சர்தார் ஜோக்குகளில் உள்ள வக்கிர வரலாறு!


     எவரையும் புண்படுத்தாத,படித்தவுடன் சிரிக்க வைக்கும் ஜோக்குகளை விட,யாரவது ஒருவரை கிண்டலடித்து,எழுதப்படும் ஜோக்குகளே அதிகமாகி வருகிறது!  நமது ரசனையை தாழ்த்திகொள்ளும்  ஜோக்குகளே அதிகமாக வருவது,நல்லதல்ல.அதுவும்,ஒரு சமூகத்தையே கேவலமாக  சித்தரித்து வரும் ஜோக்குகளை படிக்கும்போது, சிரிப்புக்கு பதில் வேதனை ஏற்படுகிறது. சர்தார் ஜோக்குகள் அத்தகைய   ரகமாகும்.சர்தார்கள் என்று நாம் சொல்லுவது சீக்கியர்களைதான்! இவர்களைப்போல கடின உழைப்பாளிகள் யாரு இல்லை.எவரையும் ஏமாற்றி பிழைக்காதவர்கள், தங்களது,உழைப்பையே நம்புபவர்கள்,மூட நம்பிக்கை இல்லாதவர்கள், பிச்சை எடுப்பதை விரும்பாதவர்கள் நியாயமாக தங்களுக்கு கிடைப்பதை மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள் சீக்கியர்களான சர்தார்கள்தான்!


      இந்திய ராணுவத்தில் அதிகமாக உள்ளவர்கள் சீக்கியர்கள்தான்!   ரெஜிமெண்ட் என்று சொல்லும் படைப் பிரிவுகளில் பதினான்கு ரெஜிமெண்ட், சீக்கியர்கள் உடையது. நாட்டை காப்பதில் முக்கிய பங்காற்றி வரும், கடின உழைப்பும்,வீரமும் உள்ள ஒரு இனத்தை முட்டாளாக சித்தரித்து ஜோக்குகள் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி சிரிக்க முடியும்? சரி, இத்தனை பெருமைக்கு உரிய இவர்களை ஏன் முட்டாளாக சொல்கிறார்கள்?உண்மையில் இவர்கள் முட்டாள்களா?  என்றால் இல்லை என்பதுடன் உழைப்பை கேலி செய்யும்,உழைப்பை விரும்பாமல்,  மக்களை  ஏமாற்றும் சிலரது வக்கிரங்களின் விளைவே சர்தார்களை முட்டாள்களாக சித்தரித்து வருகின்றது எனலாம்!


      சீக்கியர்களின் வேதநூலானது  இந்து மதத்தில் நிலவிவரும்,மூட நம்பிக்கைகளை,கவிக்கு உதவாத பழக்கங்களை கண்டித்து வருகின்றன. பகுத்தறிவு சிந்தனையும் யதார்த்தத்தையும் கொண்டுள்ளவை யாகும். தவிர சீக்கிய மதமே {மார்க்கமே} இந்துமதத்தை வெறுத்த மக்களால் உருவானதாகவும் சொல்லப் படுகிறது. உதாரணத்துக்கு சீக்கிய கதை ஒன்றை பார்க்கலாம்.,


        ஆற்றோரமாக ஒரு பிராமணர் திதி செய்துகொண்டும் நீரை வாரி இறைத்தும் கொண்டிருப்பதை விளங்காமல் ஒரு சர்தார்ஜி பார்த்து,அவ்வாறு செய்யும் பிராமணரிடம் ,"எதற்காக இப்படி செய்கிறாய் "என்று கேட்டான். அந்த பிராமணர், "இறந்துவிட்ட தன் முன்னோர்களுக்கு  தாகம் ஏற்பட்டால் அருந்துவதற்கு நீரை ஆகாயத்தை நோக்கி இறைப்பதாக"   கூறியதை கேட்டு,சிரித்துகொண்டு சென்றான். அடுத்த நாள்  அவன் பிராமணர் வருவதைப் பார்த்து,ஆற்றில் இறங்கி வேகமாக நீரை கரையோரம் வாரி இறைத்தான்.அதனை கவனித்த  பிராமணர்,  "எதற்கு நீ இப்படி செய்கிறாய்?" என சர்தார்ஜியை கேட்டார்." நான் மூன்று மைல் தொலைவில் உள்ள தனது வயலுக்கு நீரிறைத்து ஊற்றுவதாக" கூறியதை கேட்டு,"அடேமுட்டாள்  மூன்று மைல் தூரத்தில் இருக்கும் வயலுக்கு நீ இறைக்கும் தண்ணீர் எப்படி போகும்?" என்று  கேட்டு,சிரித்தார்!
    அதற்கு   சர்தார்ஜி, "ஆகாயத்தில் இருக்கும் உன் முன்னோர்களின் தாகத்தை    இங்கிருந்து நீ இறைக்கும் தண்ணீரால் தீர்க்க முடியும் பொது, மூன்று மைல் தூரத்தில் இருக்கும் என்வயலுக்கு போகாதா? " என்று கேட்டான்.பிராமணரால் பேசமுடியவில்லை!
       இதுபோல பல கருத்துக்களையும்,பகுத்தறிவு சிந்தனையும் கொண்டுள்ளதாலும் சீக்கிய மதம் இந்து மதத்தில் உள்ள முட்டாள்தனத்தை கண்டிப்பதாலும் ஏற்பட்ட வெறுப்பினாலேயே சர்தார்ஜிகளை மட்டம்தட்ட அவர்களை முட்டாள்களாக சித்தரித்து ஜோக்குகள் சொல்லப்பட்டு வருகின்றது! இப்போது சொல்லுங்கள்,பிச்சையே எடுக்காத சர்தார்ஜிகளா?அல்லது பிச்சை எடுப்பதை புத்திசாலிதனம் என்று கூறும் நாமா? யார் முட்டாள்கள் என்று!

Comments

 1. நண்பரே! சர்தார்ஜீகள் மட்டுமல்ல! குஜராத்திகளைப் பற்றி குஜ்ஜு ஜோக்ஸ்; வங்காளிகளைப் பற்றி போங்க் ஜோக்ஸ்; மராட்டியர்களைப் பற்றி காட்டி ஜோக்ஸ்! மலையாளிகளைப் பற்றிய மல்லு ஜோக்ஸ்; தமிழர்களைப் பற்றிய மதறாசி ஜோக்ஸ் என்று பலரகமான ஜோக்குகள் இணையம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் கற்பிக்க யாரும் இன்னும் கிளம்பவில்லை! :-)

  மேலும் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களோ? ஜஸ்பால் பட்டி என்ற நகைச்சுவை நடிகர் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? இவர்களெல்லாம் சர்தார்ஜீ ஜோக்ஸ் புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களே எழுதியவர்கள். இத்தோடு சான்டாசிங் பான்டாசிங் இணையதளத்தை நடத்துபவர்களே சீக்கியர்கள் தான்! சீக்கியர்களுக்குத் தங்களைக் குறித்தே நகைச்சுவை செய்கிற பெருந்தன்மை உண்டென்று வேண்டுமானாலும் கூறலாம்.

  ReplyDelete
 2. நீங்கள் சொல்லிய மதம் சார்ந்த விஷயமும் சேட்டை சொல்லி இருக்கிற பெருந்தன்மை விஷயமும் எனக்கு புதுமை... பதிவு அருமை

  ReplyDelete
 3. புதுமை... பதிவு அருமை

  ReplyDelete
 4. அருமையான தகவல் புதுமையா இருக்கு

  ReplyDelete
 5. புதிய விஷயம்.சேட்டைக்காரன் சொல்வதையும் கவனிக்கவேண்டும்.

  ReplyDelete
 6. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 7. அருமையான பதிவு

  ReplyDelete
 8. இந்து மதத்தை வெறுத்த மக்களால் உருவாக்கப்பட்டதல்ல சீகிய மதம் மறாக முஸ்லீம்களிடமிருந்து பாதுகாக்கவகுருவாக்கபட்டது சீகியமதம்.இதை பொருத்துக்கொள்ள முடியாத சிலரால இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் பிரிவினை ஏற்படுத்த முயலும் சிலரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஜோக்குகள்....பொதுவாகவே இந்துக்கள்மீது மிக உயர்ந்த மரியாதை வைத்துள்ளனர்.....

  ReplyDelete
 9. நல்‌ல அருமை‌யா‌ன யோ‌சனை‌யை‌ வழங்‌கி‌ய ஓசூர் ராஜன் அவர்‌களுக்‌கு வா‌ழ்‌த்‌துக்‌கள்‌.
  அன்‌பு‌டன்‌ பா‌லன்‌

  ReplyDelete
 10. தகவலுக்கும்,கருத்துக்கும் நன்றி,பொதுவாக ஒரு இனத்தையே கேவலப்படுத்தும் செய்திகள் ஜோக்குகளை வரவேற்பது,சரியா?சொல்லுங்கள்.சரித்திரங்கள் சிதைக்கப் பட்டால் சமூகங்கள் மறந்துபோகும்!

  ReplyDelete
 11. நன்றி சூரியஜீவா !

  ReplyDelete
 12. தியாகராஜனுக்கு உண்மைகளை விட,இந்துமதப் பற்று கொஞ்சம் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது!

  ReplyDelete
 13. நன்றி பலன்,தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

  ReplyDelete
 14. மாதவன்,ராக்கெட்டுராஜா,அந்தோணி,பலன், கொவைநேரம் நண்பர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 15. உங்கள்" கவுன்சில் பார் எனி"நல்லபதிவுகளை கொண்டுள்ளது,உங்கள் ஆலோசனைகள் எனக்கு மட்டுமல்ல,எல்லோருக்கும் தேவையானது!நன்றி நண்பரே.

  ReplyDelete
 16. சேட்டை காரரே, தமிழர்களைப் போலவே'?'அவர்களும்,தங்களைப் பற்றிய உயர்வை அறியாமல் இருப்பதால் தான் குஷ்வந்த் சிங்,போன்றவர்கள் தங்கள் இனத்தைப் பற்றி கேவலமாக எழுதுகிறார்கள்! அவ்வாறு அவர்கள் எழுதுவதால் தான் மற்றவர்கள் ஏற்றுகொண்டிருக்கிறார்கள்!

  ReplyDelete
 17. அது தவறா நண்பரே...

  ReplyDelete
 18. For Sikhs, their religion comes first. Their own self respect does not matter much to them. They believe that such things, when overdone, become hindrances to progress in life.
  Just imagine, u r oversensitive to self respect and dignity. Ur social relationship will be a series of troublesome and traumatic affairs and the best of your life is squandered over nitpicking on such matter.


  A Sikh will accept sex jokes even if it relates to his own wife. But he won’t accept any kind of insult on his Gurus and religion. I heard an incident where a Tamilian asked his Sikh colleague abt his residential address and whether he can come for dinner Their comraderie is so close that the Sikh friend gave the address and then, said “You are always welcome. Eat and drink and take my wife for the night! Can u imagine such a joke. Coming as it does from a Sikh, the Tamilian took it in the right spirit and never thought the Sikh was being serious. In our culture, such jokes are not tolerated.


  Abt their lack of aesthetic sensibility, i.e the inability to enjoy the niceties of literature or beauty etc., this is true generally because they think only the weak minded waste time over such non utilitarian matter. Which explains why their literature has no sob stories unlike Bengali lit. They can’t appreciate a dance like Bhartanatyam or Mohiniyaattam as it is slow. Their dance Bangra is fast and joyous. No sentiments and no stories r told in the dance. They want action and aggression (in a positive sense only). Their sex life is equality to both sexes. Sikh women joke on their husbands' inability even right under their noses; and the husbands take it as a light hearted matter. It is impossible in South. In all their TV serials, the women chase men for romance and men are treated like shy girls running away. In short, the fantasy of a tomboy! Watch Bhatti’s comedy TV serials, where he is the hero and his real wife is his wife. In the serial, his wife always complain that Bhatti is so feminine that he has to be pushed to do anything.


  Nevertheless, Sikh women, like all other women, appreciate beauty and literature. Some of them are so gentle and delicate with tender hearts. Mrs Bhatti herself is a fine example of a delicate beauty.

  Only taken together, a Sikh cultural life is hugely practical. It helps them in life to make it full of action. They r in military; they r in auto repairs, they r in sports. Except Amrita Pritam and Brijender Singh Bedi, there s no great name in their literature.

  ReplyDelete
 19. In one sentence, Sikhs celebrate life. They don't weep over it.

  1984 massacre of Sikhs happened. But now you don't see Sikhs remembering it with a vengeance. The massacre was so gruesome: Sikh travellers were pushed from trains and kicked and killed. Sikh shops were gutted; before gutting, plundered. The Sikhs were rendered penniless. Sikh women were dragged and molested. All happened in the capital - that too, police looking and ppl watching. No one helped and sympathised with Sikhs.

  Such a tragedy, if happened to others, will tell a different story. All will remember it for ever.

  Two Tamil brahmins were molested on the banks of the River Kaveri. Their tufts were cut and their punul were cut.

  But read in all blogs, and in all speech, the TN live with vengeance against the culprits remembering and remembering the incidents. They cite it as a great reason for such vengeance.

  But Sikhs who suffered live today with the next generation. The next generation did not carry the vengeance. In Delhi, Sikhs live amicably.

  It shows the calibre of Sikhs, to bury the past, No sentiments, No sorrow. Strong willed and strong minded. Sikhism is the proper religion for them.

  ReplyDelete
 20. hollow friend,my view inthe matter is only blame,and shows cheep inthe medias about the singh's. you are well know who daminate and leads the media still!

  ReplyDelete
 21. In one sentence, Sikhs celebrate life. They don't weep over it. very good comment! thanking you!

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?