தூக்கு தண்டனைக்கெதிரான உண்ணாநிலைப் போராட்டத்தில் எனது பங்கேற்பு.

   தூக்கு தண்டனையை சட்டத்தில் இருந்து முற்றிலும் நீக்கக் கோரி,தமிழுணர்வாளர்கள் சென்னையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்." NO DEATH PENALITY ' என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில்  23.10.2011  அன்று 32 -ஆம் நாள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு அந்த வாய்ப்பை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக முன்பு இருந்தவரும்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை தற்போது நடத்தி வருபவரும் ஆன புதுக்கோட்டை கே.எம்.ஷெரிப் என்பவர் வழங்கி இருந்தார்.திராவிட கழகத்தில் இருந்து,ஆனைமுத்து தலைமையில் திராவிட கழகம் இயங்கிய பொது அதில் இருந்து,பிறகு ம.தி.மு.க.,வந்து,பாட்டாளி மக்கள் கட்சிக்கு போனவர்,மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்து,திராவிட கட்சியாக சொல்லப்படும் பா.ம. க.வில்,  தலித்துக்களை,முஸ்லிம்களை பிரித்து சிறுபான்மைப் பிரிவு,தாழ்த்தப் பட்டோருக்கான sc /st  பிரிவுகள்  தொடங்குவதை எதிர்த்து வெளியேறியவர்!.{அரசியல் தீண்டாமையை தொடரும் ஆதிக்கவாதிகளின் சிந்தனைதான் ஜனநாயகத்தில் இதுபோன்ற பிரிவுகள் என்பார்}முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளாத,தமிழரான அவரது அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்து கொண்டபோது தான் எத்துனை அரியவாய்ப்பு இது! என்று தெரிந்தது.

       நான் கலந்து கொண்ட போராட்டத்தில், விடுதலை ராஜேந்திரன்,பெரியார் தாசன்,,மார்சிஸ்ட் கட்சி மாநில பொறுப்பாளர் மகேந்திரன்,மக்கள் தமிழகம் அமைப்பு புரட்சிக் கவிதாசன்,ஆதி தமிழர் பேரவை வினோத் ஆகியோருடன்  ஆளூர் ஷானவாஸ்,பாண்டியன் ஆகிய பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டது இதமளித்தது. இந்தியாவில்  தூக்கு தண்டனையை முற்றிலும் நீக்க கோரும் இந்த தொடர் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு காரணம், இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கால் நிரபராதிகள் என்று தெரிந்தும்  விடுதலை செய்ய மனமின்றி சிறையில் வாடும்  பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோர்களின் பரிதாப நிலைதான்.
          இந்த போராட்டத்தை ஆரம்பிக்க காரணமானவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மூன்று பெண் வழக்குரைஞர்கள் தான்!, உயர்நீதி மன்ற வளாகத்தில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோயம்பேடு பகுதிக்கு போராட்டம் மாற்றப்பட்டது. தொடர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டு,பல தமிழ் உணர்வாளர்கள்,அமைப்புகள் முலம் நடந்து வருகிறது! இதில் ஒரு பெரும் சோகம் என்னவென்றால்,தமிழக தலைநகரில் தங்களது உணர்வுகளை ஜனநாயக வழியில் வெளிப்படுத்த,எதிர்ப்புகள் பலமாக இருப்பது போல,இடமும் இல்லாத நிலை இருப்பதும் ஆகும்!  திருச்சி சவுந்தர ராஜன் என்ற முன்னாள் சட்டமன்ற உறப்பினர் தயவால் அவருக்கு சொந்தமான இடத்தில நடக்கும் போராட்டத்துக்கு  தினமும் ஒரு அமைப்பு பொறுப்பு ஏற்றுகொள்கிறது.

         உணர்வு ரீதியான இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர்கள் பேரவை, கிருஸ்துவ தோழமை இயக்கம்,மாற்றத்திற்கான செய்தியாளர்கள் அமைப்பு,ஓவியர்கள் சங்கம்,பெண்கள் அமைப்புகள் ஆகியவைகளும் தமிழர் தேசிய அமைப்புகளுடன்  பங்கேற்ப்பது நம்பிகை தருகிறது! மனித நேயம் மறைந்து போகவில்லை என்பதை காட்டுவதாக உள்ளது!    ஈழத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு காரணம் என்னென்ன? தமிழர்கள் ஏன் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்? ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் என்ன? யாரெல்லாம் குற்றவாளிகள்? இதற்குதீர்வு தான் என்ன? என பேசப்பட்ட விஷயங்கள்,படங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்!
    மார்டின் லூதர் கிங் சொன்னது, "இப்போது நாம்  மிகவும் வருத்தப் படவேண்டியது,கொடியவர்களின் தீமைகளைக் காட்டிலும் நல்லவர்கள் என்போரின் மவுனத்தையே!" ஈழதமிழர்களின் அழிவை வேடிக்கை பார்த்த நல்லவர்கள் அப்பாவி தமிழர்களின் உயிர் பிரச்சனையிலும் அவ்வாறே இருப்பது வருத்தத்தை தருகிறது!

Comments

 1. அருமை.. கலக்குங்க

  ReplyDelete
 2. பின்றீங்க போங்க....

  ReplyDelete
 3. மார்ட்டின் லூதர்கிங் சொன்னது சிந்திக்க வேண்டிய விஷயம்.

  ReplyDelete
 4. செம்புலப் பெயல் நீர் போல அன்புடையோர் மனங்கள் கலப்பது இயற்க்கை தானே! நண்பரே.

  ReplyDelete
 5. பின்னறது எல்லாம் நம்ம வேலை இல்லேங்க,சிக்கு எடுப்பதுதான்.நன்றி சண்முக தோழரே!

  ReplyDelete
 6. தமிழகத்தில் உள்ள நல்லவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்பது தன்எனது ஆதங்கம் நண்பரே!

  ReplyDelete
 7. உங்கள் பாதையும் பயணமும் உயர்ந்தவை தன்னலமற்றவை
  வெற்றிக்கு இந்த எளியவனின் வாழ்த்தும்
  (நல்லவன் வாழ்வான் )

  ReplyDelete
 8. என்ன குணா சார்,இணையத்தையும் விடவில்லையா? நல்லா இருக்கிங்களா? புதுசா நாடகம் போட்டா சொல்லுங்க! அப்படியே ரெண்டு பாசும் அனுப்பி வையுங்க,சரிதானே?

  ReplyDelete

Post a Comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?