இந்திய நீதிமான்களின் இரட்டைவேசம்!

" சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்' என்று சொல்லப்பட்டாலும்,  இந்திய நீதிமன்றங்கள் அப்படித்தான் செயல்படுகின்றனவா?  எல்லோரும் சட்டத்தின் முன்னால் சமமாக நடதப்படுகின்றனரா? என்ற கேள்வி சிந்திப்பவர்களின் மத்தியில் இருந்துவருகிறது!     நீதிபதிகளின் தனித்த லாபங்கள்,விருப்பு வெறுப்புக்கள், அரசியல் நிர்பந்தங்கள், மதம்- சாதிய பற்றுக்களால் சமத்துவமான அணுகுமுறைத் தீர்ப்புகள் வருவது அருகி வருகிறது.     பலவழக்குகளில் பாரபட்சமான தீர்ப்புகள் கூறப்பட்டு, நீதித் துறையின்மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்து வருவதை பார்க்கமுடிகிறது!  
       
        " பாபர் மசூதி யாருக்கு சொந்தம்? "என்று கூறவேண்டிய நீதிமன்றம்,  "குரங்கு அப்பத்தைப் பங்கிட்ட கதையாக",  ஆளுக்கு கொஞ்சம் சொந்தம் என்ற அலகாபாத் நீதி மன்றத் தீர்ப்பு சமீபத்து உதாரணம் ஆகும்!       ரத  யாத்திரை நடத்தி, நாட்டை ரத்தக் காடக்கிய  அத்வானிக்கு     நீதிமன்றம் வழங்கிய கருணைத் தீர்ப்பும்,       குஜராத் படுகொலை, கலவரத்தில் மோடியின் பங்களிப்பை கேள்விக்கு உள்ளாக்காத நீதிபன்றங்களின் பாராமுகமும்  இந்திய நீதித்துறையின்  பாசிச குணத்திருக்கு சான்றுகள்! 
         ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான  'பெல்ட் பாம்'  யாரால் தயாரிக்கப் பட்டது?   என்பதைகூட கண்டு பிடிக்காத நிலையில், பெல்ட்பாம் செய்ய பேட்டரி வங்கிக் கொடுத்ததாகவும், அவர் வங்கிக் கொடுத்ததற்கு ஆதாரமான,    பேட்டரி வாங்கிய ரசீது 23  நாட்கள் கழித்து, அவரது சட்டை பையில் இருந்து எடுத்ததாகவும் போலிசு கூறிய  பொய்யின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது என்றால், நீதிமன்றத்தை என்னவென்று சொல்லுவது?      23 நாட்களாக ஒரு சட்டையை   மாற்றாமலும்    துவைக்காமலும் வைத்திருக்கும் அப்பாவிப் பிள்ளை பேரறிவாளன் என்றுதானே ஆகிறது!?       போகட்டும், பேட்டரி [செல்] வாங்கினால்,  எந்த கடைக்காரன்    ரசீது போட்டு கொடுக்கிறான்?

        ராஜீவ்காந்தி படுகொலையில் சுப்பிரமணி சாமிக்கும், சந்திரா சாமிக்கும் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது,  புடுங்கி கத்தை கட்டும்  இந்திய  புலனாய்வு புலிகள் லண்டனுக்குவிசாரிக்கப் போனார்கள்!  விமான நிலையத்தில் கொண்டுபோன ஆவணங்களை காணோம்,தொலைந்து விட்டது என்று கையை வீசிக்கொண்டு திரும்பி வந்தார்கள்! ஆவணகளின் பிரதிகளைக் கூடவா எடுத்துவைக்காமல்,அசால்டாக  ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரணை செய்தார்கள்?  இன்று இரட்டை அலைவரிசை ஊழலில், 'யோக்கிய சிகாமணி சுப்பிரமணி சாமி' என்னையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க கோருகிறார்!, உச்ச நீதிமன்றத்துக்கு இதுவெல்லாம் தெரியாதா? சிதம்பரத்துக்கு தெரியாதா?   எல்லாம் தெரியும்!    கொலைகாரர்களை  காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் இவர்களைப்போலவே நீதி மன்றத்திற்கும் இருப்பதாலும்    பலியாவது தமிழர்கள் என்பதாலும் நீதிமன்றங்கள் இரட்டைவேசத்தை போட்டுக் கொல்லுகிறது! 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?