சூது,விலைமகள் ,குடிப்பழக்கம்.

                                                                                                            மனிதர்கள் எல்லோருக்கும் உள்ள குணம, நாம் நன்றாக வாழவேண்டும்,நல்லபடியாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது.ஆனால்,எல்லோராலும் அப்படிவாழ முடிவதில்லை. சந்தர்பங்களும் எதிராக அமைந்துவிடுவதால்,எதோ பிறந்து விட்டோம்,வாழ வேண்டி இருக்கிறதே என்று விரக்தி அடைந்து விடுகிறார்கள்! சிலர் போராடி தங்கள் நோக்கத்தை அடைவதும் உண்டு.அவர்களை, சாதனையாளர்களாக உலகம் பார்கிறது. சாதனைகளிலும் பலவிதங்கள் உண்டு! மனித சமூகத்துக்கும்,இயற்கைக்கும் பாதிப்பில்லாத,நன்மைகளை செய்வது...நல்ல சாதனையாகும்! தனக்கு மட்டும் பயன்படுவது சிறப்பானதாக சொல்லமுடியாது.     

                                                                                                                      சிறுவயதில் பள்ளிக்கு போவதற்கு முடியாத நிலை நிகழ்ந்தபோது,நான் உறவுகளை,உலகத்தை வெறுத்து,மனம் போனபடி நடந்து கொல்லிமலை பக்கம் போய், சில நாட்கள் தங்கும் நிலை ஏற்பட்டது.மூக்கு சாமியார் என்று ஒருவர் எனக்கு புகலிடம் தந்தார்.கோபித்துக்கொண்டு,வீட்டை துறந்து வந்ததை தெரிந்து கொண்ட அவர், எனது மனதை மாற்றும் வகையிலும் ஆறுதல் படுத்தும் எண்ணத்திலும், எதையாவது,பேசுவார்.கதைகளை கூறுவார்.எனெக்கு தெரியாத கவிதைகளை கூறி பொருள் சொல்லுமாறு கேட்பர். அவர் சொன்ன கவிதை ஒன்றுக்கு அப்போது என்னால் விளக்கம் சொல்லத்தெரியவில்லை! அவர் விளக்கம் சொல்லியும் புரியவில்லை.          இப்போது புரிகிறது.அதுமட்டும் அல்ல எப்படி மனிதன் வாழ வேண்டும்.எப்படி வாழக் கூடாது என்பதும் புரிகிறது!
                                                                                          வாழ்கையில் நல்லபடியாக,பிறருக்கு உதவி வாழவேண்டும் என்று சொன்ன அந்த சாமியார் இப்போது இல்லை. என்றாலும் அவர் சொன்ன கவிதைமட்டும் இப்போதும் இதயத்தில் இருக்கிறது.என்னை வழிநடத்துகிறது!                               அழகும்,இளமையும் உள்ள பெண் ஒருத்தி சூழ்நிலையால் விபசாரியகிறாள். ஆவலுடன் உறவுகொள்ள பணம் படைத்தவர்களும் செல்வந்தர்களும் போட்டிபோட்டு, அவளுக்கு தேவையான பொன்னையும் பொருளையும் கொடுத்து,அவள்மீது மோகம் கொண்டு  திரிகிறார்கள்.அந்த பெண்ணுக்கு ஏன் இப்படி உள்ளார்கள், இதெற்கெல்லாம்,வேறு காரணம் இருக்குமோ? என்று சந்தேகம் தோன்றுகிறது! அவளைபற்றி தெரிந்து கொண்டும் அம்மாவைப் போல கவனித்து கொள்ளும் தோழியிடம் கேட்கிறாள்.


                                              தோழியும் அவளது சந்தேகத்தை புரிந்து கொண்டு,  தெளிவக்குகிறாள். இந்த உலகத்தில் நல்ல வழியில் தன்னிடம் உள்ளசெல்வத்தை நல்ல முறையில் செலவு செய்யாமல் இருக்கும் தீய எண்ணம் கொண்டவர்களிடம் உள்ள செல்வம் விரைய மாகவேண்டும் என்று நம்மை படைத்த கடவுள் (பிரம்மா)நம்மை போன்ற விலைமகளையும்,சூதாட்டத்தையும் ,குடியையும் படைத்துள்ளார்.என்று கூறுகிறார்கள் .              --கவிதை இதுதான், 


"அன்னையே அனைய தொழி,
என்னை   அறிந்தே வளர்க்கும் மாதே!
உன்னையோர்  உண்மை கேட்பேன்,
உரை தெளிந்து உறைதல் வேண்டும்.                      
என்னையே புணர வேண்டி,
எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும் கொடுத்து, 
பாதமதில் வீழ்வதேனோ? "                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             
 பொம்மென பணிந்து விம்மி ,                                                                                                        போர்மகன் மயங்கி விழும்                                                                                                           செம்மை சேர் முலையினாலே,                                                                                         கூறுவேன் ஒன்று கேண்மோ!                                                                                                இம்மையில் செம்மையாய்                                                                                                      அறம் செய்யாதார்,                                                                                                               திரவியம் சிதற வேண்டி,                                                                                                             நம்மையும் கள்ளும் சூதும்                                                                                            நான்முகன் படைத்தவரே! "


 - ஒரு விலைமகளின் சந்தேகக் கேள்விக்கு அவளின்தோழி பதில் கூறுவதாக அமைந்துள்ள இந்த கவிதையை யார் எழுதியது என்று இன்றுவரை தெரியாது! ஆயினும்,நல்ல வழியில் பொருளை செலவு செய்யாதவர்களின் செல்வமானது,தீயவர்ககளுக்கும் தீமைகளை செய்யவும் பயன்படும்,அதுவே,ஆண்டவனின் கட்டளை! என்று கூறும் இந்த கவிதை, கொல்லிமலை மூக்கு சாமியார்  சொன்ன கவிதையாகும்!.                                                                மனிதன் எப்படி வாழவேண்டும்,என்பதை சொல்லும் இதுபோன்ற கவிதைகள் நாம் தேடி சேர்க்க வேண்டியசெல்வமாகும்!                                                                                                                                 

Comments

 1. என்ன தான் தவறுகளை அந்த கவிதை சாடினாலும், பிற் செர்க்கையாய் கடவுளை துணைக்கு கூப்பிட்டு அப்படி பட்ட தவறுகளை செய்வது தவறில்லை என்று கடவுள் கூறியதாக கூறுவது வாடி கட்டிய மடமை தனம்

  ReplyDelete
 2. வடி கட்டிய மடமை தனம்

  ReplyDelete
 3. ஜீவா , தங்களது கருத்துக்கு நன்றி! நான் மேற்கோள் காட்டிய பாடலை எழுதியவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருக்கும். நல்ல விஷயத்தை சொல்லும் முனைப்பில் எழுதி உள்ள எனது,செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்!

  ReplyDelete
 4. கவிதை அருமை! செய்தியும் அருமை! செய்தி சொல்லும்போது, சுவைக்காகதான் மற்ற விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!

  ReplyDelete
 5. நன்றி நண்பரே, தொடர்ந்து எனது வலைதளத்தை பார்வை இட்டு,கருத்துக்களை வழங்குமாறு வேண்டுகிறேன்.

  ReplyDelete
 6. seevaga sinthamani, intha seyyul eluthapatta nool.

  ReplyDelete
 7. பாடல் சரிதான்.அதற்காக இவர்கள் படைக்கப்படவேண்டுமா?

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?