காந்தி தேசம் V/S சோனியாவின் நேசம்!

           ஊரில் சிலரைப் பற்றி சொல்லும்போது, அவர் ரொம்ப பிடிவாதக் காரர், ஒன்றை செய்வதாக தீர்மானிச்சுட்டா,  எக்காரணத்தை முன்னிட்டும்  பின் வாங்க மாட்டார், என்று சொல்லுவதை பார்த்திருக்கிறேன்! அப்படியான குணம் கொண்டவர்  என, அன்னை சோனியா காட்சி தருகிறார்! இந்தியாவை மீண்டும்,அந்நிய சக்திகளிடம்  அடகு வைப்பதாக, இந்தியர்களை மீண்டும் அடிமைப்படுத்துவதாக, எப்போது,யாருக்கு எங்கு வைத்து, என்ன உத்திரவாதம் செய்தாரோ,தெரியவில்லை! ஆனால் அப்படி செய்யும் காரியத்தை செய்வதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்! அதையும்  நேரடியாக செய்யாமல்,  தனது கைக்கூலிகளாகவும், காங்கிரசு போர்வையில் உலவும் கழிசடை தலைவர்களின் மூலமே செய்ய முன்று வருகிறார்! என்று சந்தேகம் வருகிறது!        இந்தியா சில்லறை வணிகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இப்போது, அந்நிய முதலீடுகளின் அளவை ஐம்பத்தி ஒரு சதவீதமாக உயர்த்தும் தீர்மானத்தை  மத்திய அமைச்சர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றி இருக்கிறார்! உதட்டளவில் சுதேசம் பேசிக் கொண்டு விதேசிகளாக வாழ்ந்துவரும்  நமது எதிர்கட்சித் தலைவர்களும், தேசபக்தி வேடத்தை  தேர்தலுக்கு மட்டும் போட்டுக்கொள்ளும், போலி தேசியவாதிகளும் எதிர்த்து, கூக்குரல் போட்டு,நாடாளுமன்றத்தின்   நான்காவது நாளையும்   முடக்கிப் போட்டு உள்ளனர்! ஓட்டுமொத்த இந்தியர்களின் சுய சார்பு குறித்த, எந்தப் பிரச்சனையையும்  பொதுமக்களின் பார்வைக்கும் கருத்துக்கும் வைக்கும்படி இந்த நாட்டில்  எவருமே இதுவரை கேட்பதில்லை! பத்திரிகைகளும், சமூக ஆர்வலர்களும், நாட்டின் நலன் விரும்பும் அறிவாளிகளும் கூட நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பிரச்சனையில் போது மக்களின் கருத்துக்களை கேட்டு, போது விவாதம் நடத்தி முடிவுக்கு வரவேண்டும். அப்படி முடிவு செய்வது தான் உண்மையான ஜனநாயகமாகும்! என்று எண்ணாமல் உள்ளது ஆச்சரியமும் அதிர்ச்சியையும் அளிக்கிறது!       இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது,  நமது தலைவர்களுக்கு நாட்டின் தொழில்  வளர்ச்சியில்,பொருளாதார முன்னேற்றத்தில், அக்கறை இருந்தது! நாட்டு மக்களின்மீது அக்கறை இருந்தது!  வங்கிகள் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதற்காக அரசுடமை ஆனது! இந்தியனாக  இருப்போம் இந்தியப் பொருட்களையே வாங்குவோம் என்று கோஷமெல்லாம் எழுப்பப் பட்டது!தொழில்கள் வளர்ச்சியடைந்தன.இந்தியா பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, வளர்ந்து வரும்  நாடாக,அறிவிக்கப் பட்டது! காந்தின் கனவான சுதேசி இந்தியா உருவாகிவிடும் என்று தோன்றியது!       அனால் இன்றோ,வெளிநாட்டு  கார்களில் தான்  இந்தியா தலைவர்களும் எடுபிடி தொண்டர்களும்,அரசு அதிகாரிகளும் பவனி வருகின்றனர்! பப்பேகளும், பார்டிகளும்,  ஆடல் பாடல்களும்  மக்களின் வாழ்க்கையை .பற்றிய கவலை இன்றி,கொஞ்சமும் குற்ற உணர்வின்றி,  மக்கள் பணத்திலேயே ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் வீணடிக்கப் படிக்கிறது! உள்ளூர் தொழில்கள் நாசமாகி விட்டது! கைத்தறி நெசவாளர்களின் கண்ணீருக்கு இவர்கள்  கவலைப் படுவதில்லை. மூடிய பல்லாயிரம் சிறு மற்றும் பெரும் தொழில் கூடங்களைப் பற்றியோ, அந்த தொழில் கூடங்களில் பணியாற்றி இப்போது வேலை இன்றி தவிப்பவர்கள் பற்றியோ ஆட்சியாளர்கள் கவலைப் படுவதில்லை!  விவசாயிகளின் இன்னலும், வேதனையும் இவர்களது கண்ணுக்கு தெரிவில்லை! நாளொன்றுக்கு இந்தியாவில் இருபதாயிரம் பேருக்குமேல்  பட்டினியாலும் போதிய உணவு இன்றி செத்து மடிவது பற்றி கவலை இல்லை! கூடங்குளம் பற்றியும்  கவலை இல்லை,  மீனவர்கள் படுகொலை,தமிழீழ அகதிகள், கொள்ளைபோகும் இந்திய  வளங்களைப் பற்றியும் கவலை.!!     ஆனால் தங்களது பாதுகாப்பு குறித்து கவலைப் படுகிறார்கள்! அந்நிய முதலீடு ஐம்பத்தொரு சதவீதமாக அதிகரிப்பது குறித்து கவலைப் படுகிறார்கள்! பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து கவலை கொள்ளுகிறார்கள்!  இத்தனைக்கும் காரணம்.. காந்தி தேசத்தை விட, இவர்களுக்கு சோனியாவின் நேசமும் பாசமும் பெரிதாகத் தெரிவதால் தான்! மெல்ல இனி இந்தியா,  இல்லையில்லை விரைவில் இந்தியா அன்னை சோனியாவின் ஆசையால், அன்னியர் பூமியாகும்!

Comments

 1. //அந்நிய முதலீடு ஐம்பத்தொரு சதவீதமாக அதிகரிப்பது குறித்து கவலைப் படுகிறார்கள்! பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து கவலை கொள்ளுகிறார்கள்! //

  கீழ் கண்ட வாறு வார்த்தைகளை மாற்றினால் நீங்கள் சொல்ல வந்தது சரியாக போய் சேரும் என்பது என் எண்ணம்

  அந்நிய முதலீடு ஐம்பத்தொரு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று கவலைப் படுகிறார்கள்! பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று கவலை கொள்ளுகிறார்கள்!

  ReplyDelete
 2. உள்ளத்தில் உள்ள ஆதங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்றஎண்ணத்தில் செய்த பதிவு அது! மேலும் மின்சாரம் எப்போது போகும்,?நேரம் எப்போது கிடைக்கும் என்ற சூழ்நிலையில் பதுவுகளை அதிக நேரம் எடுத்து படித்தும்,திருத்தம் செய்தும் வழங்க நேரம் கிடைபதில்லை.எனினும் தங்களது ஆலோசனைபின்பற்ற முயல்கிறேன்! நன்றி ஜீவா!

  ReplyDelete
 3. Nalla pathivu......

  ReplyDelete
 4. //காந்தி தேசத்தை விட, இவர்களுக்கு சோனியாவின் நேசமும் பாசமும் பெரிதாகத் தெரிவதால் தான்! மெல்ல இனி இந்தியா, இல்லையில்லை விரைவில் இந்தியா அன்னை சோனியாவின் ஆசையால், அன்னியர் பூமியாகும்!
  //
  100 % true

  ReplyDelete
 5. என்னக்கு பிடித்தவை எழுதும் உங்களுக்கு எனது பதிவு பிடித்தமைக்கு நன்றி!நண்பா.

  ReplyDelete
 6. எனது பதிவை ஆதரித்த உங்கள் கருத்துக்கும்,உங்களுக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 7. தட்டிக் கேட்க யாருமில்லை என்றால் இப்படிதான்... வினவுவிடம் ஏன் என வினவலாம், வாருங்கள்!

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?