பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா?

             மகாபாரத்தில் அருசுனனுக்கு கண்ணன் கூறுவதை கீதோபதேசம் என்றும் அதையே,   " பகவத்கீதை " என்றும்  சொல்கிறார்கள்!     இந்த பகவத் கீதையைத்தான்   இந்துக்களின் புனித நூலாக,  இந்து மதத்தில் சிறிய அளவில உள்ள பிராமிணர்கள் வலிந்து கூறிவருகிறார்கள்!    எத்தனையோ புராணங்கள், திருவிளையாடல்கள், பக்தி நூல்கள், பஜனைப் பாடல்கள், பாமாலைகள், இருக்க,        அவைகளுக்கு இல்லாத சிறப்பும் பெருமையும்  பகவத் கீதைக்கு இருப்பதால் தான் புனித நூலாக சொல்லுகிறார்களா? என்ற கேள்வி  என் மனதில் அவவப்போது,   எழுவதுண்டு!
      இந்துமதத்தில் ' சைவம்- வைணவம் 'என்ற இரண்டு பிரிவுகள் உள்ளநிலையில், வைணவ நூலான பகவத் கீதையை எப்படி சைவர்கள்  புனித நூலாக ஏற்றுக்கொண்டார்கள்?  இத்தனைக்கும் வைணவர்களை விட இந்துமதத்தில் சைவர்களே அதிகம் இருகிறார்கள் என்கிற நிலையில்,  சைவர்களும் பகவத் கீதையை புனித நூலாக  ஏற்றுகொண்டார்கள்  என்பது  உண்மையாக  இருக்குமானால்,  சைவர்களின் எந்த நூலுக்கும் புனித நூலாகும் தகுதி இல்லை என்பதை  சைவர்கள்  ஒப்புக் கொண்டுள்ளார்கள்  என்றுதானே ஆகிறது?  போகட்டும், அது சைவர்களின் கவலை!
          பகவத் கீதையை  இந்துமதத்தின் புனித நூலாக ஏற்றுக் கொள்ளுவதற்கு காரணம் ,   அதை பகவான் கண்ணன்  அருளியது.என்று சிலர் வாதிடலாம்!   அப்படி வாதிட்டால், மற்ற அனைத்து பக்தி நூல்களும், இந்து மத புராணங்களும் மனிதர்களால் ஆக்கப்பட்ட  குப்பைகள்தான் என்பதை ஏற்றுகொள்ள வேண்டி வரும்!   இது ஒருபுறம் இருக்கட்டும், பகவத் கீதையில் அப்படி பகவான் கண்ணன் என்னதான் சொல்லியிருகிறார்?   எதனைப் புனிதமானதாக கூறுகிறார் என்று பார்த்தால்,    ராஜாஜி முன்பு தமிழகத்தில் கொண்டுவந்தாரே,   'குலக் கல்வி'  என்று?  அதைப்போல பகவான் கண்ணனும், அவரவருக்கு உரிய தொழிலை கைவிடக்கூடாது, எனக் கூறுகிறான்! அதாவது நான்கு வர்ணதர்மத்தை வலியுறுத்துகிறார்.

        குருஷேத்திர யுத்தத்தில்  எல்லோருக்கும் பொதுவான தர்மத்தை, அறத்தை,போதிக்க வேண்டிய கண்ணன்,பார்பனியத்தை.. சாதிப் பாகுபாடுகளை   நியாயப் படுத்துகிறான்!  பார்பனீயத்தை வலியுறுத்தி வருவதால்தான், பகவத் கீதையை  இந்துகளின் புனித நூலாக வைணவர்கள் எனப்படும் பிராமிணர்கள் காட்டுகிறார்கள்!  அர்ச்சுனன்,      புத்தமதக் கொள்கையாகிய  'கொல்லாமையை 'நினைத்து கூறுகிறான்,        " எதிரில் இருக்கும்  எனது உறவினர்களை     ஈவு இரக்கமின்றி கொல்ல.... நான் விரும்பவில்லை.!     கண்ணா,  போர்களத்தை விட்டு நான் போகிறேன்"

         அதற்கு கண்ணன்,    "அர்சுனா   நீ.. சத்திரியனாக பிறந்து விட்டு,  உனது சுதர்மத்தை விட்டு-உனது கடமையை விட்டு ,போகிறாய்.   ஒருவன் தனது சுதர்மத்தை விட்டுவிடக் கூடாது.   வேறு ஒருவரின் தர்மத்தைப் {புத்தர்} பின்பற்றவும் கூடாது"  என்றும்   "ஒருவன் தனது சாதிக்கு உரிய தர்மத்தை செய்து  மரணமடைவது, பிறருடைய தர்மத்தை  செய்து பெருவாழ்வு வாழ்வதைவிட மேலானது!" என்றும் கண்ணன் கூறுகிறான்.      { டாக்டர். ராதாகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு}  அதாவது,  அர்ச்சுனன் பிறந்த சாதியைக் குறிப்பிட்டு,  உன் சாதித் தொழிலை விடக்கூடாது  என்று வலியுறுத்துகிறார். மனுஷ்மிருதியில், '"வேறு சாதித் தொழிலைச் செய்வது பெரிய குற்றம்' " என்பதையே மனதில் கொண்டு, கண்ணன் பகவத் கீதையில் அவ்வாறு கூறுகிறார்!         கண்ணன் அதைமட்டுமா, கூறுகிறார்?  " நானே கடவுள்,. நானே.. நான்கு வர்ணங்களைப் படைத்தேன்,    நானே நினைத்தாலும் இதை மாற்ற முடியாது.!" அதாவது,     சாதி முறையைக் கடவுள்தான் படைத்தாராம்.   அந்த கடவுள் நினைத்தாலும் சாதி முறையை மாற்ற முடியாதாம்!?    சாதிமுறையை யார் மாற்ற முனைந்தாலும்  அப்போது, "நான் பிறந்து,அவர்களை அழிப்பேன் " என்று பயங்கரவாதத்தை அர்ச்சுனன் மனதில் கண்ணன் விதைக்கிறான்!
   " எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சியடைந்து, அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் பிறக்கிறேன்" இங்கே தர்மம் என்று கண்ணன் கூறுவது சாதீய தர்மம்தான்! 

            நமது புனித நூலின் பெருமையைப் பார்த்தீர்களா?   இந்த நூலைத்தான் நீதிமன்றங்களில் சத்தியம் வாங்க பயன்படுத்துகிறார்கள்!  ராஜஸ்தான் மாநில அரசு, பகவத் கீதையை,  பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்து உள்ளதாம்.!            நமது நாடு,   மதசார்பற்ற  நாடுன்னு  பெருமைப் பட்டு,   எல்லோரும் ஒருமுறை   ஜோரா கைதட்டுங்க...,!


Comments

 1. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
  இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

  தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 2. பகவத் கீதை ஒருவன் படித்து, அதில் வரும் சந்தேகங்களுக்கு விடை தேடினாலே அவன் நாத்திகனாய் மாறி விடுவான்.. விடுங்க தோழர் சிந்திக்கும் மக்கள் கீதையை முழுமையாக படிக்க வேண்டும்... அப்பொழுது தான் தெளிவு பிறக்கும்... பகவத் கீதை என்பது பல நபர்களின் இடை செருகல் கொண்டது ஆகையால் அதில் முரண்கள் மலிந்து கிடக்கும்.. முதல் அத்தியாயத்தி படித்தது நான்காவது அத்தியாயத்தில் தவறு என்று இருக்கும்..

  ReplyDelete
 3. நன்றி மாசிலா நண்பரே! எனதுவ் அடுத்த பதிவை பாருங்கள்!

  ReplyDelete
 4. புதிய தென்றலுக்கு நன்றி! உங்கள் பதிவுகள் பூகம்பத்தை ஏற்படுத்தும் பதிவுகள்!

  ReplyDelete
 5. நண்பர் சூரிய ஜீவாவுக்கு, உங்களது கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்துகிறது! நன்றி!

  ReplyDelete
 6. intha kuppai pativai ezhutiya muddaalai antha paramaatmaa krishnar kaapaatrattum!

  ReplyDelete
 7. குப்பை பதிவா? இல்லை பகவத் கீதையை குப்பை என்கிறீர்களா? பகவான் கிருஷ்ணனையே... மதவாதிகளிடம் இருந்தும்,அரசியல்வியாதிகளிடம் இருந்தும், மட அதிபதிகளிடம் இருந்தும் நாம்தான் காப்பற்றவேண்டும் அன்பரே!

  ReplyDelete
 8. இறைவனை அடையவழி காட்டினால், இறைவனை விட்டுவிட்டு வழிகாட்டிகளை கடவுளாக்கி விட்டனர்! இன்றைய உலகின் ஒரே பிரச்சினை இது தானே! மதவாதம்தானே! எல்லா மகான்களும் இறைவனைத்தானே காண, அடைய வழிகாட்டினார்!
  http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_21.html

  ReplyDelete
 9. osor rajan avargale thamizhargalai nam vazhikku konduvaruvom ippadipatta samudhaya seerthiruththa padhivugali thodaravendum nandri

  ReplyDelete
 10. பகவத் கீதையின் வாசகங்கள் சரி...நீங்கள் புரிந்து கொண்ட காரணங்கள் தவறு...

  போலீஸ்காரனுடைய மகன் குற்றவாளி என்று வைத்துக் கொள்வோம். அந்தப் போலீஸ் தன் மகனை பிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்ற தயங்குகிறார். ஒரு போலீஸ்காரனுக்கு குற்றவாளியை பிடித்து சட்டத்திடம் ஒப்படைப்பது தான் தர்மம் என்று சொல்வதில் சாதி எங்க இருக்கு ?

  எல்லா காலத்துலயும், எல்லா நாடுகளிலும் மக்களை வெவ்வெறு வகையாக வகைப்படுத்தித் தான் வச்சிருக்காங்க. ப்ரீமியம், இலைட்...எகனாமி க்ளாஸ், பிசினஸ் க்ளாஸ், தரை டிக்கட், பெஞ்ச் டிக்கெட் இப்படி சொல்லிட்டே போகலாம். அது போல அந்தக் காலக்கட்டத்துல வகைப்படுத்தி வைத்து அப்படி. அவை இக்காலத்துக்குப் பொருந்தாது.

  ReplyDelete
 11. உங்களது உன்னத எண்ணத்தை வெளிபடுத்துகிறது உங்கள் கருத்து. நன்றி முண்டகண்ணன் அவர்களே!

  ReplyDelete
 12. பொருந்தாது என்பது சரியே! ஆனால் இன்றும் பகவத் கீதையை ஏன் நாம் பின்பற்றவேண்டும்? சாதிய வஞ்சனயும்' சமுதாய பாகுபாடும் ஏன் தொடரவேண்டும்? சொல்லுங்கள்! தொடர்கிறது என்பதால்தான் அவைகளை நாம் ஆய்வுக்கு உள்ளாகி வருகிறோம்! நன்றி கபிலன்

  ReplyDelete
 13. ஆரியப் பண்பாட்டாளர்களது படையெடுப்பால் தமிழன் இந்து ஆனான். தேவகால நால்வர்ண தர்மத்தை ஏற்றுக் கொண்டான். அந்தத் தர்மம்தான் தமிழனை சூத்திரனாக்கி பார்ப்பானை பிராமணன் ஆக்கியது. தமிழன் அதை ஒத்துக்கொண்டான். இன்று கூட தன்னால் கோயில் மணி அடிக்கும் தொழில் செய்யமுடியாது என ஒத்துக்கொண்டு அதனைப் பார்ப்பானர்களிடம் கொடுத்துவிட்டு இவன் வெளியே நின்று சாமி கும்பிடுகிறான். கற்புக்கரசி கண்ணகி இருக்க அய்வருக்கும் "பத்தினி" ஆக இருந்த பாஞ்சாலிக்கு (துரோபதைக்கு) கோயில் கட்டி கும்பிட்டான் என்றால் தமிழன் தாழ்ந்ததற்கும் வீழ்ந்ததற்கும் வேறென்ன சான்று வேண்டும்? இன்று தமிழன் கும்பிடும் எண்ணிறந்த கடவுளரில் ஒருவர் நீங்கலாக மற்றவர்கள் எல்லாம் ஆரியர் வணங்கிய கடவுளரே! அந்த ஒருவர் சங்க கால நடுகல் வழிவந்த வேலன் அல்லது முருகன்! அவர் திருமணம் செய்தது குறிஞ்சி நிலத்தில் தேனும் தினைமாவும் மான் மரை இறைச்சியும் சாப்பிட்டு வாழ்ந்தவர்கள். இன்று தமிழர்களின் சாபக்கேடான சாதி அமைப்பில் கடைக்கோடிக்குத் தள்ளப்பட்டவர்கள். மிக அண்மைக்காலம் வரை சாதி இந்துக்கள் வள்ளி, முருகன், கந்தன், வேலன் என்ற பெயர்களை வைப்பதில்லை. ஆனால் பழனி மலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் எனக் கோயில் கோயிலாகச் சென்று முருகனையும் வள்ளியையும் கும்பிடுகிறார்கள். முருகனது இன்னொரு மனைவியான தெய்வயானையை ஆரியர்கள்தான் முருகனை கந்தஸ்சாமி ஆக்கி அவனுக்கு இரண்டாம் தாரமாகக் கட்டிவைத்தார்கள்.

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?