றைய இந்துத்துவ  வாதிகளும், அவர்களது தலைவர்களும்  இந்திய தேசத்தின் விடுதலையை விட, அன்று பெரிதாக நினைத்தது என்ன தெரியுமா?  ஆங்கில அரசின் அடிவருடிகளாய் இருந்து,   அவர்களிடம்  ஊழியம் பார்த்து, ஊதியம் பெற்று, உண்டி வளர்ப்பதைதான்! வங்காளத்திலே பஞ்சம் ஏற்ப்பட்டு, மக்கள் மடிந்தபோது... இவர்கள் ஆங்கில அரசாங்கத்துக்கு, நம்மை அடிமைப் படுத்தி, அடக்கி ஆளும் ஆங்கிலேய ராணுவத்துக்கு உணவுப் பொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் போட்டு, தங்கள் வருமானத்துக்கு வழி செய்து கொண்டவர்கள்! இந்திய மககளுக்கு இப்படி தாங்கள் செய்த துரோகத்தை, ஆங்கிலேயருக்கு தாங்கள் காட்டிய விசுவாசக் கதையை- வரலாறை இன்று மறந்துவிட்டார்கள்! மக்களின் பார்வையில் படாமலும் மறைத்து விட்டார்கள்!

        அதுமட்டுமா?  அன்று.. ஆங்கில அரசுக்கு எதிராக,      தீவிரமாக போராடியவர்களது தியாகத்தையும் வீரத்தையும் கூட மக்களின் பார்வையில் படாமலும் மறைத்து விட்டதுடன், சுதந்திரப் போராட்ட  வரலாற்றில் இருந்து மறைத்து விட்டார்கள்!  அவ்வாறு மறைக்கவும் மறக்கவும் செய்துவிட்டு...   இன்று,   இந்தியாவை காப்பாற்ற பிறந்த தேசபக்தர்களாக  தங்களை   சித்தரித்துக் கொண்டு வருகிறார்கள்! அதுமட்டுமா? அன்று யாரெல்லாம் இந்த தேசத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போராடினார்களோ, அவர்களை இன்று தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும்  காட்டி வருகிறார்கள்!

      சுதந்திரத்துக்காக  தங்களது சுகபோகங்களைத் துறந்து போராடியவர்கள், இன்று வரலாற்றில் இருந்து மறைக்கப் பட்டு,  வருபவர்கள்    யார் தெரியுமா?  இந்த மண்ணின் மைந்தர்களான... இந்துமத  இழிவை ஏற்றுக்கொள்ளாமல் ,  வெளியேறிய...  முஸ்லிம்கள்தான்!  காங்கிரசு கட்சியில் மட்டுமின்றி, முஸ்லிம் லீக்  கட்சியல்  மட்டுமின்றி, தனிநபர்  போராளிகளாகவும்  பல்வேறு சமஸ்தானத்தின் கீழும் சுதந்திரத்துக்காக  போராடிய முஸ்லிம்களின்  எண்ணிக்கை  பல்லாயிரம் கணக்கில் இருக்கும்! இவர்களது சுதந்திரப் போர், ஆங்கிலேயருக்கு  எதிராக மட்டும் நடந்த போராட்டம் இல்லை,  ஆதிக்கத்துக்கு எதிராகவும்,ஒட்டுமொத்த அந்நியர்களுக்கு எதிராகவும்  நடந்த போராட்டமாகும்!

      இருபத்தி அயிந்து போர்கப்பலுடனும், கோலத்ரி மன்னனின் ஆதரவுடனும் வந்த போர்த்துகீசிய படைத்தளபதி  மார்டின் டி சோஸா-வை "நமது தாயக மண்ணில் அன்னியரை காலுன்ற அனுமதிக்க கூடாது"என்று  குஞ்சாலி மரைக்காயர் 200 -  போர்க்கப்பலுடன் 1523 -லில்  இருந்து 1538 - வரை போரிட்டு, போர்துகீசியர்களை பலபோர்களில் தோற்கடித்தார்!

    1921 - ஆகஸ்டில்  துவங்கிய  { ஒத்துழையாமை இயக்கப்} புரட்சியில் மலபார் பகுதியில் ஆங்கிலேயரின் மிருகத்தனமான தாக்குதலில் இறந்தவர்கள் 2266 -பேர்கள்.! காயமடைந்தவர்கள் 1615 -பேர்கள்.! கைதுசெய்யப் பட்டவர்கள்,5688 -பேர்கள்!
கிளர்சியில் கைதுசெய்யப்பட்டவர்கள்  19 .11 . 1921 -லில்  ஷோரனூரில்    இருந்து கோவை சிறையில் அடைக்க  சரக்கு வாகனத்தில் அனுப்பப்பட்டனர்  மூச்சு திணறி 70 - பேர்கள் இறந்தனர்!    இப்படி நமது சுதந்திரத்திற்காக, நமது நாட்டுக்காக போராடிய தேசபக்தர்களான  முஸ்லிம்கள் தான் இன்று தீவிரவாதிகளாக  ஆக்கப் பட்டுள்ளனர்!  ஆங்கிலேயருக்கு அன்று அடிமைச்  சேவகம் பார்த்த,,   ஆதிக்கவெறி    பிடித்த  இன்றைய    இந்துத்துவா கும்பல்களால்!  


       அதுமட்டுமில்லை, இந்துமதப்போர்வையில்,இன்று அவர்களை வேட்டையாடி வருகின்றனர்!  இந்திய சுதந்திரத்துக்கு பின், மதக் கலவரங்கள் என்ற போர்வையில் கொள்ளப் பட்டவர்களில் முஸ்லிம்களே அதிகமாகும்!

           1960 -முதல்  1970   வரை நடந்த 7974  கலவரங்களில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்-833 பேர்கள்.      1971 - முதல் 1981 - வரை 5000 கலவரங்களில்  765 முஸ்லிம்கள் . 1981 ஆண்டு 319 கலவரங்களில் 150 முஸ்லிம்கள்.  1982   ஆண்டு 474 கலவரங்களில் 181 -  முஸ்லிம்கள் .  1983  ஆண்டு 500 கலவரங்களில் 210 முஸ்லிம்கள். 1984 ஆண்டு 476 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை. 1985 ஆண்டு 525 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை. 1986 ஆண்டு 145 கலவரங்களில் முஸ்லிம் எண்ணிக்கை தெரியவில்லை,காயமடைந்தவர்கள் 432. 1989 ஆண்டு மும்பை கலவரத்தில் 11 முஸ்லிம்கள். 1990 - பரோடாவில் நடந்த கலவரம் எண்ணிக்கை தெரியவில்லை. 1992 ஆண்டு இந்தியா முழுவதும் 1700 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 500 பேர்கள் காயம் அடைந்தனர். மும்பையில் மட்டும் 1100 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1993 ஆண்டு  மும்பையில் 880 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.  1997 ,   1999 ,2000 ,   2002 ,  2003-யில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள்,படுகொலைகள் போதாது என போலிசு துப்பாக்கி சூடுகள்!

       நேர்மையான இந்தியா ஜனநாயக வாதிகள்...  இந்த படுகொலைகளுக்கு என்ன காரணம் என்பது  குறித்து சிந்திப்பதில்லை! அப்படியே சிந்தித்தாலும்   அதனை வெளிப்படையாக்குவது இல்லை!!   ஏன் என்றால்,  முஸ்லிம்கள்  தேசபக்தர்கள்  என்பது  மறைக்கப்பட்டு, தீவிரவாதிகள்  ஆக்கப் பட்டு விட்டது தான் !!      ஆங்கிலேய அடிவருடிகள், இன்று தேசபக்தர்களாக  வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி வருவதுதான்!

     இந்த கதைக்கு படங்கள் தேவைபடுவோர் .. தாங்களே  மனதில் தோன்றும் படங்களைப் பொருத்திக்  கொள்ளலாம்!

   


    

Comments

 1. முஸ்லிம்கள் தேசபக்தர்கள் என்பது மறைக்கப்பட்டு, தீவிரவாதிகள் ஆக்கப் பட்டு விட்டது தான் !! // இதுதான் உண்மை தலைவரெ..

  ReplyDelete
 2. நன்றி கருண் . அப்புறம் பார்கலாம்!

  ReplyDelete
 3. நல்ல பதிவு.

  வாழ்த்துகள்.

  தொடருங்கள்.
  =============

  வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

  நதிகளில் ஒரு துளி.

  சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

  ******
  விடுதலைப் போரின் விடிவெள்ளி- . உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய மாவீரன் திப்பு சுல்தான்- இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை -
  *******

  ++++++++++++++++++++++++++++++


  Click the links and see videos

  1.
  உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video.


  2.
  ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை .அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே"


  3.
  தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில்.


  4. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

  5. இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. ?

  6. http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_09.html>நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! சபாஷ்!!! நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களே !!!

  7.
  இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.  .

  ReplyDelete
 4. மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.-

  "நீதிபதி மார்கண்டேய கட்ஜு"


  ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்

  ‘குண்டு வைத்தது நாங்கள்தான்
  என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘

  என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

  அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.

  எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.

  யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

  முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

  எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

  மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.

  நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

  மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

  குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது

  என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்? - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு"

  click to read

  ***** நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! சபாஷ்!!! நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களே !!! *****


  .

  ReplyDelete
 5. வாஞ்சூர் அய்யாவுக்கு முகரம் வாழ்த்துக்கள்! உண்மைதான் இந்தியா ஒரு தேசம் எனபது கூட ஏமாற்று வேலைதான்!

  ReplyDelete
 6. My Dear Hosur Rajan,

  Thank you for your Muharram greetings

  May you be blessed and guided with the best
  by "ALMIGHTY".

  Regards.
  Vanjoor

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?