Posts

Showing posts from September, 2011

நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா?

Image
சட்டப்பேரவையில் நடந்த பொதுத் துறை ,ஓய்வுதியம்,பணியாளர்கள் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை,திட்டம், ஆகியவற்றின் மானியக் கோரிக்கை விவாதத்தில்,முதல்வர் சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்களுக்கு தொகுதிப்படி,ஓய்வுதியம் போன்றவற்றை அதிகரித்து உள்ளார். வாயெல்லாம் பல்லாக,உறுப்பினர்கள் வாழ்த்தி வரவேற்று மகிழ்து உள்ளனர் . பாவம் ஏழைகளுக்கு இதுவாவது கிடைத்து இருக்கிறதே என நாமும் சந்தோஷப்பட வேண்டியதுதான்! ஏன் எனில்  நம்ம சட்டமன்ற உருப்பினர்களைப்போல்  வேறு யாரும் கஷ்டபடுபவர்கள் வேறு யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்பதால்!   அவர்கள் படும்  கஷ்டங்களை கேட்டால் நமக்கு மட்டுமல்ல, எல்லோருமே கண்ணீர் விடவேண்டியது இருக்கும் 
.                                                                                                  


கட்சியில மெம்பராகி,தலைவர்கள் சொல்லும் கட்சிப்பணியை மட்டும் பார்க்காமல்,தலைவர்களோட தனிப்பட்ட தேவைகளும் கவனிக்கணும்.அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் கலந்துக்கணும்.பொதுக்கூட்டம் மாநாடுன்னு எங்கே நடந்தாலும் ஆளுங்களை கூட்டிட்டு போகணும். அவங்களுக்கு சாப்பாடு முதற்கொண்டு, சம்பளம்,கொட்டர்,பிரியாண…

தமிழக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.வெற்றிபெறுமா?

Image
உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டி  இட விரும்புவோர்களிடம்,மனுக்களை பெற்று வருகின்றன,இன்று எல்லகட்சிகளும்.கடந்த முறை  உற்சாகத்துடன் களம் கண்ட தி.மு.க.வும் மனுக்களை பெருகிறது. ஆனால், முன்பு இருந்த உற்சாகம் தி.மு.க தொண்டர்களிடம் இல்லை என்கிறார்கள். காரணம் ஆட்சி இல்லை. பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் யார்யார் உள்ளே இருப்பார்கள்,யாரெல்லாம் வெளியே இருப்பார்கள் என்று சொல்லமுடியாத அவலம் தி.மு.கவுக்கும்,அதன் தொண்டர்களுக்கும் உள்ளது. செப்டம்பர் 15 - தேதியை முப்பெரும் விழாவாக தவறாமல் கொண்டாடிவந்த கட்சியான தி.மு.கவுக்கு இந்த ஆண்டு அதனைக்கூட உரியகாலத்தில் கொண்டாட முடியாத நிலை ஏற்ப்பட்டு உள்ளது,அக்கட்சியின் துரதிஸ்டம் எனலாம். 
                                                            சட்டமன்ற  தேர்தலில் தோல்வியை சந்தித்த திமுக எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது வெற்றிபெறுமா? அல்லது முந்தைய தேர்தலைப்போலவே தொல்வியடைய்மா? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக பேசப்படுகிறது!  ஆள்பலம்,அதிகாரபலம்,பணபலத்துடன் கடந்த தேர்தல்களை சந்தித்தது போல இம்முறை திம…

கவிதைகள் சமூக அவலத்தை போக்க உதவுமா?

Image
எனக்கும் கவிதைகளுக்குமான  பரிச்சயம்   பள்ளி நாட்களுடன்  ஆனது. கல்லூரி காலத்தில், எல்லோருமே கவிதை எழுதுவதாக தோன்றியதால் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, கவிதைகளை படிக்கும் ஆசை வந்தது. எளிமையான, மரபுக் கவிதைகளும்,பொருள்செறிந்த புதுக்கவிதைகளும் எனக்கு பிடித்தவைகள் என்பதைவிட கிறுக்கு பிடிக்கவைத்தவை என்பதுதான் உண்மையாகும்!  
                                                                                                                                               வாழ்க்கை பாதையில் பொருளையும் வேலையும்,சமூக அங்கீகாரமும் வேண்டி,ஓடும்போது கவிதைகளும் என்னைப்போலவே தொலைந்து போய்விட்டது!   கண்ணதாசன் கூறுவது போல்," பஞ்சத்தில்  ஏழை பார்க்கும் பழங்கணக்கு ஆனது" எனது கவிதைகளும் தாகமும்!   இன்றும் கவிதைகள் என்னை கவனிக்கும்போது, அவைகள் என்னை அலைகடலாக்கி, ஆர்பரிப்பது போன்று தோன்றுவதுண்டு!  இப்போது கவிதைகளைப்போல அவைகள் குறித்த கவலைகளும் வருகிறது. எது கவிதை? தனிமனிதனின் உணர்சிக்குவியல்கள? அல்லது சமூக ஆதங்கங்களா? தனிமனித உணர்சிகள்தான் என்றால், கவிதைகளுக்கு என்ன சிறப்பும் பெருமையும் வ…

இந்திய அரசியலும்,குண்டுவெடிப்பும்..!

Image
டெல்லி உயர்நிதிமன்றதின் நுழைவு வாசலில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. 10 -நபர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் 50 -  பேர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.ஆளும் கட்சியும்,எதிர் கட்சிகளும் வழக்கம் போல கண்டித்து  அறிக்கை விட்டு ஆதங்கபட்டுள்ளன. தீவிரவாதிகள் இந்தியாவின் உறுதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் குண்டுவெடிப்பை நடத்தி உள்ளதாக பிரதமர்  கருத்து தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை  தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும்  என  பாராளுமன்றத்தில்  அறிக்கை வாசித்துள்ளார்!  ஊடகங்கள் தங்கள் பங்களிப்பை நிறைவேற்றும் கடமையாக கருதி, நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
 இந்தியாவில் முதல் முதல் குண்டுவெடிப்பு, நடந்தபோது  என்ன நடைமுறையை கடைபிடிதோமோ, அவைகள் மாறாமல் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்த முறைகளில் குண்டுவெடிப்புக்கள் நடந்து வந்ததோ,அப்படியே குண்டுவெடிப்புக்களும் நடந்து வருகின்றன.  புலனாய்வு அமைப்புக்களும் சுருதி மாறாமல் விசாரணையை நடத்தி வருகின்றன! அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். நாட்டில் பதட்டமும்,பரிதவிப்பும் தொடர்ந்து நீடித்து வருகிறது.                        …

தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

Image
பெரியாருக்கும்,அண்ணாவுக்கும் இடையில் தோன்றிய முரண்பாடுகளால் தி.மு.க தோன்றியது!  சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டபோது அண்ணாவுடன்  கருணாநிதி இருக்கவில்லை. பிறகு வந்து சேர்ந்து கொண்டார். தனது பேச்சு,எழுத்து செயல்,ஆளுமை அனைத்தையும் பயன்படுத்தி அண்ணாவுக்குப்பின் தன்னை தலைவராக நிலைநிறுத்திக் கொண்ட கருணாநிதியை பற்றி கூறும்போது,தி.மு.க.வின் வரலாற்றை முதல் பாதியை நான  எழுதுகிறேன் , பிற்பாதி வரலாற்றை எனது தம்பி கருணாநிதி எழுதுவார, என்றார்.  அத்தனை, நம்பிக்கையும்,ஆற்றலும் படைத்தது இருந்த கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வின் தற்போதைய நிலை என்ன என்பதை இன்று நாம் கண்முன்னே காணுகிறோம்!


                                                 கடந்த 10 -வருடங்களுக்கு முன்பு இருந்த தி.மு.க விற்கும்,இப்போது உள்ள தி.மு..கவிற்கும் மலைஅளவு வித்தியாசம் இருப்பதை அறிவோம்!   ஆரம்பிக்கப்பட்டபோது,தி.மு.கவிற்கு தமிழர் நலம்,திராவிட இனஉணர்வு, மொழயுணர்வு,சுயமரியாதை,சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு,போன்ற கொள்ள்கைகளும்,இலட்சியங்களும் இருந்தது,பேசப்பட்டது!   மாற்றத்தை விரும்பிய இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் த…