2- ஜி ஊழலில் சுபிரமணியசாமியின் பங்களிப்பு என்ன?

அரசியல்வாதிகளில் நேரடியாக மக்களைசந்திப்பவர்கள், பிரச்சனையை சந்திப்பவர்கள் ஒருரகம் இருகிறார்கள்! சிதம்பரம்,தயாநிதி,ஏன் பிரதமரே கூட அத்தகையவர் எனலாம்!  மக்களை சந்திக்காமல்,மக்களின் பிரச்சனைகளில் அக்கரைகொள்ளாமல்,  தனக்கு ஏற்ற, ஆதாயம் அடையும் விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, ஓட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி, அரசியல்வாதிகளையும் ஏமாற்றி, பத்திரிக்கைகளில் மட்டுமே சவடால் அடித்து வரும் அரசியல்வாதி ஒருவரை சொல்லவேண்டும் என்றால் இவரைத்தான் சொல்லவேண்டும்!  பிளாக்மெயில் அரசியலுக்கு பேருபோன சுபிரமணிசாமி  2- ஜி ஊழலில் ஆரம்பம் முதலே ஆர்வமுடன் இருந்துவருவது, ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது!


    இவரது ஆர்வத்துக்கு காரணம்,நாட்டு  மக்கள் மீது கொண்ட அக்கறைதான் என்பது நம்பும்படி இல்லை! காரணம், ஒட்டு கோவணத்துடன் காட்டிலும்,கழனியிலும் கஷ்டப்படும் இந்திய பற்றுள்ள குடிமகனாக இவரை  யாரும் எண்ணமாட்டார்கள்!  ஹார்வர்டு பேராசிரியரான இவருக்கு கொவனாண்டிகளுடன் கொஞ்சும் பழக்கமில்லை! குபெரர்களான,தொழில் அதிபர்களுடந்தான் உறவுகொள்ளுவார்!  எனவே,  2- ஜி ஊழலில் சிக்கியுள்ள பெரும்பணக்கரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் இவர்  விரோதியும் இல்லை!  தவிர, நாட்டில் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் அம்பலப்படுதியவரும் அல்ல!   குறைந்த பட்சம்  கண்டித்தும் கருத்து தெரிவித்தும் வருகிற  ஆசாமியும் இல்லை!  பிறகு ஏன் இந்த ஊழலில் மட்டும் சிறப்பான கவனத்தை செலுத்திவருகிறார்?            ராசாவின் பங்கு பத்துசதவீதம்,  தி.மு. கவின் பங்கு முப்பது சதவீதம்    சோனியாவின் பங்கு அறுபது சதவீதம் என்று கூறும் சாமிக்கு,   ஊழலில் கொள்ளை  அடித்த பணம்,  எங்கெங்கே பதுக்கபட்டு  இருக்கிறது, என்பதுதெரிந்ததால்,      அவற்றில் இருந்து  தனது பங்கைப் பெறுவதற்காக  பாய்ச்சல் கட்டுகிறாரோ  என்று சந்தேகம் ஏற்படுகிறது!    கனிமொழியை காப்பாற்ற  இவரிடம் உதவிகேட்டது,  நமக்கெல்லாம் தெரிந்த கதை!    கனிமொழியை காப்பாற்ற   இவர்கேட்டது என்னவென்பது,தெரியாத கதை!!      தயாநிதிமாறனை மந்த்ரிசபையில்  இருந்து வெளியற்றியது நமக்கு தெரிந்த கதை!,      நீரா ராடியா,ரத்தன்  டாட்டா  ஆகியோர்கள் இன்றுவரை தப்பித்து வருவதன் பின்னணி நமக்கு தெரியாத கதை! !

 
                   கனிமொழியை ஜெயிலில் அடைக்க  சொல்லப்பட்ட காரணங்களை விட,  நீரா ராடியா- வை  ஜெயிலில் அடைபதற்கான  காரணங்கள் கூடுதலாகவே   உள்ளது!    வைஷ்ணவி கம்யுநிகேஷன்  என்று நிறுவனம் வைத்து,  மந்திரிகள்,அரசியல் தலைவர்கள் எல்லோரையும் தனது சுண்டுவிரலில் வைத்து வேலைவாங்கியவர்,     அம்பானிக்கும்,ரத்தன்டாடாவுக்கும் இவரே தரகர்!   ராசா தொலைதொடர்பு அமைச்சரானது, தயாநிதிமாறன் ஆறுநூறு கோடியை கொடுத்து அமைச்சரானது,எல்லாம் இவரது டேப்புகளில் இருந்துதான் நாட்டுமக்கள் தெரிந்து கொள்ள முடிந்தது!    இந்திய அரசின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த 'கென்யா' பெண்மணியை கைது செய்ய சாமி நிர்பந்தம் செய்யவில்லை!  காங்கிரசும்  கைது செய்யவில்லை! அதற்கான காரணமும் தெரியவில்லை! சாமிக்கு தெரியுமோ என்னவோ?
             ஆனால் சாமிக்கு நிச்சயம் தெரிந்த விஷயம், என்னதான் கரடியாக கத்தினாலும் நீரா ராடியவையே   கைது செய்யாதபோது, சிதம்பரதைபோய் கைது செய்வார்களா?  கைதுசெய்யமாட்டார்கள்!,     பிரதமரை விசாரிக்கமட்டார்கள்,  எப்படியும் இந்த 2- ஜி வழக்கை போர்த்தி மூடி,  விடுவார்கள், என்பதை  தெரிந்து கொண்டுள்ள  சாமி, "வேகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்" என்று செயல்பட்டு வருவதாக தெரிகிறது! கருணாநிதிக்கு கனிமொழி,ராசா, தயாநிதி மூலம் பாடம் புகட்டியதுடன் தி.மு.கவையும் அகற்றியாகிவிட்டது! , நம்மாளை ஆட்சியிலும் அமர்த்த முடிந்தது!, காங்கிரசையும் வரும் தேர்தலோடு,காணமல் போய்விடும்  நிலையில் உள்ளது!    அப்புறம்  என்ன?  மனுதர்ம ஆட்சிதான் என்ற கணக்கோடு செயல்படுகிறாரோ என சந்தேகமாக உள்ளது!

Comments

 1. நிறைய சந்தேகங்கள், நீங்கள் ஒருவர் தான் சரியாக நூலை பிடித்திருக்கிறீர்கள்... நீரா ராதியா மற்றும் டாடா அம்பானி குறித்து எவரும் இது வரை வாய் திறந்ததில்லை... நீங்கள் யோசிப்பதே எனக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது

  ReplyDelete
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 3. நெனச்சேன் என்னடா இன்னும் இந்துக்களை விமர்சனம் சேய்யலியேன்னு.....வந்துட்டானுங்கையா....வந்துட்டானுங்க..இனிமே தூக்கம் வந்திடும்.... போயி தூங்குங்க....

  ReplyDelete
 4. ஏனுங்க, சுபிரமணிசாமி மட்டும்தான் இந்துவா? அவரை விமர்சனம் பண்ணுவது, இந்துமத எதிர்ப்பா? கனிமொழி,தயாநிதி, ராசா,சிதம்பரம், அப்புறம் ஹோசூர்ராஜன் எல்லாம் இந்துமதத்தில் இருந்து, எப்போது நீக்கினீர்கள்? விஷயத்தை பாருங்கள் என்றால், இந்துமத கண்ணாடி போட்டு கொள்ளுகிறீர்களே,நியாயமா?

  ReplyDelete
 5. சந்தேகங்களுக்கான விளக்கங்கள் ஓரளவு தெரியற மாதிரி இருக்கு ...

  ReplyDelete
 6. kalavanigal thappikka matham thaan kidaikkuthu

  ReplyDelete
 7. நூறு வருசத்து கோயிலுக்கு, இந்திரன்வந்தான்,புள்ளைகுடுதான் என்று கதைப்பதற்கு,அறிவு தேவையில்லை,ஆன்மிகம் என்றபெயரில் முட்டாள்தனம்தான் தேவையான முதலீடு! எந்த சோழன், எந்த பாண்டியன்? எப்போது கட்டப்பட்ட கோயில், எதுவுமே வேண்டியதில்லை!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?