Posts

Showing posts from October, 2011

இந்திய நீதிமான்களின் இரட்டைவேசம்!

Image
" சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்' என்று சொல்லப்பட்டாலும்,  இந்திய நீதிமன்றங்கள் அப்படித்தான் செயல்படுகின்றனவா?  எல்லோரும் சட்டத்தின் முன்னால் சமமாக நடதப்படுகின்றனரா? என்ற கேள்வி சிந்திப்பவர்களின் மத்தியில் இருந்துவருகிறது!     நீதிபதிகளின் தனித்த லாபங்கள்,விருப்பு வெறுப்புக்கள், அரசியல் நிர்பந்தங்கள், மதம்- சாதிய பற்றுக்களால் சமத்துவமான அணுகுமுறைத் தீர்ப்புகள் வருவது அருகி வருகிறது.     பலவழக்குகளில் பாரபட்சமான தீர்ப்புகள் கூறப்பட்டு, நீதித் துறையின்மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்து வருவதை பார்க்கமுடிகிறது!


        " பாபர் மசூதி யாருக்கு சொந்தம்? "என்று கூறவேண்டிய நீதிமன்றம்,  "குரங்கு அப்பத்தைப் பங்கிட்ட கதையாக",  ஆளுக்கு கொஞ்சம் சொந்தம் என்ற அலகாபாத் நீதி மன்றத் தீர்ப்பு சமீபத்து உதாரணம் ஆகும்!       ரத  யாத்திரை நடத்தி, நாட்டை ரத்தக் காடக்கிய  அத்வானிக்கு     நீதிமன்றம் வழங்கிய கருணைத் தீர்ப்பும்,       குஜராத் படுகொலை, கலவரத்தில் மோடியின் பங்களிப்பை கேள்விக்கு உள்ளாக்காத நீதிபன்றங்களின் பாராமுகமும்  இந்திய நீதித்துறையின்  பாசிச க…

இந்திய நீதிமான்களின் இரட்டைவேசம்!

" சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்' என்று சொல்லப்பட்டாலும்,  இந்திய நீதிமன்றங்கள் அப்படித்தான் செயல்படுகின்றனவா?  எல்லோரும் சட்டத்தின் முன்னால் சமமாக நடதப்படுகின்றனரா? என்ற கேள்வி சிந்திப்பவர்களின் மத்தியில் இருந்துவருகிறது!     நீதிபதிகளின் தனித்த லாபங்கள்,விருப்பு வெறுப்புக்கள், அரசியல் நிர்பந்தங்கள், மதம்- சாதிய பற்றுக்களால் சமத்துவமான அணுகுமுறைத் தீர்ப்புகள் வருவது அருகி வருகிறது.     பலவழக்குகளில் பாரபட்சமான தீர்ப்புகள் கூறப்பட்டு, நீதித் துறையின்மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்து வருவதை பார்க்கமுடிகிறது!  

        " பாபர் மசூதி யாருக்கு சொந்தம்? "என்று கூறவேண்டிய நீதிமன்றம்,  "குரங்கு அப்பத்தைப் பங்கிட்ட கதையாக",  ஆளுக்கு கொஞ்சம் சொந்தம் என்ற அலகாபாத் நீதி மன்றத் தீர்ப்பு சமீபத்து உதாரணம் ஆகும்!       ரத  யாத்திரை நடத்தி, நாட்டை ரத்தக் காடக்கிய  அத்வானிக்கு     நீதிமன்றம் வழங்கிய கருணைத் தீர்ப்பும்,       குஜராத் படுகொலை, கலவரத்தில் மோடியின் பங்களிப்பை கேள்விக்கு உள்ளாக்காத நீதிபன்றங்களின் பாராமுகமும்  இந்திய நீதித்துறையின்  பாசிச குணத்திரு…

விஜயகாந்த் காங்கிரசில் சேருவாரா?

Image
காங்கிரசில் சேரச் சொல்லி இளங்கோவனும்,  இளைஞர் அணித் தலைவர் யுவராஜும் விஜயகாந்துக்கு அழைப்பு விட்டு உள்ளனர், தங்கபாலு அழைப்பு விடுவது தான் பாக்கி!  விஜயகாந்த், ஆந்திர சிரஞ்சீவியைப் போல தனது  கட்சியுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருப்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டார்கள்!   வலையை வீசிவிட்டு காத்திருக்கிறார்கள்!        மாட்டிக்கொண்டால், லாபம்தான் என்பது இவர்களைப் பொறுத்தவரை சரிதான்!. விஜயகாந்த் காங்கிரசின் அழைப்பை நிராகரிக்கவில்லை, அதுபற்றி இதுவரை அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை. பத்திரிக்கையாளர்கள் கூட அவரிடம் கேட்டகவில்லை! பாவம் தன்னைப் பற்றிய அதீத நம்பிக்கையில், சந்தித்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அவரால் பெற முடியாத சோகத்தில் இருந்து, மீண்டுவரவில்லை என்பது தெரிகிறது!



          அவரது கட்சியில் வெற்றிபெற்ற  பிரதிநிதிகள் கூட ஆளும் கட்சிக்கு தாவும் நிலை ஏற்பட்டு உள்ளது.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை,தொண்டர்களுக்கு{?}  கட்சியில் மரியாதை இல்லை என்ற குரல்கள்வேறு, இப்போது அக்கட்சியில் ஒலிக்கின்றன!  கூட்டணி இல்லை என்றால் விஜயகாந்தின் கட்சியால் வெற்றிப…

தூக்கு தண்டனைக்கெதிரான உண்ணாநிலைப் போராட்டத்தில் எனது பங்கேற்பு.

Image
தூக்கு தண்டனையை சட்டத்தில் இருந்து முற்றிலும் நீக்கக் கோரி,தமிழுணர்வாளர்கள் சென்னையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்." NO DEATH PENALITY ' என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில்  23.10.2011  அன்று 32 -ஆம் நாள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு அந்த வாய்ப்பை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக முன்பு இருந்தவரும்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை தற்போது நடத்தி வருபவரும் ஆன புதுக்கோட்டை கே.எம்.ஷெரிப் என்பவர் வழங்கி இருந்தார்.திராவிட கழகத்தில் இருந்து,ஆனைமுத்து தலைமையில் திராவிட கழகம் இயங்கிய பொது அதில் இருந்து,பிறகு ம.தி.மு.க.,வந்து,பாட்டாளி மக்கள் கட்சிக்கு போனவர்,மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்து,திராவிட கட்சியாக சொல்லப்படும் பா.ம. க.வில்,  தலித்துக்களை,முஸ்லிம்களை பிரித்து சிறுபான்மைப் பிரிவு,தாழ்த்தப் பட்டோருக்கான sc /st  பிரிவுகள்  தொடங்குவதை எதிர்த்து வெளியேறியவர்!.{அரசியல் தீண்டாமையை தொடரும் ஆதிக்கவாதிகளின் சிந்தனைதான் ஜனநாயகத்தில் இதுபோன்ற பிரிவுகள் என்பார்}முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம்களால் ஏற்…

தமிழர் உயிர் மலிவானதா,தன்மானம் இழிவானதா?

தூக்கு தண்டனையை சட்டத்தில் இருந்து முற்றிலும் நீக்கக் கோரி,தமிழுணர்வாளர்கள் சென்னையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்." NO DEATH PENALITY ' என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில்  23.10.2011  அன்று 32 -ஆம் நாள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு அந்த வாய்ப்பை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக முன்பு இருந்தவரும்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை தற்போது நடத்தி வருபவரும் ஆன புதுக்கோட்டை கே.எம்.ஷெரிப் என்பவர் வழங்கி இருந்தார்.திராவிட கழகத்தில் இருந்து,ஆனைமுத்து தலைமையில் திராவிட கழகம் இயங்கிய பொது அதில் இருந்து,பிறகு ம.தி.மு.க.,வந்து,பாட்டாளி மக்கள் கட்சிக்கு போனவர்,மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்து,திராவிட கட்சியாக சொல்லப்படும் பா.ம. க.வில்,  தலித்துக்களை,முஸ்லிம்களை பிரித்து சிறுபான்மைப் பிரிவு,தாழ்த்தப் பட்டோருக்கான sc /st  பிரிவுகள்  தொடங்குவதை எதிர்த்து வெளியேறியவர்!.{அரசியல் தீண்டாமையை தொடரும் ஆதிக்கவாதிகளின் சிந்தனைதான் ஜனநாயகத்தில் இதுபோன்ற பிரிவுகள் என்பார்}முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம்களால் ஏற்றுக…

சர்தார் ஜோக்குகளில் உள்ள வக்கிர வரலாறு!

Image
எவரையும் புண்படுத்தாத,படித்தவுடன் சிரிக்க வைக்கும் ஜோக்குகளை விட,யாரவது ஒருவரை கிண்டலடித்து,எழுதப்படும் ஜோக்குகளே அதிகமாகி வருகிறது!  நமது ரசனையை தாழ்த்திகொள்ளும்  ஜோக்குகளே அதிகமாக வருவது,நல்லதல்ல.அதுவும்,ஒரு சமூகத்தையே கேவலமாக  சித்தரித்து வரும் ஜோக்குகளை படிக்கும்போது, சிரிப்புக்கு பதில் வேதனை ஏற்படுகிறது. சர்தார் ஜோக்குகள் அத்தகைய   ரகமாகும்.சர்தார்கள் என்று நாம் சொல்லுவது சீக்கியர்களைதான்! இவர்களைப்போல கடின உழைப்பாளிகள் யாரு இல்லை.எவரையும் ஏமாற்றி பிழைக்காதவர்கள், தங்களது,உழைப்பையே நம்புபவர்கள்,மூட நம்பிக்கை இல்லாதவர்கள், பிச்சை எடுப்பதை விரும்பாதவர்கள் நியாயமாக தங்களுக்கு கிடைப்பதை மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள் சீக்கியர்களான சர்தார்கள்தான்!

      இந்திய ராணுவத்தில் அதிகமாக உள்ளவர்கள் சீக்கியர்கள்தான்!   ரெஜிமெண்ட் என்று சொல்லும் படைப் பிரிவுகளில் பதினான்கு ரெஜிமெண்ட், சீக்கியர்கள் உடையது. நாட்டை காப்பதில் முக்கிய பங்காற்றி வரும், கடின உழைப்பும்,வீரமும் உள்ள ஒரு இனத்தை முட்டாளாக சித்தரித்து ஜோக்குகள் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி சிரிக்க மு…

தாழ்வு மனபான்மையும் ஈகோவும் இரட்டைக் குழந்தைகளா?

Image
நம்மில் பெரும்பாலருக்கு ஈகோ அல்லது தாழ்வு மனப்பான்மை இருக்கிறது!  இவை இரண்டுமே நமக்கு வேண்டாத குணம் என்பது என்னுடைய கருத்தாகும். மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்கும் ஒரு சிறந்த குணம் இருக்கும்! அப்படியே குறையும் இருக்கும்! குறையை தவிர்த்து,குணத்தை எற்றுக்கொள்வதே நல்லது.  நமக்கு தெரிந்தாலும் நம்மில் பலரும் நடைமுறைப் படுத்துவதில்லை! காரணம் மேலே சொன்ன, தாழ்வு மனபான்மையும் ஈகோவும் நமக்கிருப்பதால் தான்!



      சிறுவயதில் உறவுகளால்,நண்பர்களால் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை, பொருளில்,அழகில்,.அறிவில் பிறரை விட நாம் கம்மி என்ற உணர்வு உள்ளத்தில் படிந்து,  தாழ்வு மனப்பான்மையாக படிந்துவிடுகிறது! இப்படிப்பட்டவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடுவதில் பிரச்னை இருக்கும்.நெகடிவாக புரிந்து கொண்டு, அவஸ்தை படுவதுடன் பிறரையும் படுத்துவார்கள்! ஈகோ உள்ளவர்கள் தங்களை எப்போதும் முன்னிலைபடுத்தி பேசுவது,உண்டு .மனிதர்களை நேசிப்பதை விடுத்தது, சுயநலனுடன்தன்னையே நேசிப்பதை விரும்புவார்கள். கணவன்-மனைவி,நண்பர்கள்,உறவுகளில் இவரை போலவே இருந்து விட்டால் எளிதில் உறவுகள் சிக்கலாகும்!  சமயங்களில்தாழ்வு மனப்பான்மை  உள்ளவர்களே …

ரத யாத்திரை அரசியலா? ரத்த யாத்திரை அரசியலா?

Image
இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களும் மக்களைக் கவர தங்களுக்கு என்று தனியாக யுக்தியை வைத்திருகிறார்கள் என தெரிகிறது! அத்வானிக்கு ரத யாத்திரை அந்தமாதிரி யுக்தியோ, என்னவோ ? இப்போது,ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு,ரதயாத்திரை புறப்பட்டு இருக்கிறார்!. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதும் அத்வானி ரதயாத்திரையை நடத்தினார். வி.பி.சிங் மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவதாக சொன்னபோது, இந்துகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த மிகவும் பிற்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்துவதாக சொன்னபோது,   இந்துக்களை ஒற்றுமையாக இருக்க சொல்லும் அத்துவானி, நேரடியாக இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்தால்,நமது வேஷம் கலைந்துவிடும்! அமைதியாக இருந்துவிட்டால்,உயர்சாதியினரின் கோபத்துக்கும்,சாபத்துக்கும் ஆளாக நேரிடும்!! எனக்கருதி,  இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்தது போலவும் ஆகும், உயர்சாதியினரை குளிரவைத்தது போலவும் ஆகும்.  அதே சமயத்தில், வி.பி.சிங்கை மிரட்டி பணியவைக்கவும் உதவும் என்று,ரத யாத்திரையை நடத்தினார்!  ராமர்கோயிலை கடியே தீரவேண்டும் என்று யாத்திரை போவதாக அறிவித்தார்.! இத்தனைக்கும் இவ…

உள்ளாட்சி தேர்தலில் அதிரடி குழப்பங்கள்!

Image
மற்றொரு தேர்தல் திருவிழாவாக,உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலில் எல்லா கட்சிகளும் வேட்பாளரை இறக்கி உள்ளன. தெருவுக்கு தெரு,வீதிக்கு வீதி பலவண்ண கட்சிக் கொடிகளும்,கரை வேட்டிகளும் பவனி வருகின்றன. உற்சாக பானமும்,பணமும் தண்ணீராக செலவு செய்து,உள்ளாட்சியில் நல்ல ஆட்சியை ஏற்படுத்தியே தீருவது என வரிந்துகட்டி செயல்பட்டு வருகின்றன எல்லா கட்சிகளும்!  இவர்களுக்கு சளைத்தவர்களா, நாங்கள்? என்பது போல கட்சியில் சீட் கிடைக்காத பேர்வழிகளும் சுயேட்சையாக போட்டி இட்டு அமர்களம் செய்து வருகிறார்கள். ஓட்டுமொத்த அமளியில் யாருக்கு ஒட்டு போடுவது என்று மக்களும்,இப்படியாகி விட்டதே என ஜனநாயகமும் தத்தளித்து,தடுமாறி வருகிறது!
                   உள்ளாட்சி தேர்தலில், ஒரு கிராம பஞ்சாயத்துக்கு       தலைவர்,உறுப்பினர்தவிர,ஊராட்சிஉறுப்பினர்,பேரூராட்சி உறுப்பினர்,பேரூராட்சி தலைவர், நகராட்சி உறுப்பினர்,தலைவர்,மாநகராட்சி உறுப்பினர்,தலைவர் போன்ற அனைத்து பதவிகளுக்கும் கட்சி வேட்பாளர்கள் போட்டி போட,தேர்தல் ஆணையம் அனுமதித்து உள்ளது சரியா? என்று கேட்க தோன்றுகிறது. உள்ளாட்சி நிர்வாகம், என்பது அனைத்து மக்களின் …

சூது,விலைமகள் ,குடிப்பழக்கம்.

Image
மனிதர்கள் எல்லோருக்கும் உள்ள குணம, நாம் நன்றாக வாழவேண்டும்,நல்லபடியாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது.ஆனால்,எல்லோராலும் அப்படிவாழ முடிவதில்லை. சந்தர்பங்களும் எதிராக அமைந்துவிடுவதால்,எதோ பிறந்து விட்டோம்,வாழ வேண்டி இருக்கிறதே என்று விரக்தி அடைந்து விடுகிறார்கள்! சிலர் போராடி தங்கள் நோக்கத்தை அடைவதும் உண்டு.அவர்களை, சாதனையாளர்களாக உலகம் பார்கிறது. சாதனைகளிலும் பலவிதங்கள் உண்டு! மனித சமூகத்துக்கும்,இயற்கைக்கும் பாதிப்பில்லாத,நன்மைகளை செய்வது...நல்ல சாதனையாகும்! தனக்கு மட்டும் பயன்படுவது சிறப்பானதாக சொல்லமுடியாது.     
                                                                                                                      சிறுவயதில் பள்ளிக்கு போவதற்கு முடியாத நிலை நிகழ்ந்தபோது,நான் உறவுகளை,உலகத்தை வெறுத்து,மனம் போனபடி நடந்து கொல்லிமலை பக்கம் போய், சில நாட்கள் தங்கும் நிலை ஏற்பட்டது.மூக்கு சாமியார் என்று ஒருவர் எனக்கு புகலிடம் தந்தார்.கோபித்துக்கொண்டு,வீட்ட…