உள்ளாட்சி தேர்தலில் அதிரடி குழப்பங்கள்!

மற்றொரு தேர்தல் திருவிழாவாக,உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலில் எல்லா கட்சிகளும் வேட்பாளரை இறக்கி உள்ளன. தெருவுக்கு தெரு,வீதிக்கு வீதி பலவண்ண கட்சிக் கொடிகளும்,கரை வேட்டிகளும் பவனி வருகின்றன. உற்சாக பானமும்,பணமும் தண்ணீராக செலவு செய்து,உள்ளாட்சியில் நல்ல ஆட்சியை ஏற்படுத்தியே தீருவது என வரிந்துகட்டி செயல்பட்டு வருகின்றன எல்லா கட்சிகளும்!  இவர்களுக்கு சளைத்தவர்களா, நாங்கள்? என்பது போல கட்சியில் சீட் கிடைக்காத பேர்வழிகளும் சுயேட்சையாக போட்டி இட்டு அமர்களம் செய்து வருகிறார்கள். ஓட்டுமொத்த அமளியில் யாருக்கு ஒட்டு போடுவது என்று மக்களும்,இப்படியாகி விட்டதே என ஜனநாயகமும் தத்தளித்து,தடுமாறி வருகிறது!
                                                                                                                                                                                             உள்ளாட்சி தேர்தலில், ஒரு கிராம பஞ்சாயத்துக்கு       தலைவர்,உறுப்பினர்தவிர,ஊராட்சிஉறுப்பினர்,பேரூராட்சி உறுப்பினர்,பேரூராட்சி தலைவர், நகராட்சி உறுப்பினர்,தலைவர்,மாநகராட்சி உறுப்பினர்,தலைவர் போன்ற அனைத்து பதவிகளுக்கும் கட்சி வேட்பாளர்கள் போட்டி போட,தேர்தல் ஆணையம் அனுமதித்து உள்ளது சரியா? என்று கேட்க தோன்றுகிறது. உள்ளாட்சி நிர்வாகம், என்பது அனைத்து மக்களின் நலனையும்,முனேற்றத்தையும்,அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள,உருவாகப் பட்ட அமைப்பாகும்.இந்த அமைப்பின் முக்கிய நோக்கத்தையே சிதைத்துவிடும் ஆபத்து  கட்சிகளை உள்ளாட்சி தேர்தலில் அனுமதிப்பதால்  ஏற்படுகிறது.

                                                                                                             ஒரு வார்டிலோ,ஒரு பகுதியிலோ,ஒரு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டு,வெற்றி பெறுபவர் எல்லோருடைய தேவைகளையும் நியாயமாக நிறைவேற்றுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தனது கட்சிக்கும்,தனக்கு ஒட்டு போட்டவர்களுக்கும் ஆதரவாக தானே செயல்படுவார்!  இதனால் மற்ற கட்சிக்கு ஒட்டு போட்டவர்களும் உள்ளாட்சி நிர்வாகமும் பதிக்கப்படும் நிலை ஏற்படுவதற்கு  ஆணையமே வழிவிட்டது போல ஆகிவிடாதா? நகராட்சியில் ஒரு குறிப்பிட்ட வார்டில் ஒரு கட்சி வேட்பாளரும் நகராட்சி  தலைவராக மற்றொரு கட்சி வேட்பாளரும் வெற்றி பெறுகிறார்கள் என்றால், மாற்று கட்சிக்கு ஒட்டு போட்ட வார்டில் நகராட்சியால் செயல்படுத்த வேண்டிய பணிகளை செய்வார்களா? செய்யவில்லை என்றால், அந்தவார்டில் உள்ள அப்பாவி மக்களும் பாதிக்கப் படுவர் ! இது எப்படி முழுமையான உள்ளாட்சி நிர்வாகமாக இருக்க முடியும்?


                                    இந்தியாவில் ஆயிரத்துக்கு மேலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.ஒருபேரூராட்சி வார்டில் உள்ள ஓட்டுகளே ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள நிலையில்! இந்த கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக உள்ளாட்சி தேர்தலில்  போட்டிபோட்டால் என்னாகும்?  ஐயாயிரம் ஓட்டுகளில் ஆறு ஒட்டு பெற்ற கட்சியும்,வேட்பாளரும் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டியிருக்கும்!இப்போது கட்சியில் சீட்டு எப்படி கொடுகிறார்கள் என்று பார்த்தால், ஒருபகுதில் உள்ள கட்சியினரில்  அதிகமாக மேலே உள்ள தலைவர்களுக்கு யார் பணம்கொடுக்கிறார்களோ,அவர்களுக்கும்,அந்த பகுதியில் கட்டை பஞ்சாயத்து செய்கிறார்களோ அவர்களுக்கும்தான் சீட்டு கொடுக்கப்படுகிறது..இப்படிப்பட்டவர்கள்,வெற்றிபெற்றாலும் மககளுக்கு  என்ன நன்மையை செய்வார்கள்?


                             முன்பெல்லாம் பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் மக்களது நலத்தில் அக்கரையும்,மனித நேயமும்,கொண்டிருந்தார்கள். தங்களை நாட்டுக்காக அர்பணித்துக் கொண்டு,வாழ்ந்தார்கள் அப்படிப்பட்ட தலைவர்களின் படங்களை நோட்டீஸ்,போஸ்டர்,பிளக்ஸ் எனப் போட்டு,இப்போது தலைவர்களையும் மக்களையும் ஏமாற்றுகிறார்கள்.இது தெரிந்தும்கூடகட்சிகளை உள்ளாட்சி தேர்தலில்  பங்கு கொள்ளசெய்வது ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல,நாட்டுக்கும் மக்களுக்கும்கூட கேடானதாகும்!,உள்ளாட்சி நிர்வாகமாவது நல்லபடி இயங்கவேண்டும் என்றால்,கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு,நல்லமனம் கொண்ட சமூக சிந்தனையாளர்கள்,மனித நேயர்கள்,கல்வியாளர்கள் சுயேட்சையாக பங்குகொண்டு வெற்றிபெறும் வகையில் தேர்தலை நடத்த எல்லோரும் முன்வரவேண்டும்!

Comments

  1. அண்ணா ஹஜாறேவின் படத்தை போட்டு ஊழலற்ற ஆட்சி அமைக்க போடுங்கள் ஓட்டு என்று ம.தி.மு.க பிரச்சாரம் செய்வது சரியான நகைச்சுவை

    ReplyDelete
  2. அரசியல் என்பது ஒரு விதமான வியாபாரமும் உக்தியும் ஆகிவிட்டதால் வந்த வினைதான் எல்லாம்.நன்றி,தோழரே!

    ReplyDelete
  3. சரியான அலசல்.

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?