தமிழர்களின் தொடர் தொல்லைகளுக்கு காரணம் !

ஒரு மொழி வாழவேண்டுமால், அந்த மொழிபேசும்  மனிதர்கள் வாழவேண்டும்!  அந்த  இனத்தின் நாகரீகம், கலாச்சாரம், வரலாறு, மொழி  அனைத்தையும் போற்றி பாதுகாக்கப் படவேண்டும்!     அந்த இனத்தினரின் வாழ்வாதாரங்களுக்கு,  ஆளுபவர்களும்,ஒட்டுமொத்த சமூகமும் பாதுகாப்பும்,உறுதியும் அளித்து உதவ  முன்வர வேண்டும்!

       தமிழினமும் வாழவேண்டும் என்ற  எண்ணம் ஆட்சியில் உள்ளவர்களிடம் உள்ளதா? என்றால் இல்லை என்பதுதான் நிலவரமாகும்!    தொன்மையான பண்பாடு,கலாச்சாரம், வரலாறு,உள்ள தொன்மையான மொழியாகிய,தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களுக்கு  என்ன செய்துள்ளது? தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் படுகிறதா? இல்லை பறிக்கப் படுகிறதா? என்று பார்த்தால்,  அவைகள் திட்டமிட்டு,  பறிக்கபடுகிறது  என்ற உண்மை புரியும்!      இந்தியாவிலேய மிகவும் வளமான பகுதியும்,  தொன்மையான கலாச்சாரமும் கொண்ட பகுதி என்பது, திராவிடர்களின் வாழ்விடங்களான  கருநாடகம்,ஆந்திரம்,கேரளா,தமிழகம் ஆகிய பகுதிகளாகும்!
வளமான இந்த பகுதிகளின் இன்றைய நிலை என்ன? இந்த பகுதிகளின் வளர்சிக்கு,மக்களின் நலனுக்கு,  ஆட்சியாளர்கள் செய்தது என்ன?  செய்தது ஒன்றுமில்லை! மாறாக இருப்பதையும் சுரண்டியதுதான் அதிகமாகும்!   மேலும் இந்த மக்களை பிளவுபடுத்தி, பேதபபடுத்தி,  இவர்களுக்குள் எழும் சிறிய பிரசனையயும் பெரிதாக ஆக்கி,  வந்ததால்  இன்று, திராவிடர்களுக்குள் வேற்றுமை விஷமாகப் பரப்பப்பட்டு  நிலைநிறுத்தப் பட்டு உள்ளது!
              தமிழர்களுக்கும்  கன்னடர்களுக்கும் பிரச்சனை..,  அதனால் காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு வருவதே  பிரச்சனை!  தமிழர்களுக்கும் கேரளர்களுக்கும் பிரச்சனை அதனால் முல்லை பெரியாறு  தமிழர்களின் இன்னொரு  தொல்லை!  ஆந்திரர்களுக்கும் தமிழர்களுக்கும் தகராறு அதனால் கிருஷ்ணாவில் தண்ணீர் வருவதும், சென்னையின் தாகம் தீருவதும் கானல் கனவு!    விளைவு?    தமிழகம் வறண்டு பாலையாகிவிட்டது!  குடிநீருக்கே மக்கள் இன்று திண்டாடும் நிலை!   போதாக்குறைக்கு தமிழர்களிடம் இருக்கிற கொஞ்சம் நிலத்தையும் பறிக்கும் வேலைகளையும் ஏற்படுத்தி உள்ளது!      பிளாட்டு போடவும், எவனோ பெரிய கார்பறேட்டு கம்பனியாம்  அவன் கொழுக்க, அப்புறம் ரோடு போட, நீச்சல் குளத்துடன் பண்ணை வீடுகள் கட்ட,  இப்படி கன்றாவிக்  கருமாந்தறதுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, நாடோடியாக.... நாடிழந்து தமிழர்கள்  போகணும்! நாய்களாக வாழணும், அல்லது ஈழத்து சொந்தங்களைப் போல சாகணும்!    என்பதே  இந்தியாவை ஆளும், ஆதிக்க வர்கங்களின் ஆணவ போக்கும், தமிழர்கள் பற்றிய பார்வையுமாக இருக்கிறது!

        தமிழர்களை தொடர்ந்து தொல்லைக்கு,  உள்ளாக்குவதற்கு  காரணங்கள் இவைகள்தான்!  , தமிழர்கள்,  இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதும், ஆளுவது  அந்நிய மண்ணில் இருந்து வந்தவர்களின் வாரிசுகள் என்பதும்,   வந்தேறிகளுக்கு ஆக்கிரமிப்பும, அடக்குமுறையும் ஆயுதங்கள் என்பது தமிழர்களுக்கு தெரியாமல்இருப்பதும் ஆகும்!     ஒரு இனத்தை, அதுவும் தமிழினம் போன்ற  தொன்மையான இனத்தை முற்றாக   அளிக்கவேண்டும் என்றால் , தொடர்ந்து  தாக்குதல்களை, தொல்லைகளை கொடுத்து வரவேண்டும் என்ற "அரசியல்சாணக்கியத்தால்"  தமிழர்கள் தாக்குதலுக்கு  ஆளாகி வருகிறார்கள்!      தமிழக மீனவர்கள் தாக்குதல்,  நிலத்தில் இருந்து அப்புறப்படுத்துதல்{  கூடங்குளம்}, வாழ்வாதாரத்தை பறித்தல்{அல்லது} சிதைத்தல்,  கலவரம் போன்றவற்றை ஏற்படுத்தி உயிரைப் பறித்தல்ஆகியவைகள்  இன அழிப்பின் செயல்திட்டங்களில் சிலவாகும்!   ஈழத்தில்  உள்ள தமிழர்களுக்கு நேற்று நடந்ததை, இன்று  தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்கள்!

     

Comments

 1. சொன்னபடியே பதிவு போட்டு விட்டீர்கள் நன்றி.. அருமையாக இருந்தது.. ரொம்ப உணர்ச்சி பூர்வமாய் வேறு எழுதி இருக்கிறீர்கள்.. நம் அண்டை மாநிலத்து மக்களை வம்புக்கு இழுக்காமல், அருமையாக பிரச்சினையின் ஆணிவேர் தொட்டு பேசி இருக்கிறீர்கள்... சாதி மதமாய் பிரிந்து இருக்கும் நாம் என்று ஒன்று சேரப் போகிறோம்... கஷ்டப் படும் வர்க்கம் என்று, எப்பொழுது ஒன்று கூட போகிறோம் என்பது தான் என் கவலை..

  ReplyDelete
 2. தமிழர்களை மட்டுமல்ல ஒடுக்கப்படும் அனைத்து சமுகங்களிடமும் பொதுவாக காணப்படும் குறையானது,ஒற்றுமை இல்லாத நிலையே! இதற்கும் காரணம், ஆளும் வர்க்கத்தினரின் பிரித்தாளும் சூழ்ச்சி தான்!

  ReplyDelete
 3. தோழர் ராஜாவுக்கு நன்றி!

  ReplyDelete
 4. வணக்கம், உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

  ReplyDelete
 5. தங்களது இணைப்புக்கும் வினவு'தளத்துக்கும் நன்றி! தோழமை தொடரட்டும்!

  ReplyDelete
 6. நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

  Tamil Baby Names

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?