Posts

Showing posts from August, 2011

அன்னா ஹசாரே போராட்டம் உள்நோக்கம் உடையதா?

Image
அன்னா ஹசாரே போராட்டம் குறித்து,  இந்திய அளவில் மட்டும் இன்றி, உலகம்     முழுவதும் பேசப்படும் நிகழ்ச்சியாக மாறி உள்ளது. இளைய தலை முறையினர், காந்தியின் அவதாரமாக பார்க்கத் தொடங்கி வருகின்றனர் . அவரது போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு,முழி பிதுங்கி வருகிறது .ப.ஜ.க  போன்ற எதிர் கட்சிகள் , உழலுக்கும், கருப்பு பணத்திற்கும எதிரான போராட்டத்தை அரசியலாக்கி, ஆதாயம் பார்க்க துடிக்கிறார்கள் .  இவ்வாறு ஆதாயம் அடையத்துடிக்கும், எதிர் கட்சியான ப.ஜ க , கட்சிதான், முன்பு ஆட்சியில் இருந்தது! அப்போது அந்த கட்சி ஊழலுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்பதோடு,  கார்கில் போர் ஊழல் , சவப்பெட்டி ஊழல்போன்ற   குற்றசாட்டுக்களுக்கு ஆளானது .                                                                                                         

                                                                     தகவல் உரிமைச் சட்டம்,வேலை  உறுதி அளிப்பு சட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அருண் ராயின்  தலைமையல்  இயங்க்கும் பொது சமூகப் பிரதிநிதிகள் …

ஊழலை நீக்க உண்ணாவிரதம் உதவாதா?

Image
மனிதர்கள்  மிக  பொல்லாதவர்கள் காரணம், அவர்களது மனம்தான். மனதிலும் இரண்டு மனம்  இருப்பதை நாம் அறிவோம் !புற மனம் , அகமனம் !               கவியரசு கண்ணதாசன் அவர்கள் , "சொல்ல நினைபதெல்லாம் சொல்லாமல் போவதற்கு உள்மனதில் உள்ள ஊமைப்புண் காரணமாம் " என்பார்.நான்  சொல்லும்  மனம் என்பது அதுவல்ல.சொல்லநினைப்பதை,எதிர்மறையாக சொல்ல்வது.அல்லது எதிர்மறையாக நாம் புரிந்துகொள்ளச் செய்வது.  நம்ம பிரதமரின் சுதந்திர தின உரையை பார்த்திர்களா? அன்ன ஹசாரே  உண்ணாவிரதத்தால் நிகழ்ந்துவரும் குழப்பங்கலை   பொறுக்காமல் , உண்ணாவிரதத்தால் , ஊழல் ஒழியாது  என்று சுதந்திரமாக  தனது கருத்தை சொல்கிறார்     
                        ஒன்று நினைவுக்கு வருகிறது, உண்ணாவிரதம்  என்னும் மிகப் பெரிய ஆயுதத்தை  கையில் எடுத்து, காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் பெறக் காரணமாக இருந்தார்.  சுதந்திர இந்தியாவில் பெருகிவிட்ட ஊழலை   நீக்க உண்ணாவிரதம் உதவாது என்று பிரதமர் கூறுகிறார்.இது எதிர்மறையாக தோன்றவில்லையா? விசித்திரம் என்னவென்றால் ஊழலை நாங்கள் ஒழிக்க மாட்டோம் ,ஆதரிப்போம்.அதனை நீங்கள் சகித்துக்கொள்ள வேண்டும்.என்று தலைமைப…

அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா?

Image
இந்தி மொழி சம்பந்தமான தீர்மானத்தின்போது அண்ணாவுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்த்து.அப்போது அண்ணா மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.அவையில் இருந்த ஷேக் கோவிந்த்தாஸ்,மெட்ராஸ் ஸ்டேட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை,உலகம் முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,அதை அகற்றிவிட்டு பிராந்திய உணர்வோடு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோருவது பிரிவினைவாதம் என்று குறிப்பிட்டார்.
                                இதற்கு பதிலளித்த அண்ணா பார்லிமெண்ட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை,அதுவும் உலகம் முழுதும் உள்ளம் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,அதை மாற்றி உங்கள் தாய்மொழியில் (இந்தி)பார்லிமெண்டை லோக்சபா என்றும்,கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்றும் அழைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறீர்களோ,அதைவிட மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைத்தால் நான் பெரிதும் மகிழ்வேன் என்றார்.
                                 தொடர்ந்து பேசிய வட இந்திய உறுப்பினர்கள் இந்தியாவில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற மொழி இந்தி மொழியாகும்.அதனால் லோக…