ரத யாத்திரை அரசியலா? ரத்த யாத்திரை அரசியலா?

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களும் மக்களைக் கவர தங்களுக்கு என்று தனியாக யுக்தியை வைத்திருகிறார்கள் என தெரிகிறது! அத்வானிக்கு ரத யாத்திரை அந்தமாதிரி யுக்தியோ, என்னவோ ? இப்போது,ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு,ரதயாத்திரை புறப்பட்டு இருக்கிறார்!. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதும் அத்வானி ரதயாத்திரையை நடத்தினார். வி.பி.சிங் மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவதாக சொன்னபோது, இந்துகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த மிகவும் பிற்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்துவதாக சொன்னபோது,   இந்துக்களை ஒற்றுமையாக இருக்க சொல்லும் அத்துவானி, நேரடியாக இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்தால்,நமது வேஷம் கலைந்துவிடும்! அமைதியாக இருந்துவிட்டால்,உயர்சாதியினரின் கோபத்துக்கும்,சாபத்துக்கும் ஆளாக நேரிடும்!! எனக்கருதி,  இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்தது போலவும் ஆகும், உயர்சாதியினரை குளிரவைத்தது போலவும் ஆகும்.  அதே சமயத்தில், வி.பி.சிங்கை மிரட்டி பணியவைக்கவும் உதவும் என்று,ரத யாத்திரையை நடத்தினார்!  ராமர்கோயிலை கடியே தீரவேண்டும் என்று யாத்திரை போவதாக அறிவித்தார்.! இத்தனைக்கும் இவரும் வாஜ்பாயும் ஆட்சியில் இருந்தபோது, ராமர்கோவிலை கட்டுவது குறித்து மூச்சுகூட விடவில்லை! 
                                                                                                                                                                                                                                பதவிபோனாலும் பரவாயில்லை இடஒதுக்கீடை அமல்படுத்தியே தீர்வேன் என்று வி.பி.சிங் அமல்படுத்தினார்,ஆட்சியையும் இழந்தார்!  அன்று ஆசைப்பட்ட பிரதமர் சிம்மாசனம் இன்றுவரை அத்வானிக்கு கிடைக்காமலே உள்ளது.இருந்தும் எப்படியாவது அதை அடைந்தே தீருவது என்ற ஆசையை மட்டும் அவர்விடவில்லை! எனவே தான் பிரதமர் பதவி குறித்து பேச்சுவரும்போது, தன்னை முன்னிறுத்தும் விதமாகவும்,மக்களின் கவனத்தை கவரும் மோடிமஸ்தான் வேலையாகவும் ரதயாத்திரையை தொடருகிறார். இப்போது ரதயாத்திரை செல்லகாரணமாக சொல்லும் பிரச்சனையான    ஊழலையும்   கருப்பு பணத்தையும் கையில் எடுத்த, ஹசாரே நன்றாக பயன்படுத்தி குறுகிய காலத்தில்  பிரபலமாகி வருகிறார்!. ஜனாதிபதி வேட்பாளராக முன்னிருதப்படுகிறார். ஹசாரே மறுத்து வருவதைப் பார்த்தால் அவருக்கும் பிரதமர் பதவிமீது மட்டுமே குறியாக தெரிகிறது! போதாகுறைக்கு போட்டியாக கருதப்படும் நரேந்திர மோடி வேறு உண்ணாவிரதத்தை கையில் எடுத்து,பீதியை கிளப்புகிறார்!  பாவம், அத்வானியால் தாங்க முடியவில்லை! இருப்பு கொள்ளமுடியவில்லை!! ரதயாத்திரையைதொடங்கிஇருக்கிறார்.


                                                                                                 ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்ற போதும்,அத்வானி ரதயாத்திரை போனபோதும் நடந்த கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டதும்  அவர்களின் சொத்துகளும் வாழ்வும் பதிக்கப் பட்டது நடந்தது. ராமர் கோவில் கட்டவில்லை! மத நல்லிணக்கம் மடிந்து,மதவெறி தூவப் பட்டது தான் நடந்தது. !சகோதர்களாக அதுவரை வாழ்ந்த, இந்து-முஸ்லிம் குடும்பங்கள்,எதிரிகளாக ஆக்கப் பட்டதும்,பார்க்கப் பட்டதும் தான் நடந்தது!  இன்றுவரை ஆறாத சோகமாக,இந்திய வரலாற்றில் படிந்த ரத்தச் சரித்திரமாக அத்வானியின் யாத்திரை நிகழ்ச்சி உள்ளது,  அதே அத்வானி இப்போதும் ரதயாத்திரை புறப்பட்டு வருகிறார். மோடிவேறு, துவாரகையில் உண்ணாவிரதம் இருக்க போகிறார்!    என்ன நடக்குமோ என்று அச்சமாக இருக்கிறது!

Comments

  1. மனிதன் மதம் பிடித்து திரிகிறான் வேறு என்ன சொல்ல?

    ReplyDelete
  2. கருத்து வழங்கியதற்கு நன்றி சூர்யா ஜீவா!

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?