Posts

Showing posts from July, 2011

மதுக்கடைகளில் மகாத்மா

Image
தனது வாழ்நாளில் மகாத்மா காந்தி தீவிரமாக வலியுறுத்திய இரண்டு விஷயங்கள் மது விலக்கும்,தீண்டாமையும்தான்.இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது.ஆயினும் இன்றும் நாட்டில் இவ்விரண்டும் ஒழிக்கப்பட வில்லை.மகாத்மாவின் நோக்கம் நிறைவேறவில்லை.இத்தனைக்கும் காந்தி அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிதான் நாட்டை பெரும்பாலும் ஆட்சி செய்தது,செய்துகொண்டிருக்கிறது.ஆனால் காந்தியின் கனவை நிறைவேற்றத்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு மனமில்லை.காரணம் என்ன?

                                                                        சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நமது தலைவர்களுக்கு தேச நலனும் மக்கள் முன்னேற்றமும் முதன்மையானவையாக இருந்தது.ஆனால் இன்று உள்ள நமது தலைவர்களுக்கு பதவி சுகமும் அதனால் கிடைக்கும் சுய ஆதாயமும் தான் முக்கியமாக தெரிகிறது.ஜனங்க என்னவானாலும் அவர்களுக்கு அக்கறை இல்லை.என்பதையே தற்போதைய நடப்புகள் காட்டுகின்றன.
                                                                          வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் ,மக்களின் வரிப்பணத்தை சுரண்டி சேர்த்ததாகும்.ஆனால் அதனை திரும்பக்…