விஜயகாந்த் காங்கிரசில் சேருவாரா?

காங்கிரசில் சேரச் சொல்லி இளங்கோவனும்,  இளைஞர் அணித் தலைவர் யுவராஜும் விஜயகாந்துக்கு அழைப்பு விட்டு உள்ளனர், தங்கபாலு அழைப்பு விடுவது தான் பாக்கி!  விஜயகாந்த், ஆந்திர சிரஞ்சீவியைப் போல தனது  கட்சியுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருப்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டார்கள்!   வலையை வீசிவிட்டு காத்திருக்கிறார்கள்!        மாட்டிக்கொண்டால், லாபம்தான் என்பது இவர்களைப் பொறுத்தவரை சரிதான்!. விஜயகாந்த் காங்கிரசின் அழைப்பை நிராகரிக்கவில்லை, அதுபற்றி இதுவரை அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை. பத்திரிக்கையாளர்கள் கூட அவரிடம் கேட்டகவில்லை! பாவம் தன்னைப் பற்றிய அதீத நம்பிக்கையில், சந்தித்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அவரால் பெற முடியாத சோகத்தில் இருந்து, மீண்டுவரவில்லை என்பது தெரிகிறது!          அவரது கட்சியில் வெற்றிபெற்ற  பிரதிநிதிகள் கூட ஆளும் கட்சிக்கு தாவும் நிலை ஏற்பட்டு உள்ளது.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை,தொண்டர்களுக்கு{?}  கட்சியில் மரியாதை இல்லை என்ற குரல்கள்வேறு, இப்போது அக்கட்சியில் ஒலிக்கின்றன!  கூட்டணி இல்லை என்றால் விஜயகாந்தின் கட்சியால் வெற்றிபெற முடியாது என்ற உண்மை தெரிந்துள்ளது. விஜயகாந்த் காங்கிரசின் அழைப்பை ஏற்று கொள்வாரா? அல்லது தனியாகவே கட்சியை நடத்துவாரா? என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர் காங்கிரசில் சேர்த்துவிட்டால் என்னவாகும்?

        தீராத தலைவலியாக நினைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் உள்ளபடியே மகிழ்ச்சி அடையும்! ஆ தி.மு.கவும்,     தி.மு.கவும் கூட,     'இனி  நமக்குள் தான் பங்காளிச் சண்டையே'     என ஆறுதல் அடையும்!     சீமான்,நெடுமாறன்,வைகோ போன்றவர்கள் கடுமையாக      விஜயகாந்தை தமிழின துரோகி என்று, வறுத்து எடுப்பார்கள்!      எதிரிகளும்,     துரோகிகளும்   கைகொர்த்துவிட்டார்கள்! என்று கண்டன அறிக்கைகள் பறக்கும்.        பத்திரிக்கைகளுக்கு, "வேறு பரபரப்பு செய்தி" கிடைக்கும் வரை,    விஜயகாந்த் செய்தது சரியா,தவறா? என்று விவாதிக்கும்! பட்டிமன்ற அரசியலில் கூட    பரிகாசமாகப்   பேசப்படும்!

          காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த விஜயகாந்த்,மீண்டும்    'தேசிய நீரோட்டதில்'இணைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவரைப் பாராட்டுவதாகவும் சோனியா,மன்மோகன் புகைப்படத்துடன் காங்கிரஸ் செய்தி வரும்! அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக ஜோதிடர்கள் கணிப்பார்கள்!     {காங்கிரசின்  சின்னம்  'கையாக' உள்ளதால்,ஜோதிடர்களில்  பலரும் கங்கிரசாமே,உண்மையா?}
                                                                  
          இவ்வளவும் நடந்தபிறகு, தமிழகத் தலைவர்களில் யார் பெரியவர் என்ற மோதல் நடந்து,காங்கிரசில் கூடுதலாக ஒரு அணி விஜயகாந்த் பெயரில் உருவாகும்! விஜயகாந்தை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக தங்கபாலு அறிவிப்பு செய்தாலும் செய்வார்,அப்போதும் தங்கபாலு தலைவராக இருந்தால்!


எம்.ஜி. ஆர்  காங்கிரசில் இருந்தால் காணமல் போய்விடுவோம் என்று நினைத்து,  தி.மு. கவுக்கு வந்தார்!   தி.மு.கவில் இருந்தால் மதிப்பு இல்லை என்று நினைத்த, சிவாஜி கணேசன் காங்கிரசுக்கு போனார்.   பாவம்  அவருக்கு சிறந்த நடிகர் என்று  ஒரு தேசியவிருதைக் கூட கொடுக்காத காங்கிரஸ்......,         எம்.ஜி.ஆருக்கு, "பாரத ரத்னா" விருதையே கொடுத்து அழகு படுத்தியது! அதுவும் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த,   "அண்ணல் அம்பேத்கருக்கு" கொடுக்காமல்,    அவருக்கு முன்பே கொடுத்து,     தனது ஆரிய இனப்   பாசத்தை காட்டியது.! 
                                                                               தேசிய  முற்போக்கு திராவிட கழக தலைவருக்கு என்னவெல்லாம்  கிடைக்கும் என்பது காங்கிரசில்  சேர்ந்தால் தெரிந்துவிடும்!
               

Comments

 1. என்ன சார் புதுசு புதுசா என்னென்னவோ சொல்றீங்க!

  ReplyDelete
 2. உண்மை நிலையை உரக்க சொல்லியிருக்கிறீர்கள்..!!

  பகிர்வுக்கு நன்றி..!!  எனது வலையில் இன்று:

  தமிழ்நாடு உருவான வரலாறு

  தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete
 3. உங்கள் வலைப்பூவை பின்தொடர்ந்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. தயக்கமே பலருக்கும் பிரச்சனையை உண்டுபண்ணி விடுகிறது. எனவே தயங்காமல் மனதில் பட்டதை சொல்லிவிடுவது நல்லது என்பது என்னுடைய கருத்தாகும்! நன்றி!

  ReplyDelete
 5. ஆந்திராவில் காங்கிரசில் சேர்ந்த சிரஞ்சீவிக்கு என்ன நடக்கிறதோ அதே தான்,...

  நல்லா கிளப்பராங்கையா பீதியை..

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?