மதுக்கடைகளில் மகாத்மா

  தனது வாழ்நாளில் மகாத்மா காந்தி தீவிரமாக வலியுறுத்திய இரண்டு விஷயங்கள் மது விலக்கும்,தீண்டாமையும்தான்.இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது.ஆயினும் இன்றும் நாட்டில் இவ்விரண்டும் ஒழிக்கப்பட வில்லை.மகாத்மாவின் நோக்கம் நிறைவேறவில்லை.இத்தனைக்கும் காந்தி அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிதான் நாட்டை பெரும்பாலும் ஆட்சி செய்தது,செய்துகொண்டிருக்கிறது.ஆனால் காந்தியின் கனவை நிறைவேற்றத்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு மனமில்லை.காரணம் என்ன?


                                                                        சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நமது தலைவர்களுக்கு தேச நலனும் மக்கள் முன்னேற்றமும் முதன்மையானவையாக இருந்தது.ஆனால் இன்று உள்ள நமது தலைவர்களுக்கு பதவி சுகமும் அதனால் கிடைக்கும் சுய ஆதாயமும் தான் முக்கியமாக தெரிகிறது.ஜனங்க என்னவானாலும் அவர்களுக்கு அக்கறை இல்லை.என்பதையே தற்போதைய நடப்புகள் காட்டுகின்றன.

                                                                          வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் ,மக்களின் வரிப்பணத்தை சுரண்டி சேர்த்ததாகும்.ஆனால் அதனை திரும்பக்கொன்டுவர யாருக்கும் இங்கே அக்கறை இல்லை.௨ அலைக்கற்றை ஊழல் ,காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ,ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்,என்று ஒருபுறம் நாட்டின் பெருமை சீரழிக்கப்பட்டுள்ளது.ஊழலை ஒழிக்க கொண்டு வரப்படும் லோக்பால் மசோதா குறித்தும் சர்ச்சைகள் நீடிக்கிறது.
                                                                           இதை எல்லாம் பார்க்கும்போது நமது தலைவர்கள் திட்டமிட்டு மது விலக்கு கொள்கையை அமல்படுத்தாமல் தவிர்த்துவருகிரார்கள். என்று எண்ணத்தோன்றுகிறது.தீண்டாமை கொடுமையும் அவ்வாறேதான்.இத்தகைய சமூக கொடுமைகள் தொடர்ந்தால்தான் இந்தியா போன்ற மிகப்பெரிய தேசத்தில் மக்களுடைய மதியை மயக்கி பலவீனப்படுத்தவும் ,அவர்களை ஒன்று சேராமல் கலகமூட்டி உண்மையான பிரச்சினையில் அவர்களது கவனத்தை செலுத்தாமல் திசை திருப்பவும் முடியும்.என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் தெரிந்தே மது விலக்கு ,தீண்டாமை போன்ற சமூக கொடுமைகளை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.

                                                                           கங்கையும் ,காவிரியும் இணைப்பு பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.நதிநீர் பிரச்சினை குறித்து அக்கறை இல்லை.ஒட்டுமொத்த விவசாயிகள் வாழ்வாதார பிரச்சினையில் தெளிந்த பார்வை இல்லை.ஒருபுறம் வறுமை ஒழிப்பு திட்டங்கள் தொடர்கிறது.இந்தியாவை வல்லரசாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது.ஆனால் ரகசியமாக வறுமையும்,வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்க்கப்படுகிறது.திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பல கோடிகள் சுரண்டப்பட்டு கறுப்புப் பணமாக ஆட்சியாளர்களால் அபகரிக்கப்படுகிறது.இத்தகைய நடைமுறைகளுக்கு மதுவும்,தீண்டாமையும் முக்கிய காரணிகளாக ஆட்சியாளர்களால் வளர்க்கப்படுகிறது.

                                                                                      இதில் கொடுமை என்னவென்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மதுவிலக்கு  இல்லை .மகாத்மா காந்தி கனவை மறந்த  நமது தலைவர்கள் அரசு மதுபான கடைகளை திறந்து மக்களுக்கு  மதுவை வழங்கி வருகிறார்கள் . மகாத்மாவும் தவறாது மதுக்கடைகளுக்குள் தாரளமாக புழங்கி வருகிறார் ,கரன்சி வடிவத்தில்!.


Comments

  1. ஜனநாயக நாட்டில் மக்களைப்போலத்தான் ஆட்சியாளர்களும் இருப்பார்கள்.

    Like people like rulers!

    ReplyDelete
  2. ராபின், தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?