Posts

Showing posts from 2011

அதுவும் இதுவும் அல்லாதது, இது !

Image
வள்ளுவர் சொல்லுவார்..., " பற்றுக பற்றற்றார் பற்றினை" என்று!   எந்த பொருள் மீதும் பற்று இல்லாதவர்களிடம் பற்று  வைக்க சொல்கிறார்!  அப்படி எதன் மீதும் பற்று இல்லாதவன் உலகில் உண்டா? என்றால், இறைவனைத் தவிர யாரும் இல்லை என்றுதான் சொல்லுவோம்.  புத்தர்கூட, இந்த கருத்தை ஒட்டியே ஆசையே நமது துன்பங்களுக்கு எல்லாம் மூல காரணம் என்று  அவர் வழியில் உபதேசித்துள்ளார்!  சிலர் இன்று அத்தனைக்கும் ஆசைப்படு என்று உபதேசித்து  வருகிறார்கள்! அனைத்துக்கும்   ஆசைபட்டால்  திகார் ஜெயிலில்  மீதும் ஆசை கொள்ள வேண்டியிருக்கும்! எய்ட்ஸ்மீதும், எல்ல நோய்கள்மீதும் கூட ஆசைவரும்!      எனவே ,நமது நியாயமான விருப்பங்கள் ஆசைகள்என்ன?  என்பதில் நமக்கு ஒரு தெளிவான பார்வையும்,திடமான முடிவும் அவசியம் இருக்கவேண்டும்! அதனை நோக்கிய பார்வையும் பயணமும் நமது வாழ்க்கைப் பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும்!  சாமியாராக ஆகவேண்டுமா? உனது தேவைகளை குறைத்துக்கொள்! ஆசைகளை ஒதுக்கி,உன்னுள் அடங்கி ஆண்டவனைத் தியானி!  மாறாக, மற்றவர்களிடம் இருக்கும் அபரிமிதமான செல்வத்தையும் நீ வாங்கிவைத்துகொண்டு  சமுகத்தை சீரழிக்காதே!  …

நமக்கு முன்பே.. நாத்திகம் பேசிய சித்தர்கள்!

Image
நமது  தலைமுறைக்கு முன்பு  வாழ்ந்த  நமது  இரண்டு தலைமுறைகளை  பற்றி மட்டுமே  நாம் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறோம். அவர்களின் பேச்சும்,செயலும் சிந்தனையும், எழுத்துக்களும்,அவர்களின் போராட்டமும் வாழ்க்கையும் நமக்கு  அச்சுகளில், ஒலிஒளி நாடாக்களில் கிடைப்பதும்  அதிகமாக புழங்குவதும்  காரணம் என நினைக்கிறேன். தவிர, நமது முன்னோர்களின்  வாழ்க்கை வரலாறுகளை  அறிந்து கொள்ளும்  ஆர்வம்  நமக்கு இல்லாததும் காரணமாக இருக்கலாம்!


         நாம் அதிகம் அறிந்துள்ள நமக்கு முன் வாழ்ந்த இரண்டு தலைமுறைகளில்  நமது பண்பாடு, வாழ்க்கைமுறை, , நமது வழிபாடு முறை ஆகியவைகள் குறித்து புரட்சிகர கருத்துக்களை, பொதுவுடைமை தத்துவங்களை, தமிழரின் தனித்தன்மை மற்றும் பெருமைகளை சொன்னவர்கள் பலரையும்  நாம்   நாத்திகர்கள் என்று  பொதுபெயரில்  அழைத்து வந்துள்ளோம்!  அவற்றிற்கு காரணம்  இன்றைய நமது  இறைவழிபாடு  மற்றும்  சம்பிரதாய சடங்குகளில்  நமக்கு உள்ள  மோகம்தான்!  இன்று நாம்  பூசை,புனஸ்காரங்கள், சம்பிராய  சடங்குகள்   என்று ஏற்றுக்கொண்டு, போற்றிவரும்  அனைத்துமே ஆரிய ஆதிக்கத்தினால் வந்தவைகள்தாம்!  அவர்களால்  திணிக்கப…

ராகுல் காந்தியின் அரசியல் காதல்!

Image
ராகுல் காந்தி  வயசுக்கு  வந்துவிட்டார்.! அதுதாங்க, பக்குவம் மிக்க  அரசியல் தலைவராகி  விட்டார்  என்று திக் விஜய சிங் முதல் பிரதமர் மன்மோகன் சிங் வரை  சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்!  அடுத்த காங்கிரசின் தலைமைப் பொறுப்புக்கு மட்டுமின்றி இந்தியாவின் ஆட்சி தலைமைப் பொறுப்புக்கும் அவரை கொண்டுவரும் எண்ணத்துடனும்  காங்கிரஸ் கட்சி இருப்பது  தெரிகிறது!          ராகுல்ஜியும்  தனது தனித் தன்மையை, திறமையை,ஆளுமையை  கட்டுகிறேன் பேர்வழி என்று ஆங்கில ஊடகங்களுடன் உத்திரபிரதேச மாநிலத்திற்கு அடிக்கடி செல்கிறார்! சென்று எதாவது  ஏழை அல்லது விவசாயி வீட்டு ரொட்டியை  சாப்பிட்டும், குழந்தைகளை கொஞ்சியும், கட்டிலில் படுத்தும்  ஏழைகளின் தோழனாக காட்டிக்கொண்டு வருகிறார்!  போதாக்குறைக்கு, உத்திர பிரதேசத்து மக்களை  ஆளும் கட்சியான  பகுஜன் சமாஜ் கட்சியும், மாயாவதியும் பிச்சைக்காரர்களாக  ஆக்கிவிட்டதாக  குற்றம் சாட்டுகிறார்! பத்திரிகைகள்  தவறாமல் படத்துடன் செய்தி வெளியிட்டு  விளம்பரப் படுத்தி  வருகின்றன!         ராகுல் காந்திக்கு ஏழைகளின் பேரில் காதலும் கரிசனமும் வருவதற்கு காரணம்  உத்திர பிரதேசத்…

காந்தி,இந்திராவை சுட்டவர்களும் இந்தியாவை சுடுபவர்களும்!

Image
சுதந்திரம் பெறும்வரை  மகாத்மா காந்தியின் உயிருக்கு  இந்தியர்களால் மட்டுமின்றி, ஆங்கிலேயர்களாலும் ஆபத்து நேரிடவில்லை! சுதந்திரம்  அடைந்து ஆறு மாதங்களில் காந்தி, இந்துமத வெறியன் நாதுராம்  கோட்சேவால் சுட்டு சொல்லப் பட்டார்!      ஆர்.ஆர்.எஸ்.தொடர்பும்,  வீர் சாவர்கர் பின்னணியுடனும்  செயல்பட்ட  நாதுராம் கோட்சே என்பவன் மகாத்மா காந்தியை சுடும்போது, தனது கையில்  "இஸ்மாயில் "என்று  முஸ்லிம் பெயரை பச்சை குத்தி இருந்தான்.!    முஸ்லிம் ஒருவனால் காந்தி சுடப்பட்டு,  இறந்ததாக   கருதப்பட வேண்டும்..,!   இந்துக்களுக்கும்   முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் வரவேண்டும், ஒருவருக்கொருவர், வெட்டிக்கொண்டு  சாக வேண்டும் !!  என்ற  படுபயங்கரத் திட்டமுடன்             காந்தி படுகொலை சம்பவம் நடந்தது!       காந்தியை  படுகொலையை  செய்தவர்களுக்கு,    பாகிஸ்தான்  தனி நாடக  பிரிந்து போனதும்,  பாகிஸ்தான்   ஒரு முஸ்லிம் நாடு  என்றும்  மதசார்புள்ள நாடு என்றும்  பிரகடனப் படுத்திக் கொண்டதுபோல, " இந்தியா ஒருஇந்துநாடு" என்று அறிவிக்காமல்  போன வருத்தமும்  இருந்தது! காந்தி உயிரோடு  இருக்கும்வரை அது நட…

விவேக சிந்தாமணியும் அவிவேக சிந்தாமணியும் தெரியுமா?

Image
மனிதன் எப்படி வாழவேண்டும் என அறிவுரைகளை, வாழ்வியலை சொல்லும் கவிதைநூல் ஒன்று உள்ளது! விவேக சிந்தாமணி என்று பெயர்! அந்த பழமையான நூலில் பல்வேறு கருத்துகள் உள்ளது!

              உதாரணத்துக்கு ஒன்று கீழே:

                   ஆபத்துக்கு உதவாத பிள்ளை
                            அரும்பசிக்கு உதவாத அன்னம்;
                    தாபத்தை போக்கா தண்ணீர்,
                             தரித்திரம் அறியா பெண்டீர்;
                   கோபத்தை அடக்கா வேந்தன்,
                                குருமொழி கொள்ளா   சீடன்;
                    பாவத்தை போக்கா தீர்த்தம்,
   பயனில்லை ஏழும்தானே!
                      இதைபோலவே, வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ளாமல், மனம்போன போக்கில் வாழந்து... வருத்தப்படும் கவிஞர் ஒருவர் எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று அவிவேக சிந்தாமணி என்ற தலைப்பில் கவிதைகளை எழுதிஉள்ளார்!
  பொதுவாக யாரையாவது  முன்வைத்துதான் அறிவுரையோ,உபதேசமோ செய்ய இயலும்!  அவ்வாறு யாருக்கு உபதேசிப்பது என்பது கவிஞருக்கு தெரியவில்லை போலும்!  அதனால் என்ன?  இருக…

நாயால் தமிழுக்கு கிடைத்த நல்ல கவிதை!

Image
தமிழ் கூறும் நல்லுலகத்தில் அவனுக்கு என்று ஒரு இடம் உள்ளது! கவிதைகள்,சினிமா பாடல்கள்,நாவல்கள் என்று எழுதி குவித்த அந்த குழந்தை மனம் கொண்ட கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் எனலாம்!  அன்பும் கருணையும் மிகுந்த அவனை ஏமாற்றியவர்கள் ஏராளம்.!  மனிதர்களிடம் அவன்  எதிர்பார்த்த  நட்பும்,அன்பும்,நன்றியும்   கிடைகாத காரணத்தாலோ,   என்னவோ, அவனொரு நாயை வளர்த்து வந்தான்!.  அந்த நாயும்  அவன்மீது  அலாதி பிரியத்துடன் பழகிவந்தது! " சீசர்" என்று பெயரிட்டு அழைத்து வந்த, அவனது  நாய்  ஒருநாள் இறந்துவிட்டது. !  அதன் இறப்பையும் பிரிவையும்  அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை!

            நாயின் பிரிவால் துடித்த அவனுக்கு அந்த நாயைப் பற்றி எழுதத் தோன்றியது!     தமிழ்மகளின் ஆசியும் அருளும் பெற்ற  அவன்... அதையும் ஒரு கவிதையாக வடித்து, இறந்த நாய்க்கு  கண்ணீர் அஞ்சலியாக படைத்தான்!   கொஞ்சி விளையாடிய  அவனது நாயால்   நல்ல கவிதை ஒன்றும் தமிழுக்கு கிடைத்தது!   கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிதை பாடும் என்பது உண்மையா? என்று தெரியாது! ஆனால்,   தமிழ் கவியின் வீட்டில் வளர்ந்த   நாயாலும் …

ஜெயலலிதாவின் அதிரடியும்.., சசிகலா{கும்பலின்} எதிர்காலமும்.!

Image
போயஸ் தோட்டத்தில் இருந்தும்   கட்சியில் இருந்தும்  ஜெயலிதாவின் இனிய தோழி, ஜெயலலிதாவால் வெளியேற்றப் பட்டுள்ளார்!     அவரது உறவினர்களும்  படை பரிவாரங்களும் கூட அவருடன் வெளியேற்றப் பட்டுள்ளனர்!  அ,தி.மு. க-வில் மட்டுமின்றி அரசியலை கவனித்து வருபவர்களும்   ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையை, சசியின் வெளியேற்றத்தை வரவேற்று உள்ளனர்!   முன்பு ஒருமுறையும் ஜெவுக்கும்,சசிக்கும் பிரச்னை ஏற்பட்டு, சசி வெளியேற்றப் பட்டு  இருக்கிறார்! ஆனால் விரைவிலேயே    சமரசமாகி,    மீண்டும் போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து, முன்பைவிட செல்வாக்குடனும், அதிக சாமர்த்தியத்துடனும்  அவரால் {சசியால்}  செயல்பட முடிந்தது!    இப்போதும் அவரால் மீண்டும் ஜெயாவிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது காரணம்  ஆட்சி,அதிகாரம்  செல்வாக்கு ஆகியவைகளை அனுபவித்த சசிகலாவும்  அவரது படை, பரிவாரங்களும்  அவைகளை இழந்து விட்டு புதிய சூழலில்  தொடர்ந்து வாழ்வது இயலாத காரியம் என்பதுதான்!         மதுரை தினகரன்  பத்திரிக்கை அலுவலகத்தை கொளுத்தி, மூன்று பேர்கள் செத்தபிறகும், அறிவாலயத்தில் இருந்து சன் டி.வ…

வைகை அணை பிரச்சனைக்கு வாருங்கள்!

Image
நம்ம மாப்பிள்ளைக்கு மதுரையிலே  பொண்ணு அமைஞ்சது!  மாப்பிள்ளே, சுத்த தங்கம்.  இந்த காலத்து விடலைகளைப் போல இல்லை! கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல், பெண்வாசனை, தாம்பத்தியம் என்று கட்டுக் கோப்பாக இருந்தவரு...  அப்படிப்பட்ட  மாப்பிளைக்கு கல்யாணம் முடிந்ததும் காதல் பொங்குது! புது பொண்டாடியிடம் தன்னோட ஆளுமையை காட்டவும், அன்பை கொட்டவும், ஆசையை தீர்த்துக்கவும் ஆளாய் பறக்குறார்; தவியாய் தவிக்கிறார்!  போதாத குறைக்கு கல்யாணம் முடிந்ததும் மறுவீடு அழைப்பு, விருந்து உபசாரம் என்று மாப்பிளையை  மனப்பொண்ணு பொறந்த வீடு இருக்கும் மதுரைக்கு கூட்டிட்டு போயிடறாங்க. அங்கே போனாலும் பொண்ணோட அன்பா பழக முடியலை! பொண்ணோட சிநேகிதிங்க, உறவு காரங்க,  அக்கம் பக்கம்  தெரிஞ்சவங்க  என எல்லோரும் வந்து பேசியும்,கேலி கிண்டலும் செய்தும்  சந்தோசமா இருகிறாங்க..
      நம்ம மாப்பிளையிடம் வேறு  குசலம் விசாரிக்கிறதும், உத்தியோகம், வருமானம் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கறதும் என்று நடக்குது! இடையிடையே,  பலகாரம் சாப்பிடுங்க..., பழம் சாப்பிடுங்க.., காலை சிற்றுண்டி ஆச்சா? சாப்டீங்களா? என்று விசாரிப்பு வேறு நடக்கிறத…

இந்திய அரசின் பரமபத விளையாட்டும் ஆடுபுலி ஆட்டமும்!

Image
மக்களது பிரச்சனையில் கவனம் செலுத்துவது  இல்லை  என்று  தீர்மானித்து  கொண்டு  இந்திய அரசு  செயல்படுகிறதோ ? என்ற சந்தேகம்  எனக்கு வருகிறது!
       பணவீக்கம் அதிகரித்து, ஏழை, நடுத்தர மக்கள்  முழி பிதுங்கி  வருகிறார்கள்! பண வீக்கத்தைக் குறைக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க  அக்கறை  காட்டியதாக தெரியவில்லை!  உர விலை  கடந்த 6 மாதத்தில் தாறுமாறாக  இரண்டு,மூன்று மடங்கு உயர்ந்து,   விவசாயிகள் தவிக்கிறார்கள். அதைபற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது!  நெசவாளர் பிரச்னை நீடிக்கிறது, அரசு மௌனம் காக்கிறது!  தெலுங்கானா பற்றி எரிகிறது, தேமே என்று பார்த்து கொண்டு இருக்கிறது. இப்போது, முல்லை பெரியார் அணையை உடைப்பதா? புதிதாக அணையை கட்டுவதா? என்று தமிழர்களும்,  அணையால் ஆபத்து.. அதனால் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று கேரளர்களும்  வரிந்து கட்டி  சண்டை இடுகிறார்கள்! ஆளாளுக்கு மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள், இப்போதும் பிடித்துவைத்த பிள்ளையார் கணக்காக மன்மோகன் சிங், காட்சி தருகிறார்!        இந்த பிரச்சனைகள் மட்டுமல்ல, ஆதிவாசிகளின் ஜீவாதார பிரச்னை, மாவோயிஸ்ட்கள் பிரச்னை,  சுரங்க கொள்…

புதுவித சுகம் தரும் கவிஞன் நான், ." நெஞ்சில் நிழலாடும் கவிதை"

Image
"எங்கும் பிலா  கணங்கள்,
                   எப்பாலும் பேய் கணங்கள்:
            தங்குமிடம் அத்தனையும்
                சரம்சரமாய் முட்கதிர்கள்!"  
                                  -என்பது கண்ணதாசனின்  கவிதை வரிகள்!

         பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, போதாக்குறைக்கு மின்சார தட்டுப்பாடு! தமிழகத்தில் மக்கள் படும் இன்னல்களுக்கு நானும் விதிவிலக்கு இல்லை! இவைகளைத் தவிர பள்ளிப் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம், மருத்துவ மனைகளுக்கு கொட்டியழுவது, மருந்து மாத்திரை செலவு, மளிகை செலவு, வாங்கிய சிறுகடனுக்கு வட்டியாக பெரும் தொகையைத் திரட்டும் பொறுப்பு, கூடவே மனைவி,மககளுக்கு துணிமணி வாங்கவேண்டுமே? எப்படி என்ற சிந்தனை! அடிக்கடி வரும் பண்டிகை செலவு, சும்மா உங்களைப் பார்த்துட்டு போகலாமே என்று வந்தோம் என,அழையா விருந்தாளிகளின் செலவு!....என்று ஒரு சம்சாரி படும் பாட்டை நினைத்தால், காவிகட்டிக் கொண்டு போய்விடலாம் என்று தோன்றும்!  காவி கட்டிக் கொண்டு போனாலும், நம்மால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை!  நித்தியானந்தா, பிரேமானந்தா போன்றவர்…

தேசபக்தி, தீவிரவாதமான சுவாரசியமான கதை... இது!

இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள், உயிர் நீத்தோர், சிறையில் சித்திரவதைப் பட்டோர், ஆங்கிலேயரால் மரண தண்டனை அடைந்தவர்கள்  பலர். அவர்களில் சிலரே காங்கிரசுகாரர்கள்!  வெகு சிலரே  இன்று,  தேச  பக்தியை    ஏகபோகமாக,  தங்களது உரிமையாக கொண்டாடிவரும்  இந்துத்துவ வாதிகளாவர்!  இன்று தேசபக்தியை காட்டும் இவர்கள்... அன்று.... ஆங்கிலேயருக்கு எதிராக நாம் போராடினால் ஆபத்து என்று நினைத்து,  இந்தியமக்களை சமாதானப் படுத்தவும், அவர்களுக்கு சிற்சிறு சலுகைகளைக்  கொடுக்கவும், ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட காங்கிரசு கட்சியில் கூட தங்களை இணைத்துக் கொண்டு போராட முன்வரவில்லை. !

       இன்றைய இந்துத்துவ  வாதிகளும், அவர்களது தலைவர்களும்  இந்திய தேசத்தின் விடுதலையை விட, அன்று பெரிதாக நினைத்தது என்ன தெரியுமா?  ஆங்கில அரசின் அடிவருடிகளாய் இருந்து,   அவர்களிடம்  ஊழியம் பார்த்து, ஊதியம் பெற்று, உண்டி வளர்ப்பதைதான்! வங்காளத்திலே பஞ்சம் ஏற்ப்பட்டு, மக்கள் மடிந்தபோது... இவர்கள் ஆங்கில அரசாங்கத்துக்கு, நம்மை அடிமைப் படுத்தி, அடக்கி ஆளும் ஆங்கிலேய ராணுவத்துக்கு உணவுப் பொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் …

"இந்துத்வா " என்பது மதமா, ஆதிக்கத்தின் ஆணிவேரா?

Image
இந்து மதத்தை  கண்மூடித்தனமாக பின்பற்றும்,ஆதரிக்கும் கொள்கைகளை தமிழர்களாகிய  நம்மில் பலரும் ஏற்றுக்கொண்டு உள்ளது வேதனை அளிக்கிறது! இந்துத்துவம் என்பது, இந்துமதக் கொள்கைதான்   என்ற  குறுகிய கண்ணோட்டம் தவறானது. அது, ஆதிக்கத்தின் மறுவடிவம்,பிரதி பிம்பம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் சமத்துவத்திற்கும்  ,சமஉரிமைக்கும், சமநீதிக்கும்,   ஏன்? ஓட்டுமொத்த மனித நியதிகளுக்கு எதிரான ஒரு கொள்கை என்பதை அவர்கள்  புரிந்து கொள்ளவில்லை  என்றும் நினைக்கத் தோன்றுகிறது!            இன்று,    இந்திய நாட்டில் நிகழ்ந்துவரும் பல்வேறு குளறுபடிகளுக்கும், உரிமை மறுப்பு போராட்டங்களுக்கும் பின்னணியில் இருந்து வருவது, இந்த இந்துத்துவம் என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆதிக்க வெறிதான் காரணம்!  காஷ்மீர் பிரச்னை,தெலுங்கான பிரச்னை,கூடங்குளம் பிரச்னை,     ஈழத்து தமிழர்களின் பிரச்னை,     மேற்கு வங்க மக்களின் போராட்டம்,ஆதிவாசிகளின் வாழ்வாதாரப் போராட்டம், முல்லை பெரியாறு பிரச்னை,  என்று..... இந்தியாவில் நிலவியும், நீடித்தும் வருகிற,      எந்த போராட்டமானாலும், அதற்கு பின்னணியில் இ…

பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா?

Image
மகாபாரத்தில் அருசுனனுக்கு கண்ணன் கூறுவதை கீதோபதேசம் என்றும் அதையே,   " பகவத்கீதை " என்றும்  சொல்கிறார்கள்!     இந்த பகவத் கீதையைத்தான்   இந்துக்களின் புனித நூலாக,  இந்து மதத்தில் சிறிய அளவில உள்ள பிராமிணர்கள் வலிந்து கூறிவருகிறார்கள்!    எத்தனையோ புராணங்கள், திருவிளையாடல்கள், பக்தி நூல்கள், பஜனைப் பாடல்கள், பாமாலைகள், இருக்க,        அவைகளுக்கு இல்லாத சிறப்பும் பெருமையும்  பகவத் கீதைக்கு இருப்பதால் தான் புனித நூலாக சொல்லுகிறார்களா? என்ற கேள்வி  என் மனதில் அவவப்போது,   எழுவதுண்டு!
      இந்துமதத்தில் ' சைவம்- வைணவம் 'என்ற இரண்டு பிரிவுகள் உள்ளநிலையில், வைணவ நூலான பகவத் கீதையை எப்படி சைவர்கள்  புனித நூலாக ஏற்றுக்கொண்டார்கள்?  இத்தனைக்கும் வைணவர்களை விட இந்துமதத்தில் சைவர்களே அதிகம் இருகிறார்கள் என்கிற நிலையில்,  சைவர்களும் பகவத் கீதையை புனித நூலாக  ஏற்றுகொண்டார்கள்  என்பது  உண்மையாக  இருக்குமானால்,  சைவர்களின் எந்த நூலுக்கும் புனித நூலாகும் தகுதி இல்லை என்பதை  சைவர்கள்  ஒப்புக் கொண்டுள்ளார்கள்  என்றுதானே ஆகிறது?  போகட்டும், அது சைவர்களின் கவலை!
          ப…

அண்ணாவின் கேள்வியும் கலைஞரின் துரோகமும்!

ஒரு முறை கவியரசர் கண்ணதாசனிடம் கவிதைகளை யார் நன்றாக எழுதுகிறார்கள்? என்று கேட்டதற்கு,{கேட்டது நானில்லை} காதலிப்பவர்களும்,காதலில் தோல்வி அடைந்தவர்களும்,கம்யுனிஸ்டுகளும் நன்றாக எழுதுகிறார்கள்! என்று சொன்னாராம்.
     நான் காதலிக்கிறேனா? என்று சொல்ல தெரியவில்லை! காதலில்  தோல்வி அடைதவனா என்றும் சொல்ல முடியவில்லை! பிறகு கம்யுனிஸ்டா என்று கேட்டாலும், இல்லை! -  என்பதுதான் எனது பதிலாகும்.  ஆனால், நானும் கவிதைகளை எப்போதாவது எழுதுவது உண்டு!   கல்லூரிக்கால,  சகவாச தோஷம்.! !  எப்போது அதிக கோபமும் வெறுப்பும் எனது உணர்சிகளை ஆக்கிரமிப்பு செய்கிறதோ, அப்போதெல்லாம் கவிதை எழுதத் தோன்றும்!  சிலருக்கு மகிழ்ச்சியான,தனிமையான தருணங்களில்  கவிதை வரும்  என்று சொல்ல கேட்டிருகிறேன். இப்போது எதற்கிந்த பீடிகை அல்லது முன் அறிவிப்பு? என சிலர்  நினைக்கலாம். விசயமாகத்தான் இதனை சொல்லி இருக்கிறேன்.
     ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக,  செத்து மடிந்த தருணம் அது..., புலிகளின் இறுதிப்போர் உக்கிரம்  அடைந்து, சில மைல பரப்பில் சுருங்கி,சுருண்டு கிடந்த சமயத்தில், தாயக தமிழர்களின் ஒருங்கிணைந்த ஆதரவும்,தமிழக அரச…