தூக்குத்தண்டனை கண்ணாமூச்சு

  ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான  'பெல்ட் பாம்'  யாரால் தயாரிக்கப் பட்டது?   என்பதைகூட கண்டு பிடிக்காத நிலையில், பெல்ட்பாம் செய்ய பேட்டரி வங்கிக் கொடுத்ததாகவும், அவர் வங்கிக் கொடுத்ததற்கு ஆதாரமான,    பேட்டரி வாங்கிய ரசீது 23  நாட்கள் கழித்து, அவரது சட்டை பையில் இருந்து எடுத்ததாகவும் போலிசு கூறிய  பொய்யின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.   23 நாட்களாக ஒரு சட்டையை   மாற்றாமலும்    துவைக்காமலும் வைத்திருக்கும் அப்பாவிப் பிள்ளை பேரறிவாளன் என்றுதானே ஆகிறது!?       போகட்டும், பேட்டரி [செல்] வாங்கினால்,  எந்த கடைக்காரன்    ரசீது போட்டு கொடுக்கிறான்?
 

        ராஜீவ்காந்தி படுகொலையில் சுப்பிரமணி சாமிக்கும், சந்திரா சாமிக்கும் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது,  புடுங்கி கத்தை கட்டும்  இந்திய  புலனாய்வு புலிகள் லண்டனுக்குவிசாரிக்கப் போனார்கள்!  விமான நிலையத்தில் கொண்டுபோன ஆவணங்களை காணோம்,தொலைந்து விட்டது என்று கையை வீசிக்கொண்டு திரும்பி வந்தார்கள்! ஆவணங்களின்  பிரதிகளைக் கூடவா எடுத்துவைக்காமல்,அசால்டாக  ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரணை செய்தார்கள்?  இன்று இரட்டை அலைவரிசை ஊழலில், 'யோக்கிய சிகாமணி சுப்பிரமணி சாமி' என்னையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க கோருகிறார்!, ராஜீவ் கொலைவழக்கில் இவரையும் சேர்த்து விசாரிக்க யாருமே முன்வரவில்லை! 

      சுதந்திர  இந்தியாவில் இதுவரை தூக்கிலிடப் பட்ட அனைவருமே  தங்களை  தற்காத்துக் கொள்ளும் திராணியற்ற, சிறந்த வக்கீல்களை அமர்த்த முடியாத,  ஏழைகள்தான் என்பது எத்தனைபேருக்கு தெரியும்? ஒருவரின்  பொருளாதார  நிலையைப்  பொறுத்தே, அவருக்கு  நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நிலை  இருக்கும் நாட்டில், துக்குதண்டனை  நடைமுறையில் உள்ளதும் , தண்டனை தருவதும் நியாயமான செயலா? என்று கேட்க வேண்டிஉள்ளது!


      ராஜிவ்  கொலைவழக்கை  விசாரித்து,தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான, முன்னாள்  உச்சநீதி   மன்றத்தின்  நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் 12 09 .2011 -.அன்று   'ASIAN AGE '  பத்திரிக்கைக்கு  அளித்த பேட்டியில் கூறுகிறார்!      " என்னுடைய நீண்ட அனுபவத்தில் இருந்து உங்களை எச்சரிக்கிறேன். ஒரு குற்றவாளி எப்படி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க சாத்தியங்கள் உள்ளதோ, அதேபோல,  ஒரு  நிரபராதி  குற்ற்றவாளி என தண்டிக்கப்படும் சாத்தியங்களும் நடைமுறையில் உள்ளன!. இதற்கு வரலாற்றிலும்  ஒரு முன்னோடி  உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,  ஒரு முட்டாள் கூட்டத்தை திருப்திப்படுத்தும் நோக்கில்  குற்றம் சாட்டப்பட்டவர், குற்றமற்றவர்  என்பது ஐயமுற தெரிந்தும்,  ஒரு நீதிபதி மரணதண்டனை தீர்ப்பினை அளித்தார்!. அந்த நீதிபதியின் பெயர்,' போன்டியாஸ்.{pontitus }பிலதோஸ்' என்பதும்,  குற்றம்  சாட்டப்பட்டவர்,' ஏசுபிரான்' { yeshua the Nazarene } என்பதையும் யூகித்திருப்பீர்கள் " 
 
          இன்று  நம் மதங்களும், புத்தரும், ஏசுவும், காந்தியும்  போதித்த  மனித நேயம்  வீணாகிவிட்டது!  உண்மையான ராஜீவ்  கொலைகாரர்களை  காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம், முட்டாள் கூட்டத்தை திருப்திப்படுத்தும்  நோக்கம் ஆகியவற்றால், அப்பாவி தமிழர்களான,   பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோர்களை  தூக்குமேடைக்கு அழைத்து செல்ல துடிக்கிறார்கள்!!   மத்திய  அரசும்,  மாநில அரசும்  தமிழர்களின் உயிர் பிரசனையில் கண்ணாமூச்சு ஆடுகின்றன!

Comments

 1. எழுதுங்கள், சிந்திக்க வைப்போம்... வேலாயுதமும் ஏழாம் அறிவு மட்டும் தான் உலகம் என்று இருப்பவர்கள் மத்தியில் வித்தியாசமாய் தெரிவோம்..

  ReplyDelete
 2. Sir,

  Did you read the complete judgement of Assassination ?
  If nit please read it. It is available in CBI website. There they have mentioned with solid proof that all these 3 people are part of murder, not only that these guys were with Sivarasan and Subha even after murder helping them to escape. Don't support them just because they are tamils.

  My question is How did Murugan and Santan come to india ? were they having valid VISA?

  ReplyDelete
 3. சமுகத்தின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு வேலாயுதமும் ஏழாம் அறிவும் மனோதிடமும்,உண்மைகளை சொல்லும் தைரியமும்தான் ஜீவா! நன்றி

  ReplyDelete
 4. நன்றி சகோதரா!,சுப்ரமணிய சாமி விசாரிக்கக் கூடாதவரா ? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பார் பட்டவராக இருக்கவேண்டும்! சி.பி.ஐ சொல்லுவது எல்லாம் சரியா? எல்லாதரப்பு நியாயங்களையும் பார்த்துவிட்டுத்தான், விசாரித்து விட்டுதான் ரிப்போர்ட் தருகிறதா? வரதராஜ பெருமானை இந்தியாவுக்கு அழைத்துவந்து,பாதுகாத்து யாராம்? விசா வாங்கிகொண்டு விருந்து சாப்பிட இந்திய வந்தாரா?

  ReplyDelete
 5. What is your point ? Are you saying these people are not killers and should not be hanged ?, or Are you saying S. Swamy is the murderer . We can have separate discussion on whether S. Swamy is killer or not. But now can you deny that these three are not killers ?

  By the way Varadharaja perumal was democratically elected chief mister on the provincial election took place in Lanka

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?