இந்திய அரசியலும்,குண்டுவெடிப்பும்..!

 டெல்லி உயர்நிதிமன்றதின் நுழைவு வாசலில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. 10 -நபர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் 50 -  பேர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.ஆளும் கட்சியும்,எதிர் கட்சிகளும் வழக்கம் போல கண்டித்து  அறிக்கை விட்டு ஆதங்கபட்டுள்ளன. தீவிரவாதிகள் இந்தியாவின் உறுதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் குண்டுவெடிப்பை நடத்தி உள்ளதாக பிரதமர்  கருத்து தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை  தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும்  என  பாராளுமன்றத்தில்  அறிக்கை வாசித்துள்ளார்!  ஊடகங்கள் தங்கள் பங்களிப்பை நிறைவேற்றும் கடமையாக கருதி, நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
 இந்தியாவில் முதல் முதல் குண்டுவெடிப்பு, நடந்தபோது  என்ன நடைமுறையை கடைபிடிதோமோ, அவைகள் மாறாமல் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்த முறைகளில் குண்டுவெடிப்புக்கள் நடந்து வந்ததோ,அப்படியே குண்டுவெடிப்புக்களும் நடந்து வருகின்றன.  புலனாய்வு அமைப்புக்களும் சுருதி மாறாமல் விசாரணையை நடத்தி வருகின்றன! அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். நாட்டில் பதட்டமும்,பரிதவிப்பும் தொடர்ந்து நீடித்து வருகிறது.                                                                               இவை யாவும் அடுத்ததொரு பிரச்சனை மக்கள் மனதில் இடம்பெரும்வரை தான், அப்புறம் இந்த குண்டுவெடிப்பும் ஏனைய குண்டுவெடிப்பை போல இயல்பாகி விடும் அடுத்த குண்டுவெடிக்கும் வரை!  


                                                                                                                                                                                               இப்படித்தான் நடந்து வருகிறது நமது நாட்டில் .  குண்டுவைப்பவர்கள் யார்? குண்ட்வைப்பதற்க்கு காரணம் என்ன,என்ன?  அந்த காரணங்கள்,தீர்க்க கூடியவைகளா?   தீர்க்ககூடியவைகள் என்றால், தீர்க்கப்பட்டிருகிறதா?  தீர்வுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா? எடுக்கப்பட்டு இருந்தால், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?  அத்தகைய நடவடிக்கைகளை மக்களுக்கு சொல்லி இருக்கிறோமா?ஊடகங்கள் இது போன்ற நிகழ்வுகளில் இடம்பெறுகிறதா? என்று பாராளுமன்றதிலும்,சட்டமன்றங்களிலும் இதுவரை யாரும் விவாதிக்கவில்லை என்று நினைகிறேன். எதுஎதர்க்கோ, கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருகிறார்கள் இதுபோன்ற தேச நலனுக்கு தேவையான முக்கிய பிரச்சனைகளில்  அக்கறைகொள்ள யாரும் முன்வருவதில்லை!  


                                                                                                                                                                                                                                          போகட்டும் இதுவரை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உடைய  அனைத்துகுற்றவாளிகளையும் நாம் என்ன செய்திருக்கிறோம்?  விசாரணைகளை  துரிதமாக நடத்தி வருகிறோமா?  என்று பார்த்தால்  சோகமாகும்!    ஓட்டுமொத்த குண்டுவெடிப்புக்களையும்  ஒருங்கிணைத்து, ஒரு தனியான,  நியாயமான, பொதுஅமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்தி அதன்கீழ்  விசாரணை நடத்தினால்  குண்டுவெடிப்புக்கான  காரணங்களும் தெரியும்! குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் குண்டுவெடிப்புகள் நடப்பதையும் தடுக்கமுடியும்!                                                                                     இந்தியாவில் நடத்தப்படும் குண்டுவெடிப்பில் அரசியலும் இருக்கிறது,என பேசப்படுகிறது.   அரசியல் காரணங்களுக்காக  காங்கிரஸ் கட்சியும், இந்துமதவாத கட்சிகளும் குண்டுவெடிப்பை அனுமதித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், தேச நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட  ஆட்சியாளர்கள் முன்வரவேண்டியது  காலத்தின்  கட்டாயமாகும்! 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?