Posts

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் நான்...

நரேந்திர மோடி குறித்தும், அவர் வெகுஜன மக்களின்  நலனுக்கு எதிராரனவர்,கார்பரேட்டுக்கள்,பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்கானவர், உழைக்கும் மக்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கு அவரது ஆட்சியால் எந்த நன்மையையும் ஏற்படாது, மாறாக அவர்கள் மிகவும் பதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே,மோடியை ஆட்சி அமைக்கும் முட்டாள்தனத்தைச் செய்யக்கூடாது என பல புள்ளி விவரங்களுடன், ஆதாரங்களுடன், காரிய காரணங்களுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சில பதிவுகளை இட்டு இருந்தேன், ஊடக மேதாவிகள்,கார்பரேட்டு ஆதரவு அறிவு ஜீவிகள் ஆகா.. ஓஹோ..நரேந்திர மோடிதான் சரியான ஆள்... அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால்  இந்தியா வேகமாக முன்னேறிவிடும், பாலாரும் தேனாறும் பாயும், 100-நாளில் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15,00,000-லட்சம் ரூபாயை போடுவார், என்று ஓவராக அலப்பரை செய்தன. இன்று அவர்களின் எண்ணங்களில் மாறுதல் உள்ளதா? இன்னும் மோடியை ஆதரிகிறார்களா? நிலத்தை விவசாயிகளிடம் இருந்து அபகரிக்கும் நிலா ஆர்ஜித சட்டத்தை அமல்படுத்த ஏன்? மோடி அரசு இவ்வளவு மெனக் கெடுகிறது? மோடி ஆட்சியில் வி…

காமராசரும்,கல்விக் கொள்ளையர்களும்..

இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமை முதன்மையானது . இந்த அடிப்படை கல்வி உரிமையைப் பற்றி இப்போதுள்ள அரசுகள் கவலைபடுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

        காமராசர் முதல்வராக இருந்தபோது,அரசின் மொத்த வருமானத்தில் கல்விக்காக 30% வருவாயை செலவிட்டார். அனால் 50 ஆண்டுகள் கழிந்து நடக்கும் இன்றைய அரசு வெறும் 14% மட்டுமே செலவிடுகிறது. 

      இலவச,அடுப்பு,கேஸ்,மிக்சி,கிரைண்டர்,இலவச மடிக்கணணி,இலவச சைக்கிள்,  ஆடு, மாடு ஆகியவைகளை கொடுப்பதால் மட்டுமே ஒரு சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாறிவிட முடியாது  என்பதை ஆட்சியாளர்களும், அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.  அனைவருக்கும் தரமான கல்வியை, தாய் மொழிக் கல்வியை கொடுப்பதே  ஒரு சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்றும் என்ற உண்மையைத்  தெரிந்துகொண்டு, அதனை செயல்படுத்த முன்வர வேண்டும் !

      இன்றைய கல்வியாளர்கள் யாரென்று பார்ப்போமானால, கள்ளச் சாராயம் விட்ரவர்கள் கல்லூரி அதிபரகளாக இருப்பதும்,முன்னாள் அரசியல்வாதிகள் கல்வித்  தந்தைகளாக காட்சி அளிப்பதும்,சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்கள் கல்வி வள்ளல்களாக போற்றபடுவத…

எரியும் கொள்ளிக்கு பயந்து எண்ணைசட்டியில் விழுந்தது போல..

Image
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், மக்களுக்கு எதிரான் செயல்கள்,விலைவாசி பிரசனை ஆகியவைகளால் அதிருப்பதிஅடைந்த பொதுமக்கள்  பி.ஜே.பி-க்கு ஆதரவளித்து, அறுதிப் பெரும் பான்மையுடன்  அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி இருகிறார்கள்.

         பி.ஜெபி-அரசு தட்டிகேட்க ஆளில்லை என்ற மிதப்பில் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல்,  தான் தோன்றிதனமாகவும், தன்னிச்சையாகவும் ,செயல்பட ஆரம்பித்து உள்ளதை  அதன் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன.

        எரிவாயு சிலிண்டர் விலையை  ரூ 250 வரை உயர்த்த போவதாகவும், மண்ணெண்ணெய்,பெட்ரோல்,டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்களே தங்கள் விருப்பபடி உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கவும் ஆலோசித்து வருகிறது

        போதா குறைக்கு மக்களுக்கு அளித்துவரும் மானியங்களை குறைத்தும், வழங்காமல் மறுக்கவும் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன.

      இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும், தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும், இந்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. உற்பத்தி பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரி சலுகை, மின்சாரம், குறைந்த வட்டியில் கடன், குற…

பிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்?

Image
இந்தியாவை காப்பற்ற வந்தவர்,அவதாரம்,வளர்ச்சியின் நாயகன் என்று தேர்தலுக்கு முன்பு தூக்கி கொண்டாடிய இந்தியமக்கள் இரயில் கட்டண உயர்வு,சர்க்கரை விலை உயர்வு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சரக்கு கட்டணங்கள் உயவு,தொடர்ச்சியாக காய்கறிகள்,அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் ஆகிய பிரச்னைகளில் இப்போது  சிக்கித் தவிக்கிறார்கள்.!

           தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மட்டும் இந்த பிரசனை இல்லை. வாக்களித்தவர்களுக்கும்,மோடியை வானளாவப் புகழ்ந்தவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது பிரசனை ஏற்பட்டு இருக்கிறது.

          தேர்தலுக்கு முன்பு  எதையெல்லாம் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடாக,நிர்வாக சீர்கேடாக சொல்லி,பி.ஜே.பி  கட்சி பிரசாரம் செய்ததோ அத்தனை பிரச்னைகளும் மோடியின் நிர்வாக மேம்பாட்டால் அதிகரித்து உள்ளது.

         வெகுஜன மக்களிடம் அரசும்,காங்கிரசின் இமேஜும் சரிந்துவிடும் என்று நினைத்தும்,இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி  இருக்குமே என்ற தயக்கதாலும் காங்கிரஸ் அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை, சீர்திருத்தங்களை மெதுவாக செய்துவந்தது.

         ஆனால்,  மோடியின் அர…

தேர்தலில் இருக்கு நோட்டும் நோட்டாவும்..!

நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயத்தின் மீது விரக்தியும், நமது வேட்பாளர்கள் மீது உள்ள அதிருப்தியையும் ஆளும் வர்க்கம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் அடையாளமாகவே வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள பதினாறு பட்டன் களில் ஒன்றாக நோட்டா( NOT ABOVE THE OPTION ) இடம் பெற்று இருக்கிறது.

          ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை, வாக்கு அளிக்க விருப்பமில்லாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.!

        நோட்டாவுக்கு செல்லும் வாக்குகள்  செல்லாதவையாக கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

        மேலும் ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவானால் அந்த தொகுதியல் மறுதேர்தல் நடத்தபடுவதும், தற்போது வேட்பாளர்களாக உள்ளவர்களை மறுதேர்தல் நடைபெறும்போது தகுதி நீக்கமும் செய்வதுதான் சிறந்த ஜனநாயகமாக இருக்கமுடியும் !

            அத்தகைய நடைமுறையை கடைபிடிக்க  முன்வராமல் தேர்தல் ஆணையம் நோட்டாவுக்கு  அடுத்து அதிக வாக்குகள் பெற்றவரை வெற்றிபெற்றவராக அறிவிக்கும் முடிவை எடுத்து உள்ளது,இது கண்டிக்க வேண்டிய…

மோடி எத்தனை முகமூடியடி!

ராமன் எத்தனை ராமனடி என்று ஒரு பாடல் உள்ளதைபோல இன்று மோடி எத்தனை முகமூடியடி என்று பாடவேண்டும் போலிருக்கு! 

           அத்தனை வேசங்கள் போட்டு இந்தியாவில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் நரேந்திர மோடி இதுவரை தான் கல்யானமகதவர் என்று போட்டுவந்த வேசத்தை முதல்முதலாக கலைத்துவிட்டு, தனக்கு திருமணம் ஆனது, தனது மனைவி ஒரு பள்ளி ஆசிரியை,ஓய்வு பெற்றுவிட்டார். தனியாக வாழ்ந்துவருகிறார்.அவரது பெயர் ஜசோதாபென் என்று தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளார்.! 

இதுவரை தனக்கு திருமணம் நடந்ததை மறைத்ததாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

         தான் ஒரு பெண்ணுக்கு தாலி காட்டியதையே,தனக்கு திருமணம் நடந்ததையே,தனது மனைவி உயிருடன் இருப்பதையே, மறைத்த மோடி -இதுவரை எவை எதை மறைத்து இருப்பார் என்று இப்போது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது !

        பிரதமர் பதவிக்காக தன் மனைவியை முதன்முதலாக அறிமுகபடுத்திய மோடி எவ்வளவவு பெரிய மோசடிகாரராக, போய்யானாக இருக்க வேண்டும் தன் மனைவியையே மறைத்த மோடி, நாளைக்கு நம் நாட்டை எ…

மீத்தேன் வாய்வுக்கு பின்னுள்ள பயங்கரம்!

நூறுபேர் வாழ்வதற்கு, நாலு பேர் உயிர் விட்டால் தப்பிப்பில்லை என்று நியாயம் பேசுவார்கள்,ஆனால், மீத்தேன் திட்டம் இது போன்றதல்ல.. நான்கு பேர் வாழ்வதற்க்கு நூறுப் பேரை கொல்லும் திட்டம்.! .

        சாதாரணமாவே இது மாதிரியான திட்டங்களால் சுற்று சூழல் மாசுபடும், மக்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும், அதைவிட அவை மனித உயிர்களுக்கே உலை வைக்கும்!   இது மாதிரியான திட்டங்களால் எதிர் வினைகள் மிக மோசமானதாக இருக்கும்.!

           "மீத்தேன் வாயு திட்டம்"  என்ற பெயரில் கிட்டதட்ட 50 லட்சம் தமிழர்களை   விவசாயிகளை  காவிரி படுகையிலிருந்து துரத்தியடித்து விட்டு தெற்கே ஓர் தார் பாலைவனத்தை உருவாக்க முயல்கிறது மத்திய அரசு!

           நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பூமிக்கு கீழே ஏராளமான  மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உறபத்தி செய்யப் போவதாகவும் மத்திய அரசு இதற்கான ஒப்பந்தத்தை “ கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட்” என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகளுக்கு வழங்கி இருக்கிறது.   பாகூரிலிருந்து ராஜ மன்னார்குடி வரை. சுமார் 1,64,819 ஏக்கர் ந…