"இந்துத்வா " என்பது மதமா, ஆதிக்கத்தின் ஆணிவேரா?

       இந்து மதத்தை  கண்மூடித்தனமாக பின்பற்றும்,ஆதரிக்கும் கொள்கைகளை தமிழர்களாகிய  நம்மில் பலரும் ஏற்றுக்கொண்டு உள்ளது வேதனை அளிக்கிறது! இந்துத்துவம் என்பது, இந்துமதக் கொள்கைதான்   என்ற  குறுகிய கண்ணோட்டம் தவறானது. அது, ஆதிக்கத்தின் மறுவடிவம்,பிரதி பிம்பம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் சமத்துவத்திற்கும்  ,சமஉரிமைக்கும், சமநீதிக்கும்,   ஏன்? ஓட்டுமொத்த மனித நியதிகளுக்கு எதிரான ஒரு கொள்கை என்பதை அவர்கள்  புரிந்து கொள்ளவில்லை  என்றும் நினைக்கத் தோன்றுகிறது!


    
            இன்று,    இந்திய நாட்டில் நிகழ்ந்துவரும் பல்வேறு குளறுபடிகளுக்கும், உரிமை மறுப்பு போராட்டங்களுக்கும் பின்னணியில் இருந்து வருவது, இந்த இந்துத்துவம் என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆதிக்க வெறிதான் காரணம்!  காஷ்மீர் பிரச்னை,தெலுங்கான பிரச்னை,கூடங்குளம் பிரச்னை,     ஈழத்து தமிழர்களின் பிரச்னை,     மேற்கு வங்க மக்களின் போராட்டம்,ஆதிவாசிகளின் வாழ்வாதாரப் போராட்டம், முல்லை பெரியாறு பிரச்னை,  என்று..... இந்தியாவில் நிலவியும், நீடித்தும் வருகிற,      எந்த போராட்டமானாலும், அதற்கு பின்னணியில் இந்துத்துவம் என்ற ஆதிக்கவெறி இருந்துவருவதைக் காணமுடியும்!     சாதிய மோதல்கள்,மத மோதல்கள்,  அது தொடர்பான  கலவரங்கள், சர்ச்சைகளுக்குப் பின்னாலும்  இவைகளே இருந்து வருவதைக் காணலாம்!


           கீதைக்கண்ணன்  சொன்னதுபோல," எல்லாப் பொருளிலும் நான் இருக்கிறேன்,எல்லாப் பொருளும் எனக்குள் அடக்கம்" என்றதைப் போலவே   இந்துத்துவம் என்பதும் ,   " நமது எல்லாப் பிரச்சனைகளுக்கும்,  நமக்கு ஏற்படும்  தீமைகளுக்கும் காரணமாக உள்ளது!"   இந்துத்துவம்  என்பது, ஆதிக்கத்திற்கு எதிரான எந்த ஒரு நிகழ்வையும்  நாம் செய்ய   அனுமதிப்பதில்லை,.  ஏற்றுக் கொள்வதும் இல்லை!    இந்துத்துவாவை,  'ஆக்டோபஸ்' என்ற  கடல் பிராணிக்கு ஒப்பிடலாம்.   ஆக்டோபஸ் எப்படி தனது,  "  எட்டு  ரத்த உறிஞ்சிகால்களைக் கொண்டு     தனக்கு  அருகில் வரும்,    உயிர்களைப் பிடித்து இரையாக்கிக் கொள்கிறதோ...,   அப்படி,   இந்துத்துவாவும் தனது ஆதிக்கத்திற்கு எதிராக செயல்படும் எவரையும் விட்டுவைப்பது   இல்லை! எதிராக  செயல்படும் அமைப்புகளையும்  விடுவதில்லை!!     ஒன்று அடக்கிவைப்பது,     முடியாவிட்டால் அழித்து விடுவது என்று  செயல்பட்டு வருகிறது!.              இந்துத்துவம் தனது ஆதிக்க வெறியை தொடரவும், தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தி வரும் சில உபாயங்கள்:

   1 ] தங்களது ஆதிக்கத்தை எற்றுகொண்டவர்களை அரவணைத்து,அடிமைகளாகி தனது ஆதிக்கத்தின் கீழ் நீடிக்க செய்துவருவது!                {  பிற்படுத்தப் பட்ட இந்து மக்கள், தாழ்த்தப் பட்ட ஆதிதிராவிட மக்கள்}

  2 } இந்து மதம் மேன்மையானது,   எனப் பொய்யான தகவல்களைக் கூறியும், பரப்பியும் தொடர்ந்து,      அவர்களை தங்களது சேவைக்கு பயன்படுத்தி கொள்வது!    { கோவில்களைக் கட்ட, எதிரிகளான பிறமதத்தினரை தாக்க, தங்களை தலைவர்களாக போற்றும்படி செய்ய,}

 3 } சாதி வேறுபாடுகளை கடைபிடித்து,சமூகத்தில் தொடர்ந்து அதை நீடிக்க செய்வது,                              {சோ அய்யர், சிதம்பரம் செட்டியார்,வெங்கைய நாயுடு,  கருப்பையா மூப்பனார், முத்துராமலிங்க தேவர், வரதராஜ முதலியார், கிருஷ்ண சாமி ரெட்டியார்,  }

4 ] தங்களது மேலாதிக்கத்திற்கு, ஆதிக்க வெறிக்கு உதவ, கடவுள்களையும், ஆன்மீகத்தையும், போர்வையாக கொண்டு செயல்படும் அமைப்புகளை உருவாக்கி நடத்துவது, அவைகளை ஊக்குவித்தும், ஆதரித்தும் வருவது!,              { அனுமன் சேனா, பஜ்ராங்கதல்,,ஜன மோர்ஜன்,ஜன கல்யான், விஷ்வ இந்து பரிஷத், சங்கரமடம்,சிவசேனா}  {கண்டகண்ட கருமாந்திரங்கள் பெயரில் பல அமைப்புகள் உள்ளன.நினைவுக்கு கொண்டுவந்து,நிரப்பிக் கொள்ளுங்கள்.}        தந்தை பெரியார் , {மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டம் என்று நினைவு}   நான்கு வர்ணங்கள்  என்றால் என்ன? பிராமணர்கள் என்பவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்போர் யார்? என்பதுபற்றி  விளக்கி பேசிக்கொண்டிருந்தார்!.    கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, "அய்யா,,  நான்கு சாதிகள் சரி, 'பஞ்சமர்கள்'  என்று...  ஒரு சாதியைப் பற்றி, சொல்லுறாங்களே?,  அவங்கல்லாம் யாரு?"  என்று பெரியாரிடம்    கேட்டார். பெரியார்அதற்கு, "அவங்கதான், அப்பா-அம்மாவுக்கு{ முறையா }  பிறந்தவங்க"!   என்று சொன்னதுடன், " இந்துமதத்தில்  உள்ள ஏற்ற தாழ்வுகளை கண்டு, அந்த மதத்தை வெறுத்து ஒதுக்கி, இந்துமதத்தை விட்டு  வெளியேறிய  பிற மததினரையே, பஞ்சமர்கள் என்று இந்துமத வாதிகள் அழைக்கிறார்கள்!"  என்றும் விளக்கினார்!

      இந்துமதத்தை வெறுத்து வெளியேறி, பிற மதத்தில் தஞ்சம் அடைந்த, பிற மதத்தை தழுவியவர்கள்  ஆன , "பஞ்சமர்கள்" என்ற  சிறுபான்மையினர் மீது, இந்துத்துவ வாதிகளுக்கு,   தங்களது ஆதிக்கத்தை  ஏற்றுக்கொள்ளாமல், தங்களை விட்டு விலகி சென்றவர்கள் என்பதால், எப்போதும்  வெறுப்புணர்வும்,  பகையுணர்ச்சியும்    இருந்து வருகிறது!  அதன விளைவே,  இந்தியாவில் இதுவரை நடந்து வந்த மதக் கலவரங்களும், அதன் தொடர்ச்சியாக     நடந்து வரும்   இனப் படுகொலைகளும்  ஆகும்!                                                
                           மதக் கலவரங்களில்  படுகொலையான பஞ்சமர்களைப் பற்றி,...            பிறகு பார்க்கலாம்!


Comments

 1. SEE MY BLOG
  KNOWLEDGE SHARING http/ananthako.blogspot.com

  www.inaimoli.com

  ReplyDelete
 2. click and read

  >>>> 1.இந்து மதம் எங்கிருந்து வந்தது?

  2.இந்துமதம் இந்திய மதமா?இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

  3.>>>> இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை விரும்பினால் இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ நேருவின் கோபம் <<<<

  4. >>>> எது இந்து மதம்? நம்தேசத்தில் இருந்த 450 மதங்களில்.? சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ஏன்? வேதங்களில் ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது. ‘ஹிந்து’ என்ற பெயர் நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம். <<<<

  .

  ReplyDelete
 3. மனிதனுக்கு மதம் பிடித்து விட்டால் அவன் மிருகம் ஆகிறான் என்பதை தவிர சொல்வதற்கு வேறு என்றும் இல்லை...

  ReplyDelete
 4. சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அனந்தகிருஷ்ணன் அய்யாவுக்கு நன்றி! மதங்களை மதவாதிகள் {அரசியல் வியாதிகள்} எனபடுவோர் பயன்படுத்தும் விதம் குறித்தும்,அதனால் விளையும் விபரீதம் குறித்தும் பேசுகிறேன்!

  ReplyDelete
 6. தமிழர்கள் தன்மானத்துடன், சுய சிந்தனையை இன்னும் இழக்காமல் இருப்பதை உங்களால் எண்ணங்கள் மூலம் அறிகிறேன்! நன்றி தமிழா..நன்றி!

  ReplyDelete
 7. மனிதனுக்கு மதம் பிடித்ததன் விளைவு என்னவென்று தெரியுமா,ஜீவா? மாதிரிக்கு அடுத்தப் பதிவைப் பாருங்கள்!

  ReplyDelete
 8. சுவனப் பிரியனுக்கு நன்றி, அடுத்த பதிவையும் பாருங்கள்! அன்புடன், ராசா!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?