தமிழ்மொழி செம்மொழியா, காட்டுமிராண்டி மொழியா?

தந்தை பெரியார் தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழியென்று சொன்னதாக படித்திருக்கிறேன்!  கருணாநிதி தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தியததையும் பார்த்திருக்கிறேன்!  அதனால் வந்த சந்தேகமே இந்த கேள்வியும் தலைப்பும்!
      தவிர நான் ஏதொ,பயங்கரமான இந்துமத எதிர்பாளன் என்பதுபோலவும்,தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குவது போலவும் சிலர் புரிந்துகொண்டு,'கருத்து கந்தசாமியாக'        'கமெண்டும்' போட்டுள்ளதால் சர்சைகளை உருவாக்காத பதிவு ஒன்றை போடவேண்டும் என்று நினைத்ததன் விளைவும்  இந்த பதிவுக்கு  காரணமாகும்!      இதுவும் சர்சையானால், கலைஞரைப்போல 'என் ராசி அப்படி' என்று புலம்பி தீரவேண்டும்!


  "  நாரதர் கலகம் நன்மையில் முடியும்"? என்று ஆன்மீக அன்பர்கள் சொல்லுவதைப்போல, { அப்பாடா, அவர்களிடம் இருந்து சமாளிக்க ஒரு வழியை கண்டுபிடித்து விட்டேன்}  நன்மையில் முடிந்தால் சந்தோசம்!
       " நான்.. சண்டையை தொடங்குகிறேன், சமாதானத்துக்காக!, நீயோ... சமாதானமாக இருக்கிறாய், என்னோடு சண்டையிடுவதற்காக!!" என்று வைரமுத்து சொன்னதைப்போல, இப்போது சமாதானமாக இருப்பவர்கள் என்னோடு சண்டைபோட்டாலும் சரிதான்!      சிலருக்கு சும்மா இருந்தாலும் பிரச்சனைகள் சுத்தி,சுத்தி வரும்!   வடிவேலு சினிமாவுல வருவரே அப்படியான பாவராசி, நம்முடைய ராசி!
     தமிழை,  " கல்தோன்றி,மண்தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த மொழி"  என்று சொல்லுகிறார்கள்!  அது எப்படிங்க?  மனிதன் தோன்றுவதற்கு முன்பு மொழி தோன்றி இருக்க முடியும்?         பழமையான மொழி, "தமிழ் மொழி" என்று காட்டுவதற்காக, " உயர்வு நவில்சியாக" அப்படி கூறி இருப்பதாக நாம்  புரிந்து கொள்ளுகிறோம்!   தமிழ், 'காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் சொன்னதுக்கு காரணமும், மனிதர்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பு, காடுகளில் பிராணிகளுடன் பிராணியாக{ வேண்டுமென்றால் அப்பிராணியாக என்று   நினைத்துகொள்ளுங்கள்} வாழ்த்த காலத்தில் இருந்தே பேசப்பட்டு, வழக்கத்தில் இருந்துவரும் மொழி,தமிழ்மொழி என்ற பொருளில் கூறி இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்!
    தமிழ்மொழி, உங்க பார்வையில் செம்மொழியா என்று கேட்பவர்களுக்காக,    கீழே  இந்த நிகழ்ச்சியை தந்திருக்கிறேன்!      தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் ஒரு பட்டிமன்றம் தருமபுரியில் நடந்தது. பட்டிமன்றம் தொடங்கும்  நேரமாகியும், பட்டிமன்றத்தில் பேசவேண்டிய பேச்சாளர் ஒருவர் வந்து சேரவில்லை! அந்த பேச்சாளர், பாலகோடு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுபவர், அருகில் இருந்த கடைமடை என்ற ஊரில் வசிப்பவர், எல்லோரும் பரபரப்பாக அவரை எதிர்பார்த்தனர். எங்கிருந்தோ அவசர அவசரமாக வந்த அவரை பார்த்துவிட்ட அடிகளார்,  மிக சத்தமாகவும்,சந்தோசமாகவும் '' வாரும் கடைமடையரே!'' என்று வரவேற்றார்!
         பட்டிமன்ற பேச்சாளரும் பதிலுக்கு குன்றக்குடி அடிகளாரைப் பார்த்து, அதே சந்தோஷ கூச்சலுடன், ''வணக்கம் மடத் தலைவரே!'' என்றார்.  பட்டிமன்றம் குலுங்கியது அன்று தமிழால்! இதற்கு பொருள் விளக்கம் நான் சொல்லபோவது இல்லை, நீங்கள்தான்....! தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழியா, செம்மொழியா என்பதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்!

      { இதற்கு முந்தைய எனது பதிவுகளை   காரமாக நினைப்பவர்களுக்கு, கொஞ்சம் ஆறுதலாக,வழங்கியுள்ள  இனிப்பு   இது}. 

Comments

 1. //தமிழை, " கல்தோன்றி,மண்தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த மொழி" என்று சொல்லுகிறார்கள்! அது எப்படிங்க? மனிதன் தோன்றுவதற்கு முன்பு மொழி தோன்றி இருக்க முடியும்?//
  எந்த இடத்தில் மனிதன் தோன்றுவதற்கு முன்பு என்று உள்ளது?. எதையும் ஆழ்ந்து படியுங்கள் ஆழ்ந்து சிந்தியுங்கள். இன்னும் புரியவில்லை இன்றால் அடுத்த வாரம் என்னுடைய பதிவில் இதற்கான பொருளை தருகிறேன். நன்றி

  ReplyDelete
 2. ஆரம்பிசுடாங்க, ஆரம்பிசுடாங்க, நான் சொன்னதுபோல ,சுத்தி சுத்தி வருதே! சொக்க, என்னபண்ணுவேன்?

  ReplyDelete
 3. ஏன்னா பிரதர்? நோ காமன்டுங்கறது கமாண்டா?...இல்லையா? எனெக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

  ReplyDelete
 4. தமிழை தெரிந்தவர்களுக்கு தமிழுக்கு அமுதென்றுபேர்.

  ReplyDelete
 5. ஒரு மொழி சார்ந்த விஷயம், அந்த தமிழ் மொழி வாழ, முதலில் தமிழ் பேசுபவன் இருக்க வேண்டும்... அவனை நாடு நாடாக சிதறடித்து விட்டு.. இருக்கும் கொஞ்சம் பேரையும் கொன்று போட்டு விட்டு.. செம்மொழி, காட்டுமிராண்டி மொழி என்று யாரை வைத்து பேசப் போகிறீர்கள்... உங்களுக்கு தெரியாதா தோழர்... இதெல்லாம் ஒரு விவாதம் நு போட்டு... போங்கப்பா நம்ம மக்களை காக்கும் வேலையே பார்ப்போம்

  ReplyDelete
 6. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 7. அடுத்த பதிவில் தமிழர்கள் ஏன் தொடர்ந்து நசுக்கபடுகிறர்கள் என்பது குறித்து சொல்லுவேன்! பொறுங்கள் ஜீவா!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?