Posts

Showing posts from November, 2011

அண்ணாவின் கேள்வியும் கலைஞரின் துரோகமும்!

ஒரு முறை கவியரசர் கண்ணதாசனிடம் கவிதைகளை யார் நன்றாக எழுதுகிறார்கள்? என்று கேட்டதற்கு,{கேட்டது நானில்லை} காதலிப்பவர்களும்,காதலில் தோல்வி அடைந்தவர்களும்,கம்யுனிஸ்டுகளும் நன்றாக எழுதுகிறார்கள்! என்று சொன்னாராம்.
     நான் காதலிக்கிறேனா? என்று சொல்ல தெரியவில்லை! காதலில்  தோல்வி அடைதவனா என்றும் சொல்ல முடியவில்லை! பிறகு கம்யுனிஸ்டா என்று கேட்டாலும், இல்லை! -  என்பதுதான் எனது பதிலாகும்.  ஆனால், நானும் கவிதைகளை எப்போதாவது எழுதுவது உண்டு!   கல்லூரிக்கால,  சகவாச தோஷம்.! !  எப்போது அதிக கோபமும் வெறுப்பும் எனது உணர்சிகளை ஆக்கிரமிப்பு செய்கிறதோ, அப்போதெல்லாம் கவிதை எழுதத் தோன்றும்!  சிலருக்கு மகிழ்ச்சியான,தனிமையான தருணங்களில்  கவிதை வரும்  என்று சொல்ல கேட்டிருகிறேன். இப்போது எதற்கிந்த பீடிகை அல்லது முன் அறிவிப்பு? என சிலர்  நினைக்கலாம். விசயமாகத்தான் இதனை சொல்லி இருக்கிறேன்.
     ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக,  செத்து மடிந்த தருணம் அது..., புலிகளின் இறுதிப்போர் உக்கிரம்  அடைந்து, சில மைல பரப்பில் சுருங்கி,சுருண்டு கிடந்த சமயத்தில், தாயக தமிழர்களின் ஒருங்கிணைந்த ஆதரவும்,தமிழக அரச…

காந்தி தேசம் V/S சோனியாவின் நேசம்!

Image
ஊரில் சிலரைப் பற்றி சொல்லும்போது, அவர் ரொம்ப பிடிவாதக் காரர், ஒன்றை செய்வதாக தீர்மானிச்சுட்டா,  எக்காரணத்தை முன்னிட்டும்  பின் வாங்க மாட்டார், என்று சொல்லுவதை பார்த்திருக்கிறேன்! அப்படியான குணம் கொண்டவர்  என, அன்னை சோனியா காட்சி தருகிறார்! இந்தியாவை மீண்டும்,அந்நிய சக்திகளிடம்  அடகு வைப்பதாக, இந்தியர்களை மீண்டும் அடிமைப்படுத்துவதாக, எப்போது,யாருக்கு எங்கு வைத்து, என்ன உத்திரவாதம் செய்தாரோ,தெரியவில்லை! ஆனால் அப்படி செய்யும் காரியத்தை செய்வதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்! அதையும்  நேரடியாக செய்யாமல்,  தனது கைக்கூலிகளாகவும், காங்கிரசு போர்வையில் உலவும் கழிசடை தலைவர்களின் மூலமே செய்ய முன்று வருகிறார்! என்று சந்தேகம் வருகிறது!        இந்தியா சில்லறை வணிகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இப்போது, அந்நிய முதலீடுகளின் அளவை ஐம்பத்தி ஒரு சதவீதமாக உயர்த்தும் தீர்மானத்தை  மத்திய அமைச்சர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றி இருக்கிறார்! உதட்டளவில் சுதேசம் பேசிக் கொண்டு விதேசிகளாக வாழ்ந்துவரும்  நமது எதிர்கட்சித் தலைவர்களும், தேசபக்தி வேடத்தை  தேர்தலுக்கு மட்டும் போட்டுக்க…

அரசின் ஊழலுக்கு எதிராக் விழுந்த அறை,சொல்லுவது என்ன?

விலைவாசி  உயர்வு  குறித்த பிரச்னை நாடாளுமன்றத்தில், எதிர்கட்சிகளை கிளர்ந்து எழச் செய்துள்ளது! குளிர்கால கூட்டத் தொடரின் மூன்று நாட்கள் விவாதம் இன்றி ஒத்திவைக்கப் பட்டுள்ளது! ஊழல் குறித்த அரசின் நடவடிக்கைகள், கருப்புப்பணம் வைத்துள்ளவர்களின் எழுநூறு பேரின் பட்டியலை  வெளியிடாமல் உள்ளத்தில் இருந்து இந்த அரசு,ஊழலை ஆதரிப்பதாகவும், ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது போலவும் உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அந்நிய சந்தையில் பணத்தின் மதிப்பு குறைந்துள்ளதால்  பணவீக்கம்,அதிகரித்துள்ளது,அதனால் விலைவாசி உயர்ந்துள்ளது.என்று கூறுகிறது! பிரதமர் மன்மோகன் சிங் போன ஆண்டு நவம்பரிலேயே, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப் படும் என்று கூறினார். இப்போது,பிரணாப் முகர்ஜி,மார்ச் மதத்துக்குள் கட்டுப் பட்டுவிடுவதாக  கூறுகிறார்! சாமானிய மக்களின் வாழ்கையை விலைவாசி உயர்வு எந்த அளவு பதிக்கிறது,என்பது பற்றி நமது ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. அக்கறை இல்லை.யுக வணிகமும்,வணிக சூதாட்டமும் ஆன, online  வர்த்தகத்தை தடி செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளுமே கேட்டு…

தலை உள்ள தீக்குசிகளும்,முகமூடி மனிதர்களும்!

Image
முந்தைய எனது  பதிவு, நிறைய செய்திகளை எனக்கு தந்துள்ளது! பதிவு  குறித்த தங்களது கருத்துக்களை   சொல்வதை விட,எதிர் கருத்தாளர்களின்  மோதல் களமாக இருந்ததை கவனிக்க முடிந்தது! எனது கருத்துக்கள்,அல்லது  பதிவில் சொன்ன கருத்துகள் உடன்பாடானதா? மறுக்கத் தக்கதா? உடன்படுவதாக இருப்பின் அது தொடர்பான கூடுதல் கருத்துகளை சொல்லியும்,வரவேற்றும், பாராட்டியும் சொல்வார்கள் என்ற எனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை! அதே போன்று,மறுப்பவர்கள் கூட ஆதாரங்களை, அல்லது நான் சுட்டிக்காட்டாமல் விட்டுள்ள விசங்களை தெரிவித்து மறக்கவில்லை!
    என்ன நடந்தது என்று பார்க்கும்போது, எனக்கு சில செய்திகள்{உண்மைகள்}தெரிந்தது. சகோதரர் ராபின் அவர்கள்,ஒரு போது பிரச்சனையை,மனித உரிமைப் பிரச்சனையை,குறித்து தனது கருத்தைச் சொல்லவில்லை.!     அமெரிக்காவின் ஆதிக்க மனோபாவத்தைப் பற்றி எந்த செய்தியும் தரவில்லை! ஏன்?,அமெரிக்காவுக்கு ஆதரவாகவோ, இரானுக்கு எதிர்ப்பாகவோ கூட... எதுவும் சொல்லவில்லை!     ஆனால், இந்த பதிவு அவருக்கு  பிடிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளார்! பதிவு குறித்து  எந்தவித கருத்தையும் சொல்லாமல், பதிவின் தாக்கத்த…

அமெரிக்காவின் ஆதிக்கமும், இஸ்லாம் எதிர்ப்புணர்வும்!

Image
ஈராக் அதிபராக சதாம் உசேன் இருந்த போது,ஈரானை தூண்டிவிட்டது அமெரிக்கா. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக,முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர்!  பிறகு இராக்கில் பயங்கர ஆயுதங்கள் இருபதாக கூறி இராக்கை ஆக்கிரமித்தது .சர்வதேச  அணுசக்திக் கழகம் ஈராக் முழுவதும் சோதனை போட்டும்  ஆயுதம் இருந்ததாக தெரியவில்லை.ஆனாலும் வம்படியாக ஈராக் ஆக்கிரமிக்கப் பட்டது, சதாம் தூக்கில் இடப்ட்டார்! இராக்கில் 43500 அமெரிக்கப்   படையினர்,-இன்றுவரைஇருந்து ஈராக்கின் இயற்கை வளத்தை கொள்ளையிடுகின்றனர்!     இராக்கில் பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, கொள்ளப்பட்ட பட்ட செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளியானது!    அமெரிக்காவுக்கு காவல் காக்கும்  ஐ.நா.சபை கண்டுகொள்ளவில்லை!     மனித உரிமை மீறல்கள் பற்றி  மார்தட்டும் மற்ற நாடுகளும்,  மக்களும் கூட கண்டு கொள்ளவில்லை!அப்புறம் ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனைத் தேடுவதாக சொல்லி, ஆக்கிரமித்தது!.  ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்ட பின்னரும்   அமெரிக்கா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளவில்லை!  இன்று  98 ,000  அமெரி…

போதிதருமரும், காஞ்சி புத்தர் தெருவும்!

Image
ஏழாம் அறிவு திரைபடத்தின் மூலம் இப்போது தமிழர்களுக்கு, காஞ்சியில் பிறந்த போதிதர்மரை பற்றி தெரிந்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! போதிதர்மர்  போலவே காஞ்சியில்  தர்மபாலர், தின்னாகர் பிறந்தவர்கள் என்பதை யார்{ படம் எடுத்து }சொல்லபோகிறார்கள்?  போதிதர்மர் சீன நாட்டிற்கு போனார்.. வேறு பெயரில் அழைக்கபட்டார்..., குங்க்பு தற்காப்புக் கலைக்கு, அவரே பிதாமகன்!, என்பதற்கு ஆதாரமான வரலாறு என்னிடம் இல்லை!     ஆனால் போதிதர்மர்  ஒரிசாவில் உள்ள,ராஜகிரி என்ற இடத்தில் ஹர்ஷவர்தன மன்னரால் ஆரம்பிக்கப் பட்ட, நாலந்தா  பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார் என்பது குறித்த வரலாறு தெரியும்!   போதிதர்மர் மட்டுமல்ல,   அவரைப் போலவே காஞ்சியில் பிறந்தவர்களான, தர்மபாலர், தின்னாகர் ஆகியோரும் நாலந்தாவில் பேராசிரியர்களாக இருந்தவர்கள்தான்!         பெளத்த சமய தர்மத்தை பல்வேறு நாடுகளில் பரப்புவதில்,  நாலந்தா பல்கலை கழகத்தில் பயின்ற அறிஞர்களுக்கு பெரும் பங்குண்டு!     போதிதர்மர், தர்மபாலர், தின்னாகர் போன்றவர்கள் பௌததர்மத்தை போதிக்கும் பேராசிரியர்களாக உருவான காஞ்சி பகுதியில் அப்போது பௌத்தர்களின் எண்ணிக்கை …

ஒரு ரோஜா தோட்டமும்,சாக்கடை நாற்றமும்.!

Image
ஒருவர்   ஆடம்பரமான, எல்ல வசதிகளும் உள்ள மாளிகையில்  அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை சுற்றி,குப்பைகளும்,அசுத்தக் கழிவுகளும்கொட்டி கிடக்கிறது. அதைபற்றிய கவலை, அக்கறை அவர்க்கு இல்லை. இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? விரைவில் ஈக்கள், கொசுகள் படையெடுக்கும்..., டைபாயிடு,மலேரியா,டெங்கு,காய்சல், மற்றும்  பலவித  நோய்தொற்று  ஏற்படும், ஆரோக்கியத்தை இழந்து மருத்துவமனைகளில் காலம் கழிக்கும் நிலை வீட்டில் உள்ளவருக்கு ஏற்படும்!  மற்றொருவர்,போதிய வசதி இல்லாத, ஆனால் சுற்றிலும் பூந்தோட்டம் உள்ள குடிசையில் வசிக்கிறார். அவரது நிலை எப்படி இருக்கும்? உடல்நலத்துடன் அமைதியான மன நிலையுடன் அவர் சந்தோசமாக இருப்பார்!


     முன்னவர்,சுற்று சூழ்நிலைபற்றிய அக்கறை இல்லாதவர், தான் வசதியுடன் இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர், பின்னவர் தனது வசதிகளை பெரிதாக கர்தாதவர், சுற்றுசூழ்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்!            நமது மக்களில் பலர் இப்போது, முன்னவரைபோல தான் , தனது, என்ற குறுகிய வட்டத்தை போட்டுகொண்டு, எவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம் நன்றாக இருக்கிறோமா? அது…

ஒரு ரோஜா தோட்டமும்,சாக்கடை நாற்றமும்.!

ஒருவர்   ஆடம்பரமான, எல்ல வசதிகளும் உள்ள மாளிகையில்  அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை சுற்றி,குப்பைகளும்,அசுத்தக் கழிவுகளும்கொட்டி கிடக்கிறது. அதைபற்றிய கவலை, அக்கறை அவர்க்கு இல்லை. இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? விரைவில் ஈக்கள், கொசுகள் படையெடுக்கும்..., டைபாயிடு,மலேரியா,டெங்கு,காய்சல், மற்றும்  பலவித  நோய்தொற்று  ஏற்படும், ஆரோக்கியத்தை இழந்து மருத்துவமனைகளில் காலம் கழிக்கும் நிலை வீட்டில் உள்ளவருக்கு ஏற்படும்!  மற்றொருவர்,போதிய வசதி இல்லாத, ஆனால் சுற்றிலும் பூந்தோட்டம் உள்ள குடிசையில் வசிக்கிறார். அவரது நிலை எப்படி இருக்கும்? உடல்நலத்துடன் அமைதியான மன நிலையுடன் அவர் சந்தோசமாக இருப்பார்!

     முன்னவர்,சுற்று சூழ்நிலைபற்றிய அக்கறை இல்லாதவர், தான் வசதியுடன் இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர், பின்னவர் தனது வசதிகளை பெரிதாக கர்தாதவர், சுற்றுசூழ்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்! 

          நமது மக்களில் பலர் இப்போது, முன்னவரைபோல தான் , தனது, என்ற குறுகிய வட்டத்தை போட்டுகொண்டு, எவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம் நன்றாக இருக்கிறோமா? அதுபோதும்!…

பில்ஸ்பெரி சப்பாத்தியும், பீட்டர் இங்கிலாந்து சட்டையும்,சொல்லும் ரகசியங்கள்!

Image
உலக மயமாக்களில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது, பில்ஸ் பெரி சப்பாத்தியும், பீட்டர் இங்கிலாந்து சட்டையும் என்பது நமக்கு தெரியும்! இவைகள் மட்டுமா நமக்கு கிடைத்து உள்ளது?"லேய்ஸ்,குர்குரே,பீட்சா, பெப்சி, கோகோகோலா, என்ற உணவும் பானமும்  கூட, உலகமயமாக்கலால் நமக்கு கிடைத்தவையே!  இன்னும்  பிடி பருத்தி,பிடி கத்திரிகாய்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட வித்தைகள் என பலதும் கிடைத்துள்ளன!     புதிய பொருளாதாரக் கொள்கையில் இந்தியா கையெழுத்திடும் பொது, இந்த ஒப்பந்தம்  காலத்தின் கட்டாயம், இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் தங்களது வளர்ச்சிக்கு தேவையான தொழில் நுட்பங்களை இதன்மூலம் பெறமுடியும்,  என்று கூறியதாக நினைவு!   இந்தியாவில் இனி தேனாறும் பாலாறும்  பாயபோகிறது என்று கனவு கண்டேன்.   அந்த கனவு இன்றுவரை கனவாகவே இருக்கிறது! ஆனால நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக இருந்தது!  தொழில் துறையில் சிறிய பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் தங்களது தொழிற்கூடங்களை மூடிவருகின்றனர். காரணம், அந்நிய பகசூரக் கம்பனிகளுடன் போட்டிபோட அவர்களுக்கு தெம்பிலாமல்போனதுதான்! பன்னாட்டு கம்பனிகளுக்கு, இறக்குமதியில்…

பில்ஸ்பெரி சப்பாத்தியும், பீட்டர் இங்கிலாந்து சட்டையும்,சொல்லும் ரகசியங்கள்!

உலக மயமாக்களில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது, பில்ஸ் பெரி சப்பாத்தியும், பீட்டர் இங்கிலாந்து சட்டையும் என்பது நமக்கு தெரியும்! இவைகள் மட்டுமா நமக்கு கிடைத்து உள்ளது?லேய்ஸ்,குர்குரே,பீட்சா, பெப்சி, கோகோகோலா, என்ற உணவும் பானமும்  கூட, உலகமயமாக்கலால் நமக்கு கிடைத்தவையே!  இன்னும்  பிடி பருத்தி,பிடி கத்திரிகாய்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட வித்தைகள் என பலதும் கிடைத்துள்ளன!!
     புதிய பொருளாதாரக் கொள்கையில் இந்தியா கையெழுத்திடும் பொது, இந்த ஒப்பந்தம்  காலத்தின் கட்டாயம், இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் தங்களது வளர்ச்சிக்கு தேவையான தொழில் நுட்பங்களை இதன்மூலம் பெறமுடியும்,  என்று கூறியதாக நினைவு!   இந்தியாவில் இனி தேனாறும் பாலரும் பாயபோகிறது என்று கனவு கண்டேன்.   அந்த கனவு இன்றுவரை கனவாகவே இருக்கிறது! ஆனால நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக இருந்தது!  தொழில் துறையில் சிறிய பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் தங்களது தொழிற்கூடங்களை மூடிவருகின்றனர். காரணம், அந்நிய பகசூரக் கம்பனிகளுடன் போட்டிபோட அவர்களுக்கு தெம்பிலாமல்போனதுதான்! பன்னாட்டு கம்பனிகளுக்கு, இறக்குமதியில்,உற்பத்தியில்,மின்சார…

இந்தியாவின் ராஜபாட்டையால் யாருக்கு லாபம்?

Image
வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் முக்கிய நகரங்களான  சென்னை,கொல்கத்தா,மும்பை,டெல்லி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம்  தங்க நாற்கரசாலைத் திட்டம் என்று பெருமை படுத்தப்பட்டு, தொடங்கப்பட்டது!  இன்று நன்குவழிப் பாதை, ஆறுவழிப் பாதையாக மாற்றப் பட்டு வருகிறது! இந்த திட்டத்தை தொடங்கியபோதே, அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கும், அவர்களது எதிர்கால இந்திய சுரண்டலுக்கும் கொள்ளைக்கும்தான் செய்கிறார்கள் என்று எனது விடியலும் விடுதலையும் என்ற சிறு நூலில் சுட்டிக்காட்டி இருந்தேன்!  தரிசு நிலா மேம்பாடு திட்டம், போக்குவரத்துக்களை சீர்குலைக்கும் செயல்கள் மூலம் போக்குவரத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் எண்ணம், ஆகியவைகளைப் பற்றி இன்று திட்ட கமிசன்  துணைத் தலைவராக இருக்கும் மண்டேக்ஸ் சிங் அலுவாலியா பொருளாதார மாற்றத்திற்காக வழங்கியிருந்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் காட்டி எழுதியிருந்தேன்!         அன்று சொன்னது, இப்பொது நடந்து வருகிறது!  கார்கில் என்றொரு உலக அளவில் உணவுப் பொருட்களை விற்பனைசெய்யும் நிறுவனத்தின் பணி என்னவென்றால், உலகில் எங்கு,என்ன பொருள் விளைவிக்க முடியுமோ அத்தனை உற்பத்தி …

கூடா நட்பும்,நல்லநட்பும்- ஒரு பார்வை!

Image
கருணாநிதி அவர்கள் தேர்தல் தோல்விக்கு பிறகு கூடா நட்பு குறித்து புலம்பியபோதே, எது நல்ல நட்பு?  என்பதான பதிவு ஒன்றை செய்ய நினத்திருந்தேன். சமயம் வாய்க்கவில்லை!   கூடாநட்பு குறித்து கருணாநிதி புலம்பியபோது, எனக்கு வேடிக்கையாக இருந்தது!.   " வாழும் வள்ளுவரே!"  "ஐந்தாம்  தமிழே!!"   "மனுநீதி சோழனே!!! "என்று, போகுமிடம் எல்லாம் அவரது  உடன்பிறப்புகள் தமிழகம் எங்கும் விளம்பரப்  பதாகைகளை வைத்து...  செய்த ஆர்பாட்டங்கள் நினைவுக்கு வந்தது!
            அது மட்டுமின்றி,  வாழும் வள்ளுவரான  இந்த பெரியவர், திருக்குறளை குறளோவியமாக தீட்டிய கதையும்  நினைவில் வந்ததால், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!   குரலோவியம் எழுதிய வாழும் வள்ளுவர்,  கூடாநட்பைப் பற்றி குறிப்பிட்டது,'  பட்டபின் உணரும் பட்டினத்தாரின் பழக்கமாகவும்', 'கண்கெட்டபின்பு கிடைத்த ஓவியம்  போன்றும்'  அல்லாவா இருக்கிறது?!     கூடாநட்பு குறித்து,   வள்ளுவர்  முன்பே சொல்லிஇருந்தும், இவரே அதை குறளோவியமாக காட்டி இருந்தும், இவர்  பின்பற்றவில்லை,   முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டவில்லை என்றுதானே ஆகிறது?பாவம்  …

தமிழர்களின் தொடர் தொல்லைகளுக்கு காரணம் !

Image
ஒரு மொழி வாழவேண்டுமால், அந்த மொழிபேசும்  மனிதர்கள் வாழவேண்டும்!  அந்த  இனத்தின் நாகரீகம், கலாச்சாரம், வரலாறு, மொழி  அனைத்தையும் போற்றி பாதுகாக்கப் படவேண்டும்!     அந்த இனத்தினரின் வாழ்வாதாரங்களுக்கு,  ஆளுபவர்களும்,ஒட்டுமொத்த சமூகமும் பாதுகாப்பும்,உறுதியும் அளித்து உதவ  முன்வர வேண்டும்!

       தமிழினமும் வாழவேண்டும் என்ற  எண்ணம் ஆட்சியில் உள்ளவர்களிடம் உள்ளதா? என்றால் இல்லை என்பதுதான் நிலவரமாகும்!    தொன்மையான பண்பாடு,கலாச்சாரம், வரலாறு,உள்ள தொன்மையான மொழியாகிய,தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களுக்கு  என்ன செய்துள்ளது? தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் படுகிறதா? இல்லை பறிக்கப் படுகிறதா? என்று பார்த்தால்,  அவைகள் திட்டமிட்டு,  பறிக்கபடுகிறது  என்ற உண்மை புரியும்!      இந்தியாவிலேய மிகவும் வளமான பகுதியும்,  தொன்மையான கலாச்சாரமும் கொண்ட பகுதி என்பது, திராவிடர்களின் வாழ்விடங்களான  கருநாடகம்,ஆந்திரம்,கேரளா,தமிழகம் ஆகிய பகுதிகளாகும்!
வளமான இந்த பகுதிகளின் இன்றைய நிலை என்ன? இந்த பகுதிகளின் வளர்சிக்கு,மக்களின் நலனுக்கு,  ஆட்சியாளர்கள் செய்தது என்ன?  செய்தது ஒன்றுமில்லை! மாறாக இருப்பதையும் சு…

தமிழ்மொழி செம்மொழியா, காட்டுமிராண்டி மொழியா?

Image
தந்தை பெரியார் தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழியென்று சொன்னதாக படித்திருக்கிறேன்!  கருணாநிதி தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தியததையும் பார்த்திருக்கிறேன்!  அதனால் வந்த சந்தேகமே இந்த கேள்வியும் தலைப்பும்!
      தவிர நான் ஏதொ,பயங்கரமான இந்துமத எதிர்பாளன் என்பதுபோலவும்,தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குவது போலவும் சிலர் புரிந்துகொண்டு,'கருத்து கந்தசாமியாக'        'கமெண்டும்' போட்டுள்ளதால் சர்சைகளை உருவாக்காத பதிவு ஒன்றை போடவேண்டும் என்று நினைத்ததன் விளைவும்  இந்த பதிவுக்கு  காரணமாகும்!      இதுவும் சர்சையானால், கலைஞரைப்போல 'என் ராசி அப்படி' என்று புலம்பி தீரவேண்டும்!


  "  நாரதர் கலகம் நன்மையில் முடியும்"? என்று ஆன்மீக அன்பர்கள் சொல்லுவதைப்போல, { அப்பாடா, அவர்களிடம் இருந்து சமாளிக்க ஒரு வழியை கண்டுபிடித்து விட்டேன்}  நன்மையில் முடிந்தால் சந்தோசம்!
       " நான்.. சண்டையை தொடங்குகிறேன், சமாதானத்துக்காக!, நீயோ... சமாதானமாக இருக்கிறாய், என்னோடு சண்டையிடுவதற்காக!!" என்று வைரமுத்து சொன்னதைப்போல, இப்போது சமாதானமாக இருப்பவர்கள் என்னோடு சண்டைபோட்டாலும் சரித…

அத்வானி யாத்திரையும்,வெடிகுண்டு கலாட்டாவும்!

Image
அத்வானி யாத்திரை என்று கிளம்பியபோதே, என்ன நேருமோ? என்று அச்சப்படுவதாக பதிவை செய்திருந்தேன்!   மனுஷன் என்னநடந்தாலும் பரவாயில்லை என்று யாத்திரை கெளம்பி,தமிழ்நாட்டுக்கு வந்தபோது குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது!  நல்லவேளை, வெடிக்கும் முன்பு கண்டுபிடித்துவிட்டார்கள்!  கண்டுபிடித்து, காவல்துறையினர் அல்ல,   ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்தான்!   கண்டுபிடிக்காமல், குண்டுமட்டும் வெடித்து இருந்தால்,   என்ன நடந்து இருக்கும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது!   முன்புஒருமுறைஅத்வானி கோவை வந்தபோது, வெடித்த குண்டுகளால்,அப்பாவி முஸ்லிம்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்!  ஷோபா ஜவுளிக்கடை சூறையாடப் பட்டது!  பல முஸ்லிம்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது, நூற்றுக்கும் அதிகமானவர்கள் வீடு,வாசலை இழந்து அனாதை ஆனார்கள்!, ஜாமீன்கூட கிடைகாமல்,சிறையில் சீரழிந்தனர்!  புண்ணியவான் போகும் இடமெல்லாம்  முஸ்லிம்கள் பாதிக்கப்படுவது, வாடிக்கையாக உள்ளது!           கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு  குஜராத்,ராஜஸ்தான் பகுதியில் இருந்த மார்வாடிகள் கோவைக்கு வந்து தமிழகபிரஜைகளாக ஆகமுடிந்தது! இன்று  கோவையில்  உள்…

2- ஜி ஊழலில் சுபிரமணியசாமியின் பங்களிப்பு என்ன?

Image
அரசியல்வாதிகளில் நேரடியாக மக்களைசந்திப்பவர்கள், பிரச்சனையை சந்திப்பவர்கள் ஒருரகம் இருகிறார்கள்! சிதம்பரம்,தயாநிதி,ஏன் பிரதமரே கூட அத்தகையவர் எனலாம்!  மக்களை சந்திக்காமல்,மக்களின் பிரச்சனைகளில் அக்கரைகொள்ளாமல்,  தனக்கு ஏற்ற, ஆதாயம் அடையும் விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, ஓட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி, அரசியல்வாதிகளையும் ஏமாற்றி, பத்திரிக்கைகளில் மட்டுமே சவடால் அடித்து வரும் அரசியல்வாதி ஒருவரை சொல்லவேண்டும் என்றால் இவரைத்தான் சொல்லவேண்டும்!  பிளாக்மெயில் அரசியலுக்கு பேருபோன சுபிரமணிசாமி  2- ஜி ஊழலில் ஆரம்பம் முதலே ஆர்வமுடன் இருந்துவருவது, ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது!


    இவரது ஆர்வத்துக்கு காரணம்,நாட்டு  மக்கள் மீது கொண்ட அக்கறைதான் என்பது நம்பும்படி இல்லை! காரணம், ஒட்டு கோவணத்துடன் காட்டிலும்,கழனியிலும் கஷ்டப்படும் இந்திய பற்றுள்ள குடிமகனாக இவரை  யாரும் எண்ணமாட்டார்கள்!  ஹார்வர்டு பேராசிரியரான இவருக்கு கொவனாண்டிகளுடன் கொஞ்சும் பழக்கமில்லை! குபெரர்களான,தொழில் அதிபர்களுடந்தான் உறவுகொள்ளுவார்!  எனவே,  2- ஜி ஊழலில் சிக்கியுள்ள பெரும்பணக்கரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் இவர்  விரோதியு…

வலையுகம்: பயங்கர தீவிரவாதியின் உண்மை கதை

தூக்குத்தண்டனை கண்ணாமூச்சு

Image
ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான  'பெல்ட் பாம்'  யாரால் தயாரிக்கப் பட்டது?   என்பதைகூட கண்டு பிடிக்காத நிலையில், பெல்ட்பாம் செய்ய பேட்டரி வங்கிக் கொடுத்ததாகவும், அவர் வங்கிக் கொடுத்ததற்கு ஆதாரமான,    பேட்டரி வாங்கிய ரசீது 23  நாட்கள் கழித்து, அவரது சட்டை பையில் இருந்து எடுத்ததாகவும் போலிசு கூறிய  பொய்யின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.   23 நாட்களாக ஒரு சட்டையை   மாற்றாமலும்    துவைக்காமலும் வைத்திருக்கும் அப்பாவிப் பிள்ளை பேரறிவாளன் என்றுதானே ஆகிறது!?       போகட்டும், பேட்டரி [செல்] வாங்கினால்,  எந்த கடைக்காரன்    ரசீது போட்டு கொடுக்கிறான்?


   ராஜீவ்காந்தி படுகொலையில் சுப்பிரமணி சாமிக்கும், சந்திரா சாமிக்கும் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது,  புடுங்கி கத்தை கட்டும்  இந்திய  புலனாய்வு புலிகள் லண்டனுக்குவிசாரிக்கப் போனார்கள்!  விமான நிலையத்தில் கொண்டுபோன ஆவணங்களை காணோம்,தொலைந்து விட்டது என்று கையை வீசிக்கொண்டு திரும்பி வந்தார்கள்! ஆவணங்களின்  பிரதிகளைக் கூடவா எடுத்துவைக்காமல்,அசால்டாக  ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரணை செய்தார்கள்…