அரசின் ஊழலுக்கு எதிராக் விழுந்த அறை,சொல்லுவது என்ன?

         விலைவாசி  உயர்வு  குறித்த பிரச்னை நாடாளுமன்றத்தில், எதிர்கட்சிகளை கிளர்ந்து எழச் செய்துள்ளது! குளிர்கால கூட்டத் தொடரின் மூன்று நாட்கள் விவாதம் இன்றி ஒத்திவைக்கப் பட்டுள்ளது! ஊழல் குறித்த அரசின் நடவடிக்கைகள், கருப்புப்பணம் வைத்துள்ளவர்களின் எழுநூறு பேரின் பட்டியலை  வெளியிடாமல் உள்ளத்தில் இருந்து இந்த அரசு,ஊழலை ஆதரிப்பதாகவும், ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது போலவும் உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அந்நிய சந்தையில் பணத்தின் மதிப்பு குறைந்துள்ளதால்  பணவீக்கம்,அதிகரித்துள்ளது,அதனால் விலைவாசி உயர்ந்துள்ளது.என்று கூறுகிறது! பிரதமர் மன்மோகன் சிங் போன ஆண்டு நவம்பரிலேயே, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப் படும் என்று கூறினார். இப்போது,பிரணாப் முகர்ஜி,மார்ச் மதத்துக்குள் கட்டுப் பட்டுவிடுவதாக  கூறுகிறார்! சாமானிய மக்களின் வாழ்கையை விலைவாசி உயர்வு எந்த அளவு பதிக்கிறது,என்பது பற்றி நமது ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. அக்கறை இல்லை.யுக வணிகமும்,வணிக சூதாட்டமும் ஆன, online  வர்த்தகத்தை தடி செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளுமே கேட்டும்,காங்கிரசில் உள்ளவர்கள் குரல் கொடுத்ததும் கூட, ஆன்லைன்  வர்த்தகத்தை தடை செய்யாமல் இருந்து வருகிறது,!
   இவைகளை எல்லாம் பார்க்கும்போது,இந்த அரசு  அடித்தட்டு மக்களின் நலனுக்காக செயல்படும் அரசு இல்லை என்பது தெரிகிறது! பின் யாருக்காக இந்த அரசு செயல்பட்டு வருகிறது? நாட்டின் வளத்தை கொள்ளையிடும்  பன்னாட்டு தொழில் அதிபர்களுக்கும்,நிறுவனங்களுக்கும் செயல்பட்டு வருகிறது! அதுவும் நமது வரிப்பணத்தை வாரி இறைத்து,சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு, நமக்கு எதிராக செயல்பட்டு வருகிறது! 
      நமது நாட்டை அந்நியர்களிடம் அடகு வைக்கும் ஏவல்  நாய்களாக இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்! எண்பதுகளில் இந்திராகாந்தி அம்மையார்,  "வறுமையே வெளியேறு" {கரீபி ஹட்டாவோ} என்ற கோஷத்தை எழுப்பி தேர்தலை சந்தித்தார். பல்லாயிரம் கொடிகளை ஓதிக்கியும்,பல திட்டங்களைப் போட்டும் வறுமையை ஒழிக்கப் போவதாக பீற்றிக் கொண்டார்! அவரால் வறுமையை இந்தியாவில் ஒழிக்க முடியவில்லை! அவர்க்குப் பின்பு ராஜிவ்காந்தி,நரசிம்ம ராவ், ஆகியோர்கள் வந்தார்கள். அவர்களாலும் ஒழிக்க முடியவில்லை! இந்தியாவில் இன்னும் வறுமை நீடிக்கிறது! வறுமை வளர்ந்து வருகிறது.!!  நமது ஆட்சியாளர்கள் வறுமையை ஒழிப்பதாக சொல்லியே நாட்டின் பொருளாதரத்தை ஒழித்து வருகின்றனர்.  வறுமையில் வாடும் மக்களை ஒழிக்க முன்று வருகின்றனர்!
      அதான் விளைவே இன்று பெரும் தொழில் அதிபர்களும் பெரும்பாலான அரசியல் வாதிகளும் பதிக்கி வைத்துள்ள கருப்பு பணமாகும்!  வறுமையை ஒழிக்க கொட்டப் பட்ட கொடிகள் எல்லாம் இவர்களால் கொள்ளையிடப்பட்டு  கருப்பு பணமாக மற்றப் பட்டுள்ளது! எனவேதான் கருப்பு பணத்தை மீட்பது குறித்து எதுவும் சொல்லாமல் இரும்து வருகிறார்கள்!  மக்கள் படும் வேதனைகளைத் தாங்க முடியாத மனித நேயம் உள்ள,தார்மீக கோபம் கொண்ட இந்திய பற்றுள்ள குடிமகன் ஒருவர், விலைவாசி உயர்வு பற்றி பொறுப்பில்லாமல்,கிண்டலாக பதில் அளித்த மதிய விவசாய மந்திரி சரத் பவாரை கன்னத்தில் அறைந்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்!  அப்படி அவர் கண்டனத்தை பதிவு செய்துள்ளதை தவறு என்று நிதி மந்திரியும்,பிரதமரும் கண்டித்து உள்ளனர்!
      முன்பு உள்துறை மந்திரிக்கும், அத்வானிக்கும் செருப்பு வீச்சு நடந்தது! இப்போது, சரத் பவருக்கு அறை விழுந்துள்ளது! இவைகள்  எல்லாம் சாமானிய மக்களின் சமூக கோபமே என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஒட்டுமொத மக்களும் இதுபோல் கோபத்தை காட்டும் சூழ்நிலையை  ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்!
     இல்லையென்றால் இன்னோறொரு உரிமைப் போர்  இந்தியாவில் நடப்பதை  தடுக்க இயலாமல் போய்விடும்! அப்படி ஏதேனும்  நடந்தால்.... அது காந்தி சொன்ன அறவழியில் நடக்குமா என்று சொல்ல முடியவில்லை! காரணம் காந்தி இன்று இல்லை என்பதுடன், இன்றுள்ளவர்களில் எவருக்கும்  காந்தியாகும் தகுதியும், யோக்கிதையும் இல்லை என்பதுதான்!
 


Comments

 1. சாதாரண மக்களின் கோபம் என்றாலும், இந்த அளவு ஒரு சாதாரண மனிதனை ஒரு அமைச்சர் அருகே செல்லும் வரை எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி சாதாரணமாய் யார் மனதிலும் எழவில்லை.... பத்திரிகை நிருபராக இருப்பார் என்று நினைத்ததாக அமைச்சர் சொல்கிறார்.. நம்பும்படியாக இல்லை.. எதோ திரை மறைவு வேலை என்று நினைக்கிறேன்

  //காந்தி சொன்ன அறவழியில் நடக்குமா என்று சொல்ல முடியவில்லை! காரணம் காந்தி இன்று இல்லை என்பதுடன், இன்றுள்ளவர்களில் எவருக்கும் காந்தியாகும் தகுதியும், யோக்கிதையும் இல்லை என்பதுதான்!//

  இந்த வாசகங்கள் குழப்புகிறது..
  காந்தி யாகும் யோக்கியதை யாருக்கும் இல்லை என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்..
  போராடும் மக்களா? அல்லது அரசியல்வாதிகலையா?

  மற்றபடி உங்களிடம் ஊக வணிகம் குறித்தும் ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்... நானும் எப்படி எப்படியோ அதை புரிந்து கொள்ள முயற்சித்தாலும் புரியவில்லை

  ReplyDelete
 2. ,நன்றி ஜீவா,ஊக வணிகம் குறித்து சில பதிவுகளுக்கு பிறகு எழுதுகிறேன்! காந்தியார் கை ராட்டையில் ,நூல் நூற்றும், உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்ததை கண்டித்து , தண்டி யாத்திரைமேற்கொண்டார்! சுதேசி கொள்கையை அதாவது,சுயசார்பு தொழிலுக்கு ஆதரவாக செயல் பட்டவர்! இன்று,தலைவர்களும்,மக்களும் சுயசார்பு உள்ளவர்களா? அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன்!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?