தாழ்வு மனபான்மையும் ஈகோவும் இரட்டைக் குழந்தைகளா?


         நம்மில் பெரும்பாலருக்கு ஈகோ அல்லது தாழ்வு மனப்பான்மை இருக்கிறது!  இவை இரண்டுமே நமக்கு வேண்டாத குணம் என்பது என்னுடைய கருத்தாகும். மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்கும் ஒரு சிறந்த குணம் இருக்கும்! அப்படியே குறையும் இருக்கும்! குறையை தவிர்த்து,குணத்தை எற்றுக்கொள்வதே நல்லது.  நமக்கு தெரிந்தாலும் நம்மில் பலரும் நடைமுறைப் படுத்துவதில்லை! காரணம் மேலே சொன்ன, தாழ்வு மனபான்மையும் ஈகோவும் நமக்கிருப்பதால் தான்!


      சிறுவயதில் உறவுகளால்,நண்பர்களால் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை, பொருளில்,அழகில்,.அறிவில் பிறரை விட நாம் கம்மி என்ற உணர்வு உள்ளத்தில் படிந்து,  தாழ்வு மனப்பான்மையாக படிந்துவிடுகிறது! இப்படிப்பட்டவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடுவதில் பிரச்னை இருக்கும்.நெகடிவாக புரிந்து கொண்டு, அவஸ்தை படுவதுடன் பிறரையும் படுத்துவார்கள்! ஈகோ உள்ளவர்கள் தங்களை எப்போதும் முன்னிலைபடுத்தி பேசுவது,உண்டு .மனிதர்களை நேசிப்பதை விடுத்தது, சுயநலனுடன்தன்னையே நேசிப்பதை விரும்புவார்கள். கணவன்-மனைவி,நண்பர்கள்,உறவுகளில் இவரை போலவே இருந்து விட்டால் எளிதில் உறவுகள் சிக்கலாகும்!  சமயங்களில்தாழ்வு மனப்பான்மை  உள்ளவர்களே ஈகோ உள்ளவர்களாவது உண்டு! இவர்கள் எளிதில் எந்த விசயத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. தாங்கள் செய்தது தவறு என்று பிறகு தெரிந்து கொண்டாலும்,அதற்காக வருந்துவதோ,மன்னிப்பு கேட்பதோ இல்லை!

    
                  தாழ்வு மனப்பான்மை, ஈகோ உள்ளவர்களால் மனித நேயத்தை வளர்க்க முடியாது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத இவர்களால் எதையும் ரசிக்கவும்,வாழ்வை மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ளவும் இயலாது! எவ்வளவு பணம்,படிப்பு, அதிகாரம்,அந்தஸ்து,இருந்தாலும் நிம்மதி இன்றி,எதையோ பறிகொடுத்த மாதிரி, கடனே என்று வாழ்வை களிப்பார்கள்!  பிறரது சந்தோசம் கூட தங்களை எரிச்சல்படுத்துவதாக , எண்ணிக் கொள்ளும் இவர்களால் எந்தவேலையும் முழுமையாக செய்யமுடியாது!
      இணையத்தளத்தில் இவர்கள் இருந்து விட்டால்
," நந்தவனத்தில் ஒரு  ஆண்டி,
 நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந்தான் ஒரு தோண்டி!
அதை கூத்தாடி கூத்தாடி
போட்டு உடைதாண்டி! "  கதைதான்.


          இப்போது தமிழ் பதிவர்களுக்கும் திரட்டி ஒன்றுக்கும் நடக்கும் மோதலுக்கும் இந்த பதிப்புக்கும் சம்பந்தம் இல்லை.ஆகவே, நண்பர்களே இதை பொருத்திப் பார்த்து   யாரும் பொருள்கொள்ள வேண்டாம்!.

Comments

 1. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  ReplyDelete
 2. //இப்போது தமிழ் பதிவர்களுக்கும் திரட்டி ஒன்றுக்கும் நடக்கும் மோதலுக்கும் இந்த பதிப்புக்கும் சம்பந்தம் இல்லை.ஆகவே, நண்பர்களே இதை பொருத்திப் பார்த்து யாரும் பொருள்கொள்ள வேண்டாம்!.//

  சும்மா போயிருந்தால் தெரிஞ்சிருக்காது, ஆனா இது என்ன எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்ற மாதிரி... நல்ல உள்குத்து பதிவு...

  ReplyDelete
 3. எனக்குத் தெரிந்து எல்லோருக்குள்ளும் இரண்டுமே இருக்கிறது... சில சமயங்களில் தாழ்வு மனப்பான்மையும் சில சமயங்களில் ஈகோவும் வெளிப்படுகிறது...

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?